Uthavedeeswarar: கையோடு அழைத்த சிவபெருமான்.. பெற்றோர்களின் அனுமதி கேட்ட பார்வதி தேவி.. சம்மதத்தோடு மணந்த உத்தவேதீஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Uthavedeeswarar: கையோடு அழைத்த சிவபெருமான்.. பெற்றோர்களின் அனுமதி கேட்ட பார்வதி தேவி.. சம்மதத்தோடு மணந்த உத்தவேதீஸ்வரர்!

Uthavedeeswarar: கையோடு அழைத்த சிவபெருமான்.. பெற்றோர்களின் அனுமதி கேட்ட பார்வதி தேவி.. சம்மதத்தோடு மணந்த உத்தவேதீஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2025 10:49 AM IST

Uthavedeeswarar: பழமையான சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் உத்தவேதீஸ்வரர் எனவும் தாயார் அரும்பன்ன வனமுலைநாயகி என அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Uthavedeeswarar: கையோடு அழைத்த சிவபெருமான்.. பெற்றோர்களின் அனுமதி கேட்ட பார்வதி தேவி.. சம்மதத்தோடு மணந்த உத்தவேதீஸ்வரர்!
Uthavedeeswarar: கையோடு அழைத்த சிவபெருமான்.. பெற்றோர்களின் அனுமதி கேட்ட பார்வதி தேவி.. சம்மதத்தோடு மணந்த உத்தவேதீஸ்வரர்!

இது போன்ற போட்டோக்கள்

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோயிலின் கட்டிடக்கலைகள் அனைத்தும் தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

சில கோயில்களின் கட்டிடக்கலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் என்றும் வியந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இருக்கக்கூடிய பழமையான சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் உத்தவேதீஸ்வரர் எனவும் தாயார் அரும்பன்ன வனமுலைநாயகி என அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயில் காவிரி தெரு கரை தளங்களில் இருக்கக்கூடிய தேவார பாடல் பெற்ற 37 ஆவது தலமாகும். சிவபெருமான் என்று சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்திருக்கின்றார். சிவபெருமான் திருமணம் செய்ததற்கு அறிகுறியாக தான் அணிந்து வந்த பாதுகை மற்றும் கைலாயத்திலிருந்து தொடர்ந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டுச் சென்றார் என கூறப்படுகிறது.

திருமணம் ஆகாமல் இருக்கக்கூடியவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் விரைவில் திருமண தடை விலகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சரும நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

பரதமாமுனிவர் என்பவர் பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என நினைத்தார். அதனால் மிகவும் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இவரது தவ வலிமையில் கண்ட சிவபெருமான், முனிவர் வளர்த்து வைத்திருந்த வேள்வி குண்டத்தில் பார்வதி தேவியை பிறக்கச் செய்தார்.

பரதமாமுனிவர் பார்வதி தேவியை வளர்த்தார். பார்வதி தேவி வளர்ந்த பிறகு தான் சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே விருப்பத்தோடு இருந்து வந்தார். அதன் காரணமாக பார்வதி தேவி காவிரி கரையில் மணலால் சிவலிங்கம் செய்து அதனை வழிபாடு செய்து வந்தார்.

பார்வதி தேவி வழிபாடு செய்து எட்டாவது நாள் அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே சிவபெருமான் நம்மை தேடி வந்துவிட்டார் என பார்வதி தேவி மகிழ்ச்சியடைந்தார். அப்போது சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் பார்வதி தேவியின் கையை பற்றிக் கொண்டார். பார்வதி தேவியை அழைத்தார்.

உடனே பார்வதி தேவி சிவபெருமானோடு வர மறுத்தார். இறைவனாகிய நீங்கள் என்னை அழைத்தாலும், என்னை வளர்த்த பெற்றோர்களின் மகிழ்ச்சி எனக்கு மிகவும் முக்கியம். அவர்களின் சம்மதத்தோடு நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என சிவபெருமானிடம் பார்வதி தேவி கேட்டுக்கொண்டார்.

அதன்படி அங்கிருந்து மறைந்த சிவபெருமான் சிறிது காலம் கழித்து நந்தி தேவரை அனுப்பி பரதமாமுனிவரிடம் மணம் பேசி முடிக்கச் சொன்னார். முனிவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் சிவபெருமான் கைலாயத்திலிருந்து ரிஷப வாகனத்தில் வந்தார். சிவபெருமானுக்கு நிழல் தரும் வகையில் உத்தாலம் என்ற மரம் அவரோடு வந்தது.

மணமகனாக வந்த சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார். இந்த இடத்தில் , தான் திருமணம் செய்து கொண்டதற்கு அடையாளமாக சிவபெருமான் தான் அணிந்து வந்த பாதுகைகளையும், நிழலாக வந்த உத்தால மரத்தையும் விட்டுச் சென்றார். இதனால் இந்த இடம் காலப்போக்கில் குத்தாலம் என அழைக்கப்பட்டது.

அதன் பின்னர் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு செய்த பணிகள் குறித்து இங்கு இருக்கக்கூடிய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Whats_app_banner