Vyagarapureeswarar: புலிக்கால் பெற்ற வியாக்ரபாதர்.. பக்தனின் பெயரில் அமர்ந்த வியாக்ரபுரீஸ்வரர்.. சிவபெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vyagarapureeswarar: புலிக்கால் பெற்ற வியாக்ரபாதர்.. பக்தனின் பெயரில் அமர்ந்த வியாக்ரபுரீஸ்வரர்.. சிவபெருமான்!

Vyagarapureeswarar: புலிக்கால் பெற்ற வியாக்ரபாதர்.. பக்தனின் பெயரில் அமர்ந்த வியாக்ரபுரீஸ்வரர்.. சிவபெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2025 06:00 AM IST

Vyagarapureeswarar: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் எனவும் தாயார் அமிர்த குஜலாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Vyagarapureeswarar: புலிக்கால் பெற்ற வியாக்ரபாதர்.. பக்தனின் பெயரில் அமர்ந்த வியாக்ரபுரீஸ்வரர்.. சிவபெருமான்!
Vyagarapureeswarar: புலிக்கால் பெற்ற வியாக்ரபாதர்.. பக்தனின் பெயரில் அமர்ந்த வியாக்ரபுரீஸ்வரர்.. சிவபெருமான்!

குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழ்நாட்டில் சிவபெருமானை குலதெய்வமாக பல பக்தர்கள் வணங்கி வருகின்றனர். மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

தனக்கென தனி உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியாக சிவபெருமான் உலகம் முழுவதும் காட்சி கொடுத்து வருகிறார். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்த வரும் சிவபெருமான் மிகப்பெரிய கோயில்கள் கொண்ட பக்தர்களை ஆட்சி செய்து வருகின்றார்.

தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக பல மன்னர்கள் எதிரிகளாக இருந்து போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

அதன் காரணமாக திரும்பும் திசையெல்லாம் வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். கலை நியமிக்க அந்த கோயில்கள் இன்று வரை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றன.

சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல கோயில்களின் கட்டிடக்கலை இன்று வரை பல ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் உள்ளன.

அந்த சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் எனவும் தாயார் அமிர்த குஜலாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து வருகிறார். எங்க வீட்ல இருக்கக்கூடிய லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் படிந்து இருப்பதை காண முடியும். அதேபோல சிவபெருமானின் விலா எழுப்பும் காணப்படும். இந்த கோயிலில் வச்சு இருக்கக்கூடிய சூரிய பகவானின் சிலையின் நிழலானது சாயாமல் நேராக சுவரில் விழுவது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது.

இது வீச்சு இருக்கக்கூடிய ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திரு அம்சமாகும். இந்த கோயில் 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரத்தலமாக திகழ்ந்து வருகிறது.

தல வரலாறு

தற்போது இருக்கக்கூடிய சிதம்பரத்தில் ஒரு காலகட்டத்தில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் என்ற இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சிவபெருமானுக்கு மலர் மாலை அணிவித்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர். பல சமயங்களில் இவர்களுக்கு நல்ல மலர்கள் கிடைக்காமல் போனது.

சில நேரங்களில் வீணாகிப் போன மலர்கள் இவர்கள் நல்ல மலர்களோடு கலந்து விடும். மரத்தின் உச்சியில் இருக்கக்கூடிய நல்ல மலர்களை பறிப்பதற்காக வியாக்ரபாதர் முயற்சி செய்துள்ளார். இதனால் மிகப்பெரிய வருத்தத்தை அனுபவித்து வந்துள்ளார். உடனே சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார்.

எதற்காக உனக்கு வருத்தம் என்று சிவபெருமான் தெரியாதது போல் கேட்டுள்ளார். அதற்கு வியாக்ரபாதர், உங்களுக்கு பூஜை செய்வதற்காக சிறந்த மலர்கள் கிடைக்கவில்லை. அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பாக மாலை தொடுக்க வேண்டும். இருளில் நல்ல மலர்களை பறிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அதற்கான வசதியை எனக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என கூறியுள்ளார்.

உடனே சிவபெருமான் அவருக்கு புலி கால்களை கொடுத்துள்ளார். அந்த நகங்களால் மரத்தை ஈர்க்க பற்றி கொண்டு ஏறி சென்று அந்த மலர்களை வியாக்ரபாதர் பரித்துள்ளார். அதனைக் கொண்டு இறைவனின் பூஜித்துள்ளார். புலி வடிவம் கொண்டு இறைவனை தரிசித்த தலம் என்கின்ற காரணத்தினால் இந்த இடம் திருப்புலிவனம் என அழைக்கப்பட்டது. பக்தரின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமான் அவருடைய பெயரைக் கொண்டு இங்கு வியாக்ரபுரீஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார்.

Whats_app_banner