Meenakshi Chokkanadhar: சாப்பிட்டு தூங்கி சிவபெருமான்.. பிரம்பால் அடித்த மன்னர்.. காட்சி கொடுத்த மீனாட்சி சொக்கநாதர்
Meenakshi Chokkanadhar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் கோச்சடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
Meenakshi Chokkanadhar: கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்த வருகின்றார். உலகம் முழுவதும் சிவபெருமானின் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கின்றார். மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமான வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு இந்தியாவில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல கோயில்களின் கட்டிடக்கலை இன்று வரை பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமாகவே இருந்து வருகிறது.
அந்த அளவிற்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் கோச்சடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
தல சிறப்பு
இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். சுவாமிக்கு மிக அருகில் ஆண் வில்வமரம் மற்றும் பெண் வில்வமரம் இரண்டும் ஒருங்கி அமைந்திருப்பது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. மதுரையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் கோயில்களில் நான்கு அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மூர்த்தி இந்த கோயிலில் தான் உள்ளது.
பாண்டியர்கால புராதான கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு முன்பு சக்தி வாய்ந்த கிராம தேவதையாக விளங்கக்கூடிய அம்மச்சி அம்மன் காட்சி கொடுத்தார்.
குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வருபவர்களுக்கு அனைத்தும் நிறைவேறும் என்பது இந்த கோயிலின் ஐதீகமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்த கோயிலில் இறைவனை வழிபட்டால் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
ஒரு முறை வைகையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்தரவிட்டார். அதன் காரணமாக வீட்டுக்கு ஒரு நபர் இந்த வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும் என உத்தரவிட்டார். தனியாக வாழ்ந்து வந்த வந்தி என்ற வயதான மூதாட்டிக்கு யாருமில்லாத காரணத்தினால் மண் சுமக்க யாரை அனுப்புவது என யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபன் உருவத்தில் சிவபெருமான் வந்தி மூதாட்டிக்கு உதவுவதற்காக வந்தார். இளைஞராக வந்த சிவபெருமான் உனக்கு மண் சுமந்து கொடுத்தால் எனக்கு என்ன தருவாய் என்று மூதாட்டியிடம் கேட்டார். உடனே சிவபெருமான், நீ அவித்துக் கொடுக்கும் புட்டில் உதிர்ந்து போன குட்டெல்லாம் எனக்கு உதிராத புட்டு எல்லாம் உங்களுக்கு எனவும் கூறுகிறார்.
அதற்கு மூதாட்டியும் ஒப்புக்கொள்கிறார். மூதாட்டி அவிழ்த்து கொடுக்கும் புட்டு எல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்கின்றது அதனை சிவபெருமான் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். கரையை அடைப்பதற்கு மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் சிவபெருமான் தூங்கிவிடுகிறார்.
அந்த வழியாக வந்த மன்னர் கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என பிரம்பால் படுத்து உறங்கும் சிவபெருமானை அடித்து விடுகிறார். பிரம்பில் அடி வாங்கிய சிவபெருமான் திடீரென ஓடிச் சென்று கூடையில் மண்ணை அள்ளி வெள்ளத்தை அடைக்க அணை கட்டுகிறார். அதுவரை கட்டுக்கடங்காமல் சீறி கொண்டு வந்த வெள்ளம் அடங்கி விடுகிறது.
இதனைக் கண்டு அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்துள்ளனர். முதுகில் சிவபெருமான் பிரம்படி வாங்கிய பிறகு அந்த தடம் அனைவரது முதுகிலும் இருந்துள்ளது. உடனே அனைவரும் வந்திருப்பது சிவபெருமான்தான் என அறிந்து கொள்கின்றனர். அதன் பின்னர் அனைவரும் சிவபெருமானை வணங்குகின்றனர்.
சிவபெருமான் நடத்திய இந்த திருவிளையாடல் நடந்த இடம் தான் தற்போது இருக்கக்கூடிய கோச்சடை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் ஆகும்.