அசையும் விளக்கில் விசாலாட்சி.. வாயு ரூபத்தில் காசி விஸ்வநாதர்.. வழிபட்ட பதஞ்சலி மகரிஷி
Kasi Viswanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காசி விஸ்வநாதர் ஜெனபம் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
Kasi Viswanathar: இந்தியா முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் கோயில் கொண்ட பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக தல புராணங்களில் கூறப்படுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற திருநாமத்தோடு குலதெய்வமாக நமது தமிழ்நாட்டில் சிவபெருமானை முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு என தங்களது வாழ்வை அர்ப்பணித்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
திரும்பவும் திசையெல்லாம் வானுயர்ந்த கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தி சென்றுள்ளனர். மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
ஒருபுறம் பாண்டிய மன்னர்கள் மதுரை மீனாட்சி திருக்கோயிலை பிரம்மாண்ட அளவில் கட்டி தங்களது பக்தியை வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். இதுபோல தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காசி விஸ்வநாதர் ஜெனபம் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய விசாலாட்சி தாயார் சிவபெருமானின் ஆவுடையார் மேல் தாமரை மலரில் ஸ்ரீ சக்கரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார். இந்த தாயார் வழிபட்டால் நமது வாழ்க்கையில் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
காளஹஸ்தியில் சிவபெருமான் வாயு உருவமாக காட்சி கொடுத்து வருகிறார். அங்கு இருப்பது போலவே இந்த கோயிலில் இருக்கக்கூடிய கருவறையில் உள்ள விளக்கு எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கின்றது. ராகு மற்றும் கேது இவர்களின் அதிபதியாக திகழ்ந்துவரும் பதஞ்சலி மகரிஷி வழிபட்ட கோயிலாக இது திகழ்ந்து வருகிறது.
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் வாயு ரூபமாக கருதப்படுகிறார். இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் காற்று போக முடியாத அளவிற்கு கட்டிட அமைப்பு இருக்கும். ஆனால் அவரின் கருவறையில் இருக்கக்கூடிய விளக்கு ஒளியானது எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே சிவபெருமான் வாயு ரூபமாக கருதப்படுகிறார்.
ராகு மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம். சர்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷ நிவர்த்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
தல வரலாறு
மதுரையை ஆண்டு வந்த சடையவர்ம விக்கிரம பாண்டியன் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. வாழ்வில் முக்தியை அள்ளித் தரக்கூடிய காசி விஸ்வநாதன் எப்போதும் வழிபட வேண்டும் என்பது இந்த பாண்டிய மன்னனின் ஆசையாக இருந்தது.
இருப்பினும் தினம்தோறும் காசிக்கு சென்று சிவபெருமானை வழிபட முடியாது என்கின்ற காரணத்தினால் பதஞ்சலி மகரிஷியின் யோக பீடத்தில் கோயில் ஒன்றைக் கட்டி அதில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை பிரதிஷ்டை செய்து மன்னன் வழிபட்டார். மன்னனுக்கு சிவபெருமான் முத்தி கொடுத்தார். விஸ்வநாதர் கிடந்த கோலத்தில் காட்சி கொடுத்து வருகிறார். சிறிய லிங்கம் கிடந்த கோலம் என்று அழைக்கப்படுகிறது.