மண்ணுக்குள் புதைந்திருந்த மகாலிங்கேஸ்வரர்.. தோண்டி எடுத்த சிறுவர்கள்.. பல்லவர் கால கோயில்!
Mahalingeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மகாலிங்கேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி அம்மன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Mahalingeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
போருக்காக கடல் கடந்து சென்ற மன்னர்கள் அனைவரும் அனைத்து நாடுகளிலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காக கோவில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை சோழர்களின் பக்தியை வெளிக்காட்டி வருகிறது. இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் வரலாறுகளை சுமந்து சிவபெருமானின் மீது கொண்ட பக்தியை காட்டி வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.
சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மகாலிங்கேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி அம்மன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக இந்த கோயிலின் வடிவம் காணப்படுகிறது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறுகின்றனர். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்ப வருமன் என்ற மன்னனால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மிகப்பெரிய கோயிலாக விளங்கி வருகிறது.
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால் நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோயிலுக்காக மன்னன் கம்ப வருமன் எப்போதும் அணியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய மூன்று நந்தா விளக்குகளை கொடுத்துள்ளார். அது தடையில்லாமல் இயற்றப்பட வேண்டும் என்பதற்காகவே மிகப்பெரிய பொருள் உதவியை செய்துள்ளார்.
தல வரலாறு
பல்லவர்களின் காலகட்டத்தில் இந்த ஊத்துக்காடு மிகவும் புகழ்பெற்ற கோட்டமாக விளங்கி வந்துள்ளது. 1200 வருடங்களுக்கு முன்பு 18 கூட்டங்களாக பிரித்துப் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர். அதில் இந்த ஊத்துகாடும் ஒன்று. ஒருமுறை சிறுவர்கள் இந்த பகுதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ஏதோ ஒரு வழுவழுப்பான கல் ஒரு சிறுவனின் கண்ணில் பட்டுள்ளது.
உடனே தனது கையில் இருந்த குச்சியை வைத்து அந்த சிறுவன் அந்த இடத்தை தோன்றியுள்ளார். அங்கு அழகான பாண லிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை கவனித்த அனைத்து சிறுவர்களும் இது நமது முன்னோர்கள் வழிபட்ட கோயிலாக இருக்கலாம் என நினைத்துள்ளனர்.
உடனே அந்த சிறுவர்கள் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊருக்குள் சென்று ஊர் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி உள்ளனர். அதன் பின்னர் சுத்தம் செய்ய செய்ய பிரகாரம், கல்வெட்டுகள், மகா மண்டபம், சிவபெருமானின் லிங்கத்திருமேனி, நந்தி பைரவர், சிலைகள் என அனைத்தும் கிடைத்துள்ளன.
அதன் பின்னர் சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி வஸ்திரம் அணிவித்து அனைவரும் வழிபாடு செய்துள்ளனர். அதன் பின்னர் சிவபெருமான் மற்றும் அம்மனின் திருநாமம் தெரியாமல் இருந்த காரணத்தினால் நடந்த அனைத்தையும் பெரியவர்களிடம் கூறி அறிவுரை கேட்டுள்ளனர். மண்ணிலிருந்து கிடைத்த காரணத்தினால் சிவபெருமானை மகேஸ்வரர் எனவும் தாயாரை பெரியநாயகி எனவும் அழைக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இந்த திருநாமம் வைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.