நந்திக்கு தாலி கட்டும் ஆண்கள்.. திருமண யோகம் தரும் கனகவல்லி.. தோஷங்களைப் போக்கும் கைலாசநாதர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நந்திக்கு தாலி கட்டும் ஆண்கள்.. திருமண யோகம் தரும் கனகவல்லி.. தோஷங்களைப் போக்கும் கைலாசநாதர்..!

நந்திக்கு தாலி கட்டும் ஆண்கள்.. திருமண யோகம் தரும் கனகவல்லி.. தோஷங்களைப் போக்கும் கைலாசநாதர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 31, 2024 06:00 AM IST

Kailasanathar: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இறந்து வருகின்றன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்ட வருகின்றனர்.

நந்திக்கு தாலி கட்டும் ஆண்கள்.. திருமண யோகம் தரும் கனகவல்லி.. தோஷங்களைப் போக்கும் கைலாசநாதர்..!
நந்திக்கு தாலி கட்டும் ஆண்கள்.. திருமண யோகம் தரும் கனகவல்லி.. தோஷங்களைப் போக்கும் கைலாசநாதர்..!

மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் நமது இந்திய நாட்டில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தின் கடவுளாக திகழ்ந்த வருகின்றார்.

இந்தியாவில் சிவபெருமானுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய மனிதர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை அந்த பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். மிகப்பெரிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலையின் முழு அம்சமாக திகழ்ந்து வருகிறது.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

ஒருபுறம் பாண்டிய மன்னர்கள் பிரம்மாண்ட கோயில்களை ஆங்காங்கே கட்டி சிவபெருமான் மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி சென்றுள்ளனர். சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இறந்து வருகின்றன அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்ட வருகின்றனர்.

தல சிறப்பு

வங்க கடலின் கரையின் ஓரத்தில் அமர்ந்திருக்க கூடிய இந்த கைலாசநாதர் அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய லிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்தி குறிப்புகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலின் பிரகாரத்தில் வடக்கு நோக்கி குபேர கணபதி காட்சி கொடுத்து வருகிறார். அதன் பின்னர் சன்னதியில் விஜய கணபதி அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி காட்சி கொடுத்த வருகிறார். இந்த விஜய கணபதியை வழிபட்ட மாணவர்கள் தேர்வுகளுக்கு சென்றால் அதிக மதிப்பெண்கள் பெறுவதாக நம்பிக்கை கூறுகின்றனர். இந்த கோயிலில் இருக்கக்கூடிய மூன்று கணபதிக்கும் விசேஷ நாட்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கோயிலில் வீட்டில் இருக்கக்கூடிய கனகவல்லி தாயாரை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருமண வரம் வேண்டி வழிபாடு செய்யக்கூடிய பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் அம்பாளுக்கு தாலி அணிவித்து தங்கள் வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாத ஆண்கள் அம்பாளுக்கு பதிலாக சிவபெருமானுக்கு எதிரே அமைந்திருக்கக்கூடிய நந்தி பெருமானுக்கு தாலி அணிவித்து வேண்டி கொள்கின்றனர். இந்த கோயிலில் முத்துக்குமார சுவாமியாக காட்சி கொடுக்கும் முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தல புராணம்

ஒரு சமயம் இந்த பகுதியில் வசித்து வந்த கடல் வணிகர்கள் தாங்கள் கடல் பிரயாணத்தின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் தங்களுடைய தொழில் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி சிவபெருமானுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் இந்த கோயில் கடல் சுற்றத்தால் காணாமல் போனது.

அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியை ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னனுக்கு சிவபெருமான் அசரீரியாக தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி சென்றுள்ளார். புதிதாக கோயில் கட்ட நினைத்த பல்லவ மன்னனுக்கு தான் இருக்கும் இடத்தை கூறி ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்த கோயிலை மீட்டெடுக்க சொன்னார் சிவபெருமான். அதன் பின்னர் அங்கு இருந்த லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து பல்லவ மன்னன் கோயில் ஒன்று கட்டி வழிபாட்டை தொடங்கினார். அவருக்கு கைலாசநாதர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது.

Whats_app_banner