உடும்பாக மாறிய சிவபெருமான்.. தொடர்ந்து சென்ற ரிஷிகள்.. சாபம் கொடுத்த பார்வதி தேவி.. அருள் கொடுத்த சந்திர சூடேஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உடும்பாக மாறிய சிவபெருமான்.. தொடர்ந்து சென்ற ரிஷிகள்.. சாபம் கொடுத்த பார்வதி தேவி.. அருள் கொடுத்த சந்திர சூடேஸ்வரர்

உடும்பாக மாறிய சிவபெருமான்.. தொடர்ந்து சென்ற ரிஷிகள்.. சாபம் கொடுத்த பார்வதி தேவி.. அருள் கொடுத்த சந்திர சூடேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 29, 2024 06:00 AM IST

Chandra Choodeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சந்திர சூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

உடும்பாக மாறிய சிவபெருமான்.. தொடர்ந்து சென்ற ரிஷிகள்.. சாபம் கொடுத்த பார்வதி தேவி.. அருள் கொடுத்த சந்திர சூடேஸ்வரர்
உடும்பாக மாறிய சிவபெருமான்.. தொடர்ந்து சென்ற ரிஷிகள்.. சாபம் கொடுத்த பார்வதி தேவி.. அருள் கொடுத்த சந்திர சூடேஸ்வரர்

இந்தியாவில் சிவபெருமானுக்கு என தனித்துவமான கோயில்கள் எத்தனையோ இருந்து வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக தெற்கு பகுதியில் அதாவது இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அவர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர். மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது.

பாண்டிய மன்னர்கள் கட்டி வைத்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கட்டிடக்கலையின் சான்றாக திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட கோயில்களை எப்படி கட்டியிருக்க முடியும் என இன்று ஆராய்ச்சியாளர்கள் விரைந்து பார்க்கின்றனர். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது அனைத்து மன்னர்களும் அதீத பக்தியோடு வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சந்திர சூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சந்திர சூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார் பிரகாரத்தில் காணப்படுகின்ற ஜலகண்டேஸ்வரர் லிங்கமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தண்ணீர் தொட்டி நிறைந்து காணப்படும் இடத்தில் மத்தியில் இந்த லிங்கம் இருந்து வருகிறது.

மழை பெய்யாத காலகட்டங்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தண்ணீர் தொட்டி போல் காணப்படும் இந்த தொட்டியில் 16 நாட்கள் தொடர்ந்து குடம் குடமாக தண்ணீரை பக்தர்கள் ஊற்றுகின்றனர். தண்ணீர் வற்றாமல் இருந்தால் அடுத்த சில நாட்களில் மழை வரும் என்று அர்த்தமாம். சில மணி நேரங்களில் தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று அர்த்தமாம். இந்த வழிமுறையானது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வற்றாமல் தண்ணீர் இருந்த காலகட்டத்தில் மழை வந்த அதிசயமும் இங்கு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தல வரலாறு

ஒருமுறை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் கைலாயத்திலிருந்து இங்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது சிவபெருமான் உடும்பு ரூபம் எடுத்து ஓடி சென்றார் அவரை பிடிப்பதற்காக பார்வதி தேவி பின்தொடர்ந்து சென்றார். பல காடு மற்றும் மேடு உள்ளிட்ட பகுதிகளை தாண்டி இந்த பகுதிக்கு சிவபெருமான் வந்தார்.

அப்போது அந்த இடத்தில் முட்கலர், உத்சாயனர் என்ற இரண்டு ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தங்களுடைய தவஞானத்தால் வருவது சிவபெருமான் என உணர்ந்து கொண்டனர். அவர்கள் அந்த உடம்பை பிடிக்க நினைத்தனர். உடம்பின் உடலின் மீது மரகதம் நவரத்தினம் மாணிக்கம் என அனைத்தும் பதிக்கப்பட்டு இருந்தன. அதன் மேல் ஆசைப்பட்டு பார்வதி தேவி அந்த உடும்பை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து சென்றார்.

எவரிடமும் சிக்காமல் சிவபெருமான் அந்த இடத்தில் இருந்து மறைந்தார். ரிஷிகளினால் உடும்பு மறைந்து விட்டன என்று கோபம் கொண்ட பார்வதி தேவி ரிஷிகளுக்கு சாபம் கொடுத்தார். இதன் காரணமாக இருவரும் ஊமை மற்றும் செவிடாக ஆகிவிடுகின்றனர். அதன் பின்னர் கோமூகம் வழியாக பார்வதி தேவி தவமிருந்தார். அதுவே தற்போது நாம் காணும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்