Chokkanathar: திருமாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட சொக்கநாதர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chokkanathar: திருமாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட சொக்கநாதர்!

Chokkanathar: திருமாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட சொக்கநாதர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 17, 2025 06:00 AM IST

Chokkanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Chokkanathar: திருமாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட சொக்கநாதர்!
Chokkanathar: திருமாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட சொக்கநாதர்!

குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

அந்த வகையில் மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர்.

மன்னர்கள் கட்டி வைத்த கோயில்கள் தான் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை பிரம்மாண்டமாக நமது தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. அந்த கோயில்களின் கட்டிடக்கலை இன்று வரை பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்து வருகிறது.

பல வரலாறுகளை சுமந்து கொண்டு எத்தனையோ கோயில்கள் வானுயர்ந்து இங்கு காணப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் என பல கோயில்கள் இன்று வரை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் பிரம்மாண்டமாக திகழ்ந்த வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

சொக்கநாதர் திருக்கோயிலில் தல விருச்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக ஆகாய கங்கை தீர்த்தமும் இருக்கின்றன. இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விநாயகர் வில்வ விநாயகர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் வழிபட்டால் தடைபட்ட திருமண காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

இந்த கோயிலில் தனி சன்னதியில் சனி பகவான் காட்சி கொடுத்து வருகிறார் அவர் யோக சனீஸ்வரர் என்ற திருநாமத்தோடு தெற்கு நோக்கி காட்சி அளித்து வருகிறார். சனி பகவானால் தோஷம் ஏற்பட்டவர்கள் சனிக்கிழமை அன்று எள் விளக்கு போட்டு காக்கைக்கு அன்னமிட்டு வழிபட்டால் அவர்கள் தோஷத்தின் வீரியம் குறையும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

கயிலை மலையில் இருந்த சிவபெருமான் மீனாட்சி அம்மனை திருமணம் செய்து கொள்வதற்காக மதுரைக்கு வந்தார். இவர்களின் திருமணம் மதுரையில் வெகு விமர்சையாக நடந்தது. திருமணத்தை காண்பதற்காக தேவர்கள் மதுரைக்கு அருகே ஒரு பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது அங்கே ஒரு பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்துள்ளனர். திருமாங்கல்யம் செய்வதற்கு முன்பாக தேவர்கள் சிவபெருமானை வழிபட விரும்பி உள்ளனர். அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட சிவபெருமான் அந்த இடத்தில் திருமணத்திற்கு முன்பே பார்வதியோடு சேர்ந்து தம்பதி சமேதராக எழுந்துருளி தேவர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.

அங்கு காட்சி கொடுத்த சிவபெருமானை சுந்தரேஸ்வரர் எனவும் தாயாரை மீனாட்சி என்றும் அழைத்துள்ளனர். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை இந்த இடத்திலேயே தங்கும்படி தேவர்கள் கேட்டுக் கொண்டனர். திருமாங்கல்யம் செய்யப்பட்ட இடம் என்கின்ற காரணத்தினால் அந்த இடத்திற்கு தேவர்கள் திருமாங்கல்யம் என்று திருநாமம் சூட்டினார். காலப்போக்கில் அந்த இடம் திருமங்கலம் என பெயர் மாறியது. அதன் பின்னர் மன்னர்கள் அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாடுகள் நடத்தியுள்ளனர்.

 

Whats_app_banner