Lord Siva Temple: நாகக்கன்னி மீது ஆசைப்பட்ட மன்னன்.. அருள் வழங்கிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகநாத சுவாமி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Siva Temple: நாகக்கன்னி மீது ஆசைப்பட்ட மன்னன்.. அருள் வழங்கிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகநாத சுவாமி!

Lord Siva Temple: நாகக்கன்னி மீது ஆசைப்பட்ட மன்னன்.. அருள் வழங்கிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகநாத சுவாமி!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 14, 2025 06:00 AM IST

Lord Siva Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சிவபெருமான் நாகநாத சுவாமி ஆகவும் தாயார் பிரகதாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Lord Siva Temple: நாகக்கன்னி மீது ஆசைப்பட்ட மன்னன்.. அருள் வழங்கிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகநாத சுவாமி!
Lord Siva Temple: நாகக்கன்னி மீது ஆசைப்பட்ட மன்னன்.. அருள் வழங்கிய சிவபெருமான்.. காட்சி கொடுத்த நாகநாத சுவாமி!

இது போன்ற போட்டோக்கள்

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த வகையில் சிவபெருமான் மீது அனைத்து மன்னர்களும் மிகப்பெரிய பக்தியோடு திகழ்ந்து வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சிவபெருமான் நாகநாத சுவாமி ஆகவும் தாயார் பிரகதாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

கோயிலுக்கு தெற்கு புறத்தில் இயற்கையாக அமைந்த சுனை ஒன்று காணப்படுகிறது. இது புண்ணிய புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுனையில் பங்குனி மாத இறுதியில் அல்லது சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் நாகலோக நடன ஒளியாக கூறப்படும் மிருதங்க இசை கேட்கும் என கூறப்படுகிறது.

பிரம்மதேவர் மற்றும் விஷ்ணு பகவான் இருவரும் இந்த சுனையில் நீராடியதாக கூறப்படுகிறது. கௌதமர் சாபத்தால் இந்திரன் உடல் முழுவதும் கண்களாக மாறியது. அவர் தனது வஜ்ராயுதத்தை இழந்தார். அதன்பின்னர் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டு சுனையில் நீராடி வஜ்ராயுதம் மற்றும் சாப விமோசனம் பெற்றார் என கூறப்படுகிறது.

நாகதோஷ பூஜை

இந்த திருக்கோயிலில் ஐந்து தலைகள் கொண்ட நாகூர் சிலையுடன் வந்து ராகு காலத்தில் பூஜை செய்தால் நாக தோஷம் நீங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஓம் நமசிவாய நமஹ என்ற திருநாமத்தை 108 முறை கூறவேண்டும் என கூறப்படுகிறது. இந்த திருக்கோயில் மாங்கல்ய தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாக திகழ்ந்து வருகிறது.

தல வரலாறு

சாலேந்திரன் என்ற மன்னன் மிகப்பெரிய சிவபக்தராக திகழ்ந்து வந்தார். தினமும் சிவ பூஜை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். அப்போது நாககன்னி மீது மன்னனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. நாகலோகத்தில் பிறந்து நாக கன்னியை திருமணம் செய்து தன்னை வழிபடும்படி சிவபெருமான் கூறினார்.

அதன் காரணமாக சாலேந்திரன் நாகலோகத்தில் குமுதம் என்று பெயரில் பிறந்தார். அதேபோல நாக கன்னியை திருமணம் செய்து சிவபெருமானை அவர் வழிபட்டு வந்தார். வழிபாட்டிற்காக நாக லோகத்தில் இருந்து ஏழு நாகக்கன்னிகள் பூலோகம் வந்து மலர்களை பறித்து விட்டு சென்றனர்.

நாகக்கன்னிகள் பேரையூரில் இருக்கும் சுனை வழியாக இங்கு வந்து செண்பக பூக்களை நாககன்னிகள் பறித்து சென்றன. ஒரு நாள் நாக்குக்கண்ணுகள் வந்து பூக்களை பறித்து செல்வதை கண்ட பேரையூர் சிவபெருமான் உங்களின் நாகராஜனை அழைத்து வாருங்கள் என கேட்டுள்ளார்.

அவரை நாங்கள் அழைத்து வர வேண்டும் என்றால் எங்களோடு ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும் என நாக கன்னிகல் கூறியுள்ளனர். அதனால் பேரையூர் சிவபெருமான் நந்தி தேவரை அனுப்பி வைத்துள்ளார். அதனால் பேரையூர் வந்த நாகராஜன் குமுதம் பேரையூர் சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கூறினார்.

தேவர்கள் இசைக்க நீங்கள் நர்த்தனம் ஆட வேண்டும் என கேட்டுள்ளார் நாகராஜன். அதன்படியே சிவபெருமான் அவருக்கு நர்த்தனம் ஆடி காட்டி உள்ளார். நாகராஜன் வழிபட்ட காரணத்தினால் நாகநாத சுவாமி இந்த திருநாமத்தில் நான் இங்கு அழைக்கப்படுவேன் என சிவபெருமான் அருளினார். அதன் காரணமாக பேரையூர் சிவபெருமான் நாகநாதசுவாமி என்று திருநாமத்தில் அழைக்கப்பட்டார்.

செல்லும் வழி

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இந்த கோயிலுக்கு வரலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.