Munkudumeeswarar: அர்ச்சகர் மனைவி மாலை மன்னனுக்கு.. மாலையில் சிக்கிய முடி.. குடுமியோடு காட்சியளித்த சிவபெருமான்..!
Munkudumeeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் முன்குடிமீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் முன்குடிமீஸ்வரர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Munkudumeeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர். சிவபெருமான் இவர் கடவுளுக்கு எல்லாம் கடவுளாக திகழ்ந்து வருகிறார். திரும்பும் திசையெல்லாம் இந்தியாவில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
உலகம் முழுவதும் எத்தனை கடவுள்கள் வழிபாட்டில் இருந்தாலும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இந்தியாவில் இருந்து வருகிறது. அதிக கோயில்கள் கொண்ட கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர்.
தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் நமது நாட்டில் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் இன்று வரை களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்களின் கட்டுமானங்கள் இன்று வரை பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல மன்னர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானுயர்ந்த கோயில்களை சிவபெருமானுக்காக கட்டி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரம் மாறாமல் சிறப்புடன் காணப்படுகின்றன. பல கோயில்களுக்கு வரலாறு இருந்தாலும் சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் முன்குடிமீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் முன்குடிமீஸ்வரர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தின் பானத்தில் உச்சியில் குனிந்து போன்ற தோற்றம் காணப்படுகிறது அதுவே இந்த லிங்கத்தின் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்த கோயிலின் மண்டபத்தில் கூற்றுவ நாயனார் இருக்கின்றார்.
சிவபெருமானால் மணிமகுடம் சூட்டப்பட்ட கூற்றுவ நாயனார் பல சிவபெருமான் கோயில்களில் திருப்பணி செய்து வழிபட்டு வந்துள்ளார். அவர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை நடக்கின்றது. அன்றைய திருநாளில் இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மற்ற கோயில்களில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது சண்டிகேஸ்வரர் புறப்பாடு நடக்கும். ஆனால் இந்த திருக்கோயிலில் கூற்றுவ நாயனார் புறப்பாடு நடக்கின்றது. தஞ்சை அரண்மனையில் அரசவைப் புலவராக திகழ்ந்து வந்த புகழேந்தி இந்த ஊரில் பிறந்தவராவார்.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக குழந்தை பாக்கியம் இரண்டு சிவபெருமானுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்து வழிபட்டார். அப்படிப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒருமுறை மன்னன் இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் சிவபெருமான் அணிந்திருந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். பின்னர் மன்னர் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்து அவரது மனைவிக்கு சூட்டிய மாலையை கோயிலுக்கு எடுத்து வந்தார் அர்ச்சகர்.
சிவபெருமானுக்கு அனுப்பித்த மாளிகை என்று கூறி அந்த மாலையை மன்னனுக்கு அர்ச்சகர் அறிவித்தார். மன்னர் அந்த மாலையில் முடி இருந்ததை கண்டுவிட்டார். அதற்கான காரணத்தை கேட்டார். லிங்கத்தில் இருந்த சடாமுடியின் முடியை அது என அர்ச்சகர் பொய் கூறினார்.
உடனே மன்னர் சிவலிங்கத்தில் இருக்கும் ஜடா முடியை எனக்கு காட்டுங்கள் என அர்ச்சகர்ரிடம் கேட்டார். நாளை காட்டுகிறேன் என அர்ச்சகர் கூறினார். மன்னன் மறுநாள் தனக்கான தரிசனம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அர்ச்சகரை எச்சரித்து விட்டு சென்றார்.
இதனால் மனம் கலங்கிய அர்ச்சகர் அன்று இரவு சிவபெருமானை வேண்டி வழிபட்டார். மறுநாள் மன்னன் ஜடாமுடியை காண்பதற்காக வந்தார். அர்ச்சகர் பயத்துடன் சிவலிங்கத்தின் முன்பு தீபாரனை காட்டுகிறார். அதன் பின்னர் சிவலிங்கத்தின் பானத்தின் முன் கொத்தாக முடி இருந்தது. மன்னன் அதனை கண்டு மகிழ்ந்தார். இவ்வாறு சிவபெருமான் குடுமியோடு காட்சி கொடுத்த காரணத்தினால் இவர் முன்குடிமீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
