வயது முதிர்ந்த கோலத்தில் விசாலாட்சி.. சிறிய லிங்கமாக காசி விஸ்வநாதர்.. வெற்றி தரும் சிவபெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வயது முதிர்ந்த கோலத்தில் விசாலாட்சி.. சிறிய லிங்கமாக காசி விஸ்வநாதர்.. வெற்றி தரும் சிவபெருமான்!

வயது முதிர்ந்த கோலத்தில் விசாலாட்சி.. சிறிய லிங்கமாக காசி விஸ்வநாதர்.. வெற்றி தரும் சிவபெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2025 06:00 AM IST

Kasi viswanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த கோயிலின் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் காசி விஸ்வநாதர் எனவும் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

வயது முதிர்ந்த கோலத்தில் விசாலாட்சி.. சிறிய லிங்கமாக காசி விஸ்வநாதர்.. வெற்றி தரும் சிவபெருமான்!
வயது முதிர்ந்த கோலத்தில் விசாலாட்சி.. சிறிய லிங்கமாக காசி விஸ்வநாதர்.. வெற்றி தரும் சிவபெருமான்!

குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் சிவபெருமானுக்கு இருந்து வருகின்றன. அதேபோல இந்தியாவில் தான் சிவபெருமானுக்கு கோயில்கள் மிகவும் அதிகம்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்கள் எழுப்பப்பட்டன. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கலைநயம் மிக்க பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்களின் கட்டுமான பணிகளை பார்க்கும் பொழுது ஆராய்ச்சியாளர்களே வியந்து நிற்கின்றனர்.

இந்த கோயிலை கட்டுவது எப்படி சாத்தியம் என பலரும் வியப்பில் நிற்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல மன்னர்கள் கட்டி வைத்து சென்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை வரலாற்றுச் சரித்திரம் குறியீடாக திகழ்ந்து வருகிறது. அதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் பல வரலாறுகளை சுமந்து இங்கு வாழ்ந்த வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த கோயிலின் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் காசி விஸ்வநாதர் எனவும் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் காணப்படும் காசி விஸ்வநாதர் மிகவும் உயரம் குறைந்த நிலையில் காணப்படுகிறார். அவருக்கு எதிரே இருக்கக்கூடிய நந்தி சிலை மிகவும் பெரிய நிலையில் உயிர்ப்போடு காணப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தமான கிணற்று நீர் இன்றுவரை வற்றாமல் தனி சுவையோடு காணப்படுகிறது.

தாங்கள் செல்லும் ஊரில் வெற்றி பெறுவதற்காக மராட்டியம் மன்னன் ஆச திகழ்ந்து வந்த மாவீரன் சிவாஜி இந்த கோயிலில் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு சென்றார் என்று கூறப்படுகிறது. பங்குனி மாத திருவிழாவின் பொழுது உங்க வீட்டிற்கு கூடிய காசி விசுவநாதர் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர்கள் படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விசாலாட்சி அம்மன் பாம்படம் அணிந்து காணப்படுகிறார். அதாவது வயது முதிர்ந்த நிலையில் அம்பாள் காணப்படுகிறார். திருப்பூர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய வயது முதிர்ந்த பெண்கள் தண்டட்டி அமைவது வழக்கம். பாம்படம் என்று அழைக்கப்படும் தண்டட்டியை மூதாட்டிகள் அணிந்து இருப்பார்கள்.

அதிக எடை கொண்ட தங்க தகட்டால் அது செய்யப்பட்ட ஆபரணமாகும். இதை அணிவதற்காக காதில் பெரிய துவாரம் போடப்பட்டு வெகு காலத்திற்கு முன்பு அதனை பெண்கள் அணிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். காலம் செல்ல செல்ல காது தொங்கிய நிலையில் அந்த பாம்படம் காணப்படும்.

இது கிராமப்புறங்களில் வயது முதிர்ந்த பெண்கள் அணிவதை வழக்கமாக வைத்து வந்துள்ளது. அந்தக் கோலத்தில் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பார்வதி தேவி பாம்படம் அணிந்து அருள் காட்சி தருகிறார்.

தல வரலாறு

மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். தற்போது இருக்கக்கூடிய இரும்பாடி பகுதியை அப்போது பாண்டிய மன்னர்கள் படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஒருமுறை ஆயுதங்களை தயாரிக்கும் பொழுது கவனக்குறைவாக இருந்த வீரர்களின் உடல் உறுப்புகள் சேதமடைந்தது.

இதனால் ஊருக்கு வீரர்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆயுதங்கள் தயாரிக்கும் பொழுது வீரர்களின் உடல் உறுப்புகள் இழப்பதை தவிர்ப்பதற்காகவும், போர் மற்றும் வேட்டையாடுதல் சூழ்நிலையின் போது தங்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வழிபாடு செய்வதற்காக காசியில் இருந்து லிங்கத்தை எடுத்து வந்து மன்னர் ஒருவர் பிரதிஷ்டை செய்துள்ளார். அதுதான் தற்போது நாம் காண்கின்ற இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஆகும்.

Whats_app_banner