Enkan Murugan: பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான்.. கோரிக்கை வைத்த சிவபெருமான்.. எட்டு கண்களால் வழிபாடு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Enkan Murugan: பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான்.. கோரிக்கை வைத்த சிவபெருமான்.. எட்டு கண்களால் வழிபாடு!

Enkan Murugan: பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான்.. கோரிக்கை வைத்த சிவபெருமான்.. எட்டு கண்களால் வழிபாடு!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 09, 2025 06:00 AM IST

Enkan Murugan: பல சிவபெருமான் கோயில்களில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் மிகவும் பிரசித்தி பெற்ற கடவுளாக திகழ்ந்து வருகின்றார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

Enkan Murugan: பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான்.. கோரிக்கை வைத்த சிவபெருமான்.. எட்டு கண்களால் வழிபாடு!
Enkan Murugan: பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த முருகப்பெருமான்.. கோரிக்கை வைத்த சிவபெருமான்.. எட்டு கண்களால் வழிபாடு!

இது போன்ற போட்டோக்கள்

தமிழர்களின் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்த வருகின்றார். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முருக பெருமானுக்கு கோயில்கள் கட்டாயம் இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.

நமது தமிழ்நாட்டில் அறுபடை வீடு கொண்டு முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று வாக்கு தத்துத்தின்படி மலைகளில் வாழக்கூடிய தெய்வமாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார்.

திரும்பும் திசையெல்லாம் முருக பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சில கோயில்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகின்றது.

பல சிவபெருமான் கோயில்களில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் மிகவும் பிரசித்தி பெற்ற கடவுளாக திகழ்ந்து வருகின்றார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இந்த கோயில் மூலவராக பிரம்மபுரீஸ்வரர் திகழ்ந்து வருகின்றார். இது சிவபெருமானின் கோயிலாக இருந்தாலும் இந்த வீற்றிருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி முருகப்பெருமான் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறார்.

தல சிறப்பு

எங்க வீட்டில் இருக்கக்கூடிய பிரம்மபுரீஸ்வரர் மீது பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளி படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சிக்கல், எட்டுக்குடி, எண்கண் உள்ளிட்ட கோயில்களில் முருக பெருமான் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுத்த வருகின்றார்.

இந்த மூன்று கோயில்களிலும் இருக்கக்கூடிய சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த மூன்று சேவைகளும் ஒரே மாதிரி அப்படியே இருக்கும். இந்த சிற்பத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் மூலவராக விளங்கக்கூடிய முருகப்பெருமானை ஒரு காலில் ஊன்றி இருக்கும் மயில்வாகனம் தாங்கிக் கொண்டிருப்பது தான்.

தல வரலாறு

இந்த கோயில் இரண்டாம் குலோ தூங்க மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது சிவபெருமானின் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகப்பெருமான் தான் பிரதானமாகும். இங்கு இருக்கக்கூடிய விநாயகர் நர்த்தன கணபதி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார்.

படைப்பு தொழிலை செய்வதனால் அகந்தையோடு பிரம்ம தேவர் தெரிந்து வந்தார். அந்த சமயத்தில் முருகப்பெருமானிடம் பிரம்ம தேவர் சிக்கிக்கொண்டார். உடனே முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா உங்களுக்கு என பிரம்மதேவரிடம் கேட்டுள்ளார். பதில் தெரியாமல் பிரம்மதேவர் விழித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முருக பெருமான் பிரம்மதேவரை சிறையில் அடைத்தார். அவரின் படைப்பு தொழிலை முருக பெருமான் செய்து வந்தார். அதன் பிறகு சிவபெருமானின் ஆணைக்கிணங்க முருகப்பெருமான் பிரம்மதேவரை விடுவித்தார். அதற்குப் பிறகும் முருகப்பெருமான் படைக்கும் தொழிலை செய்து வந்தார்.

அதன் காரணமாக பிரம்ம தேவர் தற்போது கோயில் இருக்கக்கூடிய தளத்தில் தன்னுடைய எட்டு கண்களால் சிவபெருமானை பூஜை செய்தார். மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் பிரம்மதேவர் முன்பு காட்சி கொடுத்தார். அதன்பின்னர் பிரம்ம தேவர் நடந்த அனைத்தையும் கூறினார்.

சிவபெருமான் படைப்பு தொழிலே பிரம்மதேவரிடம் கொடுக்கும்படி முருகப்பெருமானிடம் கேட்டுக்கொண்டார். பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனிடம் படைப்புத்தொழில் இருப்பது முறை கிடையாது எனக் கூறி முருகப்பெருமான் தர மறுத்தார்.

அதன் பின்னர் சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு கூறியது போல பிரம்மதேவருக்கும் உபதேசம் செய்து படைப்பு தொழிலை அவரிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் பிரம்ம தேவருக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்து முருகப்பெருமான் உலகத்தில் உயிர்களை படைக்கும் தொழிலை அவரிடம் கொடுத்தார். அந்த தலம் தான் நாம் தற்போது காணக்கூடிய எண்கண் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும்.

பிரம்ம தேவர் சிவபெருமானை நோக்கி தனது எட்டு கண்களால் பூஜை செய்த காரணத்தினால் இந்த ஊர் எண்கண் என அழைக்கப்பட்டு வருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்