கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு.. அம்பை எய்த ராமன்.. காட்சி கொடுத்த சொர்ணபுரீஸ்வரர்.. கோயில் தல வரலாறு
Swarnapureeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடிய இந்த கோயிலின் தல வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Swarnapureeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகத்தில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
உலகம் எங்கும் லிங்கத் திருமேனியாக ஒரே உருவத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு பல மன்னர்கள் மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
சில கோயில்கள் இன்று வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடக்கலை எப்படி சாத்தியம் என அனைவரும் வாயில் விரல் வைத்து செல்கின்றனர். மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. ஒருபுறம் பாண்டிய மன்னர்கள் மிகவும் பிரம்மாண்டமாக மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கட்டி வைத்து சென்றுள்ளனர்.
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மட்டுமல்லாது பல்லவர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இது போன்ற திருக்கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் உண்டு. சில கோயில்கள் இந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபோல எத்தனையோ கோயில்கள் சிறப்பு மிகுந்த இங்கு காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடிய இந்த கோயிலின் தல வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தல வரலாறு
புஷ்பக விமானத்தில் ராவணன் சீதா தேவியை கடத்திச் சென்றார். ராவணனை ஜடாயு தடுக்க முயன்ற பொழுது அதனுடைய சிறகு வெட்டப்பட்டது அந்த சிறகு விழுந்த இடம் தான் சிறகிழந்த நல்லூர். அதன் பின்னர் சீதாவை தேடிச் சென்ற ராமனின் கண்ணில் நாரை ஒன்று தென்பட்டது. தெற்கு நோக்கி சீதாதேவி சென்று கொண்டிருக்கிறார் என அந்த நாரை ராமபிரானிடம் தெரிவித்தது அப்போது நாரைக்கு ஆசிர்வாதம் கொடுத்து ராமபிரான் மோட்சம் கொடுத்தார் அந்த இடம் திருநாரையூர் என்ற பெயரை பெற்றது.
சிறிது தூரம் ராமன் மற்றும் லட்சுமணன் இருவரும் சென்று கொண்டிருந்த இடத்தில் புஷ்பக விமானத்திலிருந்து ஒரு பெண் தான் அணிந்திருந்த பூவை கீழே போட்டார் என சிலர் ராமபிரானிடம் அந்த பூவை கொடுத்தனர். அந்த இடம்தான் பூவிழந்த நல்லூர். அதன் பின்னர் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த பகுதியின் வழியாக ராமன் மற்றும் லட்சுமணன் சென்றனர் அது கடம்பூர் என பெயர் பெற்றது.
அதன் பின்னர் சிறுகாட்டூர் என்ற பகுதியை ராமன் லட்சுமணன் இருவரும் அடைந்தனர். அங்கு இருந்த மக்கள் கொள்ளிடம் ஆற்றல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் நீங்கள் இந்த ஊரிலேயே தங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனால் ராமன் மற்றும் லட்சுமணன் அங்கே தங்கி இருந்தனர்.
அதன் பின்னர் ஆற்றங்கரையிலிருந்து சிவலிங்க பானத்தின் மேலே வெள்ள நீர் மூழ்கடித்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. வெள்ள நீர் குறைந்தால் தான் இங்கு இருக்கும் மக்கள் தப்பிக்க முடியும் நாமும் கரையை கடந்து செல்ல முடியும் என நினைத்த ராமன் பில்லை எடுத்து அம்பை தொடுத்தார். பின்னர் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் குறைந்தது. ஆற்றின் வெள்ளம் கட்டுப்பட்டவுடன் அந்த சிவலிங்கத்தின் அடிப்பகுதி வரை வெள்ளநீர் குறைந்தது.
அதற்குப் பிறகு ராமன் மற்றும் லட்சுமணன் இருவரும் விரைவில் சீதா தேவியை வெற்றி பெற்று மீட்டு வர வேண்டுமென லிங்கத்திற்கு பூஜை செய்து சிவபெருமானை வழிபட்டுச் சென்றார். அந்த லிங்கம் தான் தற்போது சொர்ணபுரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு விளங்கி வருகிறது.
தொடர்புடையை செய்திகள்