Saatchinathar: பெண்ணுக்கு சாட்சியாக நின்ற சிவபெருமான்.. பிரளயம் காத்த விநாயகர்.. தேவார பாடல் பெற்ற சாட்சிநாதர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saatchinathar: பெண்ணுக்கு சாட்சியாக நின்ற சிவபெருமான்.. பிரளயம் காத்த விநாயகர்.. தேவார பாடல் பெற்ற சாட்சிநாதர்!

Saatchinathar: பெண்ணுக்கு சாட்சியாக நின்ற சிவபெருமான்.. பிரளயம் காத்த விநாயகர்.. தேவார பாடல் பெற்ற சாட்சிநாதர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2025 07:00 AM IST

Saatchinathar: வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் திருப்புறம்பியம் சாட்சிநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சாட்சி நாதஸ்வரர், புன்னைவனநாதர் என்றும் தாயார் கரும்பன்ன சொல்லி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார்.

Saatchinathar: பெண்ணுக்கு சாட்சியாக நின்ற சிவபெருமான்.. பிரளயம் காத்த விநாயகர்.. தேவார பாடல் பெற்ற சாட்சிநாதர்!
Saatchinathar: பெண்ணுக்கு சாட்சியாக நின்ற சிவபெருமான்.. பிரளயம் காத்த விநாயகர்.. தேவார பாடல் பெற்ற சாட்சிநாதர்!

இது போன்ற போட்டோக்கள்

கடவுளுகளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்த வருகின்றார். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சிவபெருமான் மீது கொண்ட பக்திவின் காரணமாக கலைநயத்தோடு பல கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இன்றும் வரலாறு சரித்திர குழுவினாக திகழ்ந்து வருகிறது. ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது. இதுபோல எத்தனையோ திருக்கோயில்கள் கலைநயத்தோடு நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் திருப்புறம்பியம் சாட்சிநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சாட்சி நாதஸ்வரர், புன்னைவனநாதர் என்றும் தாயார் கரும்பன்ன சொல்லி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்து வருகின்றார். இவர் பிரளயம் காத்த விநாயகர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார். இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் ஆனது வெளி வராது.

மற்ற நாட்களில் இவருக்கு திருமுழுக்கு செய்யப்படுவது கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாள் மட்டும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற 274 சிவபெருமான் கோயில்களில் இது 46வது கோயிலாக திகழ்ந்து வருகின்றது.

தல வரலாறு

முன்பு ஒரு காலத்தில் ரத்தின வள்ளி என்ற ஒரு வணிக குலத்து பெண் தனக்கென்று உறுதி செய்யப்பட்ட கணவனோடு திருமணமாவதற்கு முன்பு இந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கன்னி பெண்ணாக இருந்த அந்தப் பெண்ணின் கணவனை பாம்பு கடித்துவிட்டது. அவர் இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் வருத்தம் அடைந்தார்.

அந்த ஊருக்கு வந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அந்தப் பெண்ணின் கணவனை எழுப்பினார். ரத்தின வள்ளிக்கு அவரை திருமணம் செய்து வைத்தார். இதற்கு சிவபெருமான் சான்றாக நின்றார். இதனால் இவருக்கு சாட்சிநாதர் என்று திருநாமம் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு வன்னி மரமும் சான்றாக இருந்தது. அந்த வன்னி மரம் இரண்டாம் பிரகாரத்தில் இன்றும் கோயிலில் காணப்படுகிறது. மேலும் சிவபெருமான் சாட்சி சொன்ன திரு வரலாறு அவருடைய திருவிளையாடல் புராணத்தில் காணப்படுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்