யோகியின் ஜீவ சமாதியில் புற்று.. சுவராக காட்சி கொடுக்கும் யோகீஸ்வரர்.. அருள் ஆசி வழங்கும் சாஸ்தா
Yogeeswaramudaiyar Temple:
Yogeeswaramudaiyar Temple: மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகமெங்கும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு அடித்தளம் இட்டது இந்தியா தான்.
நமது இந்திய நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தங்கள் வாழ்க்கையில் அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் இன்றுவரை காணப்படுகின்றன.
கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகமெங்கும் தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியில் காட்சி கொடுத்து வருகிறார். பல நாடுகள் கடந்தும் இன்றுவரை பல கோயில்கள் இருப்பதை நம்மால் காண முடியும். நமது நாட்டில் இருந்து சென்று வெற்றி பெற்ற மன்னர்கள் அந்த நிலத்தில் கோயில்கள் கட்டி வழிபாடு செய்துள்ளனர்.
மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் பல்லாண்டு கடந்தும் வானுயர்ந்து மிகப்பிரமாண்டமாக பல வரலாறுகளை எடுத்துக் கூறி வருகின்றன.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கலைநயம் மிக்க சிவபெருமான் கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளன. மிகப்பெரிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலையின் மிகச் சிறந்த களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது.
அந்த கோயிலின் கட்டடக்கலை இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பாகவே இருந்து வருகிறது. ஒருபுறம் சோழர்கள், மறுபுறம் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் என அனைவரும் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் யோகீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.
தல சிறப்பு
ஒரு கோயிலில் சிறப்பு அம்சமாக இருக்கக்கூடிய கோபுரம், விமானம், கொடி மரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயிலாக இந்த கோயில் திகழ்ந்து வருகிறது. திறந்தவெளியில் 22 அடி உயரத்தில் ஒரு பெரிய சுவர் காணப்படும் அந்த சுவரின் உச்சியில் ஒருவர் படுத்து இருக்கும் படிவம் காணப்படும்.
இந்த சுவரில் பங்குனி உத்திர தினத்தன்று அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை செம்மண் பூசும் திருவிழா நடைபெறுகிறது. அதே நாளில் மாலை நேரத்தில் கண் திறப்பு வைபவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகம் திருநாளும் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் மூலவராக வணங்கப்படும் சுவரின் மணல் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கலந்து சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பி வருகின்றனர்.
வைகாசி திருநாளன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் பலாப்பழம், மாம்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்தையும் கலந்து அதிலிருந்து சாறு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து வரும் சாறு மாம்பால் என அழைக்கப்படுகிறது அதுவே சுவாமிக்கு படைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் இந்த பகுதியில் பூலாத்தி மரத்தின் அடியில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய சாஸ்தா பீட வடிவில் எழுந்தருளியுள்ளார். அதன் பின்னர் இந்த பகுதி மக்கள் அவருக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர் இவரை அனைவரும் பூலா உடைய கண்டன் சாஸ்தா என அழைத்துள்ளனர்.
அங்கு வந்து யோகி ஒருவர் சாஸ்தாவை வழிபட்டு அந்த இடத்திலேயே பல காலம் தங்கியிருந்தார். அதன் பின்னர் அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்
சில காலம் கழித்து அந்த யோகியின் ஜீவ சமாதிக்கும் மேலே புற்று ஒன்று வளர்ந்துள்ளது. சுவாமியே புற்றாக வந்துள்ளதாக மக்கள் நினைத்து வழிபட்டனர். அதன் பின்னர் காலப்போக்கில் புற்று இருந்த இடத்தில் சுகர் ஒன்று எழுப்பி உள்ளனர். பின்னர் அந்த சுவரை இறைவனாக நினைத்து அனைவரும் வழிபட்டுள்ளனர். அந்த சுவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. அந்த சுவருக்கு யோகீஸ்வரர் என்ற திருநாமத்தை சூட்டியுள்ளனர்.