Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!

Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 27, 2025 06:00 AM IST

Kambakareswarar: சிவபெருமான் லிங்க வடிவில் கம்பஹரேஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார். மூர்த்தி வடிவில் சரபேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். சிவபெருமான் கோயில்களில் மிகவும் பிரம்மாண்ட கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது.

Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!
Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!

இது போன்ற போட்டோக்கள்

தல வரலாறு

மிகவும் தீவிர சிவபெருமான் பக்தரான அரக்கர் இனத்தைச் சேர்ந்த ஹிரண்யகசிபு மகாவிஷ்ணு மீது கடுமையான பகை கொண்டிருந்தார். நாராயணா என்ற பெயரை யாரேனும் துதி பாடினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று கட்டளையிட்டிருந்தார். அவருக்கு மகனாக பிறந்த பிரகலாதன் தந்தை ஹிரண்யகசிபு கட்டளையை மீறி மகாவிஷ்ணுவின் தீவிர பக்த நாகத் திகழ்ந்து வந்தார்.

இதனால் கோபமடைந்த ஹிரண்ய கசிபு எப்போதும் நாராயணனின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் தனது மகன் பிரகலாதனை பல வழிகளில் கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் மகாவிஷ்ணுவின் அருளால் அவர் உயிர் தப்பித்துக் கொண்டே இருந்தார்.

பக்தனை தொந்தரவு செய்து கொண்டிருந்த ஹிரண்யகசிபுவின் இறுதி நேரம் நெருங்கி விட்டது எனக் கூறி தூணில் இருந்து நரசிம்மர் அவதாரத்தில் மகாவிஷ்ணு உதித்தார். கூறிய நகங்களால் கிழித்து ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார்.

அதற்குப் பிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. உலகத்தையே அழிக்கத் தொடங்கினார். தேவர்கள் அனைவரும் பயந்து சிவபெருமானை நோக்கி தஞ்சம் அடைந்தனர். விஷ்ணு பகவானின் உக்கிரத்தை தணிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

சிவபெருமான் தேவர்களின் வேண்டுதல்களை ஏற்று பிரபஞ்சமே அஞ்சு நடுங்கும் அளவிற்கு பாதி உடல் யாழியாகவும் பாதி உடல் பட்சியாகவும் அபூர்வ தோற்றத்தோடு சரபேஸ்வரராக உருவம் எடுத்தார். நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் கடுமையான போர் ஏற்பட்டது. சரபேஸ்வரரின் இறக்கைகளிலிருந்து பத்ரகாளி வெளிப்பட்டு நரசிம்மரின் கோபத்தை தானே ஏற்று ஜீரணித்து கொண்டாள். அதன் பின்னர் நரசிம்மர் கோபம் தீர்ந்தது.

இந்த தல வரலாற்றைக் கொண்டு சரபேஸ்வரருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் அறம் வளர்த்த நாயகி காட்சி கொடுத்து வருகின்றார். உடன் கம்பஹரேஸ்வரரும் காட்சி கொடுத்து வருகிறார்.

முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தனி சன்னதியில் சரபேஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்து வருகிறார். யாழி உடல், பறவையின் தலை கொண்டு சரபேஸ்வரர் காட்சி கொடுத்த வருகிறார்.

வேண்டுதல்கள்

தீயவர்களின் பயத்தால் அச்சப்படுபவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் எதிரிகளால் துன்பப்பட கூடியவர்கள், ஊழ்வினையால் சிக்கல்களை அனுபவிக்க கூடியவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சகலதோஷங்களையும் நீக்கும் சரபேஸ்வரராக இவர் திகழ்ந்த வருகின்றார்.

பரிகாரங்கள்

ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ராகு காலத்தில் சரபேஸ் சன்னதி வாசலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

போகும் வழி

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து இந்த கோயிலுக்கு செல்ல சிற்றுந்து மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner