Thirumarainathar: தலையை துண்டித்த விஷ்ணு பகவான்.. சாபம் கொடுத்த பிருகு முனிவர்.. நிவர்த்தி கொடுத்த திருமறைநாதர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirumarainathar: தலையை துண்டித்த விஷ்ணு பகவான்.. சாபம் கொடுத்த பிருகு முனிவர்.. நிவர்த்தி கொடுத்த திருமறைநாதர்..!

Thirumarainathar: தலையை துண்டித்த விஷ்ணு பகவான்.. சாபம் கொடுத்த பிருகு முனிவர்.. நிவர்த்தி கொடுத்த திருமறைநாதர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2025 06:00 AM IST

Thirumarainathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருமறைநாதர் எனவும் தாயார் திருமறை நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Thirumarainathar: தலையை துண்டித்த விஷ்ணு பகவான்.. சாபம் கொடுத்த பிருகு முனிவர்.. நிவர்த்தி கொடுத்த திருமறைநாதர்..!
Thirumarainathar: தலையை துண்டித்த விஷ்ணு பகவான்.. சாபம் கொடுத்த பிருகு முனிவர்.. நிவர்த்தி கொடுத்த திருமறைநாதர்..!

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட கோயில் நகரங்களில் புண்ணிய பூமியாக இந்த இந்தியா விளங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதி சிவபெருமானின் ஆட்சி பீடமாக திகழ்ந்து வருகிறது.

காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நமது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வருகின்றன. மன்னர்கள் காலகட்டத்தில் சிவபெருமானை குலதெய்வமாக அனைத்து மன்னர்களும் வணங்கி கொண்டுள்ளனர்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் வானுயர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக இன்று வரை வாழ்ந்து வருகின்றன.

பல வரலாறுகளை சுமந்து வரும் கோயில்கள் இன்று வரை கட்டிடக்கலையின் வியப்பின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த கோயில்களின் கலை நயம் தரம் குறையாமல் இன்றும் இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருமறைநாதர் எனவும் தாயார் திருமறை நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகின்றார் இன்றும் அந்த லிங்கத்தின் தலையில் பசு மாட்டின் குளம்பு அடிகள் காணப்படுகின்றன. திருவாசகத்தை கொடுத்த மாணிக்கவாசகர் அவதரித்த தனமாக இந்த கோயில் விளங்கி வருகின்றது.

சங்கத் தமிழை வளர்த்த ஊர் என்று இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து கடவுள்களும் வழிபட்ட தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது. இந்திய அளவில் வாத நோய் போக்குகின்ற தலமாக இந்த கோயில் விளங்கி வருகின்றது.

தல புராணம்

தற்போது கோயில் இருக்கக்கூடிய இடம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்துள்ளது. ஒருமுறை தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையே மிகப்பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. தப்பித்து ஓடிய தேவர்கள் விஷ்ணு பகவானிடம் தஞ்சமடைந்துள்ளனர். தங்களுக்கு சிக்கல்கள் கொடுத்து வருவதாக விஷ்ணு பகவானிடம் முறையிட்டனர்.

உடனே அசுரர்கள் பிருகு முனிவரிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளனர். பிருகு முனிவர் மற்றும் அவரது மனைவி இருவரும் அசுரர்களுக்கு தஞ்சம் கொடுத்துள்ளனர். அந்த இடத்திற்கு வந்த விஷ்ணு பகவான் முனிவரிடம் அசுரர்களை நான் அழிக்க வேண்டும் அவர்களை என்னிடம் விட்டுவிடு எனக் கூறியுள்ளார்.

என்னிடம் தஞ்சம் அடைந்த யாரையும் நான் அழிப்பதற்கு கொடுக்க முடியாது என பிருகு முனிவர் விஷ்ணு பகவானிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை பயன்படுத்தி பிருகு முனிவரின் மனைவியின் தலையை குறைந்துவிட்டார்.

இதன் கோபமடைந்த பிருகு முனிவர் நான் மனைவியை இழந்தது போல் இந்த பூவுலகில் நீ பல பிறவிகள் எடுத்து மனைவியை இழந்து பாடுவாய் என சாபமிட்டார். சாபத்தினை நிவர்த்தி செய்வதற்காக மதுரை வந்து ஆலவாய் அழகரை தரிசனம் செய்துவிட்டு அங்கே மலர்களால் நிரப்பப்பட்ட தடாகத்திற்கு வந்தார் விஷ்ணு பகவான். பூஜை செய்வதற்காக சிவபெருமானை தேடி உள்ளார் விஷ்ணு பகவானுக்கு கிடைக்கவில்லை.

உடனே அங்கு வந்த பசு ஒன்று தடாகத்தில் இருந்த தாமரை பூவின் மீது தனது பாலை சுரந்துள்ளது. அங்கு சென்று பார்த்த விஷ்ணு பகவான் சுயம்புவாக லிங்கம் காட்சி கொடுப்பதை கண்டார். அதன் பின்னர் அதற்கு விஷ்ணு பகவான் பூஜை செய்து தனது சாப நிவர்த்தியை பெற்றார். பின்னாளில் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது.

Whats_app_banner