அத்தனூர் அம்மன்: கூடையில் அமர்ந்த குலதெய்வம்.. அதிர்ந்து போன பக்தர்கள்.. அத்தனூர் அம்மன் காட்சி!
அத்தனூர் அம்மன்: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அத்தனூர் பத்ரகாளி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயில் சேலம் - நாமக்கல் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் தல வரலாறு குறித்து இங்கு காணலாம்.

கூடையில் அமர்ந்த குலதெய்வம்.. அதிர்ந்து போன பக்தர்கள்.. அத்தனூர் அம்மன் காட்சி
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
ராசிபுரம் அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அத்தனூர் அம்மன், அம்மன் கோயில், ராசிபுரம், கோயில் வழிபாடு, ஜோதிடம்
அத்தனூர் அம்மன்: உலகம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடு என்பது இருந்து வருகிறது. குறிப்பாக நமது இந்தியாவில் பெண் தெய்வ வழிபாடுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண் தெய்வ வழிபாடு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திரும்பும் திசை எல்லாம் பார்வதி அவதாரத்தின் கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அத்தனூர் பத்ரகாளியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயில் சேலம் - நாமக்கல் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் தல வரலாறு குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| குரு மிதுனத்தில் பண மழையை கொட்டும் ராசிகள்
தல வரலாறு
அந்த காலத்தில் பசி மற்றும் பஞ்சம் அதிகரித்து காணப்பட்ட காரணத்தினால் அனைவரும் எங்காவது சென்று உழைத்து வருவது இருந்து வந்துள்ளது. அதேபோல ஒரு கூட்டம் வளமான பகுதியை தேடிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் ஓரிரு பாத்திரங்கள், துணிகள் கொண்ட கூடையை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.
சிறிது தூரம் நடந்த பிறகு அந்த கூடை மிகவும் பளு அதிகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்ட அந்த பெண் கூடையை இறக்கி கீழே வைத்து பார்த்தார். அதில் ஒரு குழவி கல் இருந்துள்ளது. எப்படித்தான் தமது கூடையில் வந்தது என்று தெரியாமல் அதனை தனது கணவரிடம் அந்த பெண் தெரிவித்தார்.
நீதான் எடுத்து வந்திருப்பாய் எனக் கூறி அவர் அந்த கூடையில் இருந்த குழவி கல்லை தூரம் எரிந்துவிட்டு மீண்டும் இருவரும் நடக்க தொடங்கினார்கள். கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு மீண்டும் அந்த கூடை கனமாக இருந்துள்ளது. மீண்டும் ஏன் கூடை கனமாக இருக்கிறது என்று எண்ணி அந்தப் பெண் கூடையை பார்த்துள்ளார்.
அப்போது அதே குழவி கல் அந்த கூடையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன அந்த பெண் தனது கணவனை அழைத்து மறுபடியும் கூறினார். அந்தக் கல்லைக் கண்ட கணவனுக்கும் சற்று பயம் ஏற்பட்டது. நாம் அப்போது தூக்கி எறிந்த கல் மறுபடியும் கூடைக்குள் எப்படி வந்தது என இருவரும் யோசித்தனர்.
மறுபடியும் அதனை தூக்கி எறிந்து விட்டு இருவரும் அவர்களின் கூட்டத்தோடு பயணத்தை தொடர்ந்தனர். அத்தனூர் மலை அடிவாரத்தில் அனைவரும் ஓய்வுக்காக தங்கி உள்ளனர். இரவில் அந்தப் பெண்ணின் கணவனுக்கு கனவு ஒன்று வந்துள்ளது.
அந்த கனவில், நீங்கள் கூடையில் இருந்து தூக்கி எறிந்த நான் வெறும் குழவி கல் அல்ல. உங்களுடைய குலதெய்வம். என்னை மட்டும் நீங்கள் அந்த ஊரிலேயே விட்டுவிட்டு வந்து விட்டீர்கள். அதனால்தான் நான் உங்களை பின் தொடர்ந்து வந்தேன் என ஒரு குரல் கேட்டுள்ளது.
உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த பெண்ணின் கணவர் கூடையில் இருந்தது நமது குலதெய்வம், தான் அதுதான் இப்படி வந்திருக்கிறது என்று நினைத்து பிரம்மித்தார். உடனே அந்த குழவி கல்லைத் தேடி எடுத்து வருவதற்காக சென்றார். மீண்டும் அந்த கல் கூடையில் இருப்பதை கண்டு அவரது மனைவி பரவசத்தோடு கணவனை அழைத்தார்.
பின்னர் தனது கூட்டத்தில் இருந்த பெரியவர்களின் ஆலோசனைப்படி அந்த மலை அடிவாரத்திலேயே அந்த கல்லை நட்டு தங்களது குலதெய்வமான பத்ரகாளியை நினைத்து வணங்கியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கல்லுக்கு சிறிய கோயில் ஒன்றைக் கட்டி வழிபட தொடங்கியுள்ளனர்.
மேலும் படிங்க| புதன் மேஷத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் ராசிகள்
தல சிறப்பு
இந்த கோயிலில் அம்மனின் வலதுபுறத்தில் முக்கிர காளியம்மன் அமைந்திருக்கிறார். இந்த சிலை ஒரே கல்லிலால் செதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அம்மனின் இடதுபுறம் பைரவர் மற்றும் வலது புறம் அன்னமும் காணப்படுகின்றன. கோர முனிக்கு கீழே லாட சன்னியாசிகள் மூவர் காணப்படுகின்றன. அடுத்தடுத்து முனியப்பன் சன்னதி மற்றும் முத்து சன்னதி இருக்கின்றது.
இந்த கோயிலில் வேல் விலங்கு கொண்டு வழிபட்டால். பில்லி, சூனியம் வேண்டாத பாதிப்புகள் அனைத்தும் விலகிவிடும் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் நவகிரகங்களின் தனி சன்னதி உள்ளது. மூலவராக வீற்றிருக்கக்கூடிய பத்ரகாளி அம்மனுக்கு எதிரே மூன்று குதிரைகள் இருக்கின்றன.
அந்தக் குதிரைகளின் இடது பக்கத்தில் கத்தியால் தனது கழுத்தை குத்திக் கொள்ளும் சர்வீஸ்வரர் சிலை ஒன்று காணப்படுகிறது. தனது முதலாளிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் தான் வேண்டிக்கொண்டபடி கழுத்தை அறுத்துக் கொள்வதாக பணியாளர் ஒருவர் தனது வேண்டுதலை நிறைவேற்றினாராம். அதன் சாட்சியாக இங்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.
பூ போடும் முறையில் அம்மனிடம் வாக்கு கேட்கும் பழக்கவழக்கம் இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு மற்றும் திருமண யோகம் அமைய வேண்டியவர்களுக்கு வாக்கு கேட்கும் வழிமுறை நடத்தப்பட்டு வருகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
