Lord Siva: வேதங்களை திருடிச் சென்ற அசுரன்.. மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. தோஷ நிவர்த்தி கொடுத்த மச்சபுரீஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Siva: வேதங்களை திருடிச் சென்ற அசுரன்.. மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. தோஷ நிவர்த்தி கொடுத்த மச்சபுரீஸ்வரர்!

Lord Siva: வேதங்களை திருடிச் சென்ற அசுரன்.. மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. தோஷ நிவர்த்தி கொடுத்த மச்சபுரீஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 29, 2025 06:40 AM IST

Lord Siva: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய தேவராயன் பேட்டை அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மச்சபுரீஸ்வரர் எனவும் தாயார் குந்தலாம்பிகை என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Lord Siva:வேதங்களை திருடிச் சென்ற அசுரன்.. மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. தோஷ நிவர்த்தி கொடுத்த மச்சபுரீஸ்வரர்!
Lord Siva:வேதங்களை திருடிச் சென்ற அசுரன்.. மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. தோஷ நிவர்த்தி கொடுத்த மச்சபுரீஸ்வரர்!

இது போன்ற போட்டோக்கள்

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய தேவராயன் பேட்டை அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மச்சபுரீஸ்வரர் எனவும் தாயார் குந்தலாம்பிகை என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

மச்சான் அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளார். அதனை உணர்த்தும் விதமாக கோயிலின் முகப்பில் கருங்கல்லால் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரம் மச்சா அவதாரம். மச்சம் என்றால் மீன்.

ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களை அபகரித்துக் கொண்டு கடலில் விழுந்து கொண்டார். அவரை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் மச்ச அவதாரம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாக இது காணப்படுகிறது. கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு உறைவிடமாக இந்த கோயில் திகழ்ந்து வருகிறது.

வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமான் என்கின்ற காரணத்தினால் இங்கு வந்து வழிபட்டால் மாணவர்களுக்கு கல்வி அறிவு மற்றும் குடும்ப முன்னேற்றம் உள்ளடவைகள் கிடைக்கும் என்பது ஐதீகமாக திகழ்ந்து வருகிறது.

தல வரலாறு

படைப்பின் கடவுளாக திகழ்ந்துவரும் பிரம்மதேவர் ஒரு முறை அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவர் பிரம்மனின் படைப்பு தொழிலுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய வேதங்களை திருடி சென்றார். இதனால் அச்சமடைந்த பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவிடம் சென்று வேண்டினார்.

அந்த சமயம் சத்ய விரதன் என்ற மன்னன் ஒருவர் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவத்தில் ஈடுபட்டு இருந்தார். காலையில் இறைவனுக்கு வழிபாடு செய்யும்பொழுது ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அள்ளிய போது அதில் மீன் குஞ்சு ஒன்று சிக்கியுள்ளது.

உடனே அந்த மீன் குஞ்சு என்னை மறுபடியும் நீரில் விட்டு விடாதீர்கள் பெரிய மீன்கள் என்னை தின்றுவிடும் எனக் கூறியுள்ளது. அதனால் மன்னர் தனது கமெண்டலத்தில் போட்டு எடுத்து வந்து விட்டார். உடனே அந்த மீன் கமண்டலம் அளவிற்கு வளர்ந்து விட்டது.

அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் போட்டார். உடனே அந்த பாத்திரம் அளவிற்கு மீன் வளர்ந்து விட்டது. அதனை ஒரு குளத்தில் விட்டு விட்டார் அந்த குளம் அளவிற்கு மீன் வளர்ந்து விட்டது. அதன்பின் அந்த மீனை எடுத்து கடலில் விட்டார் கடலளவுக்கு அந்த மீன் வளர்ந்தது. வந்திருப்பது மகாவிஷ்ணு என மன்னர் அறிந்து கொண்டார்.

உடனே பரந்தாமரை இந்த உருவம் கொண்டு என்னை வந்து சந்தித்ததற்கு காரணம் என்ன என மன்னர் கேட்டுள்ளார். மீன் வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணு இன்றிலிருந்து ஏழாவது நாள் பிரளயம் ஏற்படப் போகின்றது உலகமே வெள்ளத்தில் மூழ்கும். அந்த ஏழாவது நாளில் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அப்போது அனைத்து ஜீவராசிகளையும் அதில் ஏற்றி விட்டு காப்பாற்றி விடு. அப்போது நான் மற்ற அவதாரம் எடுத்து அந்த படகை சுமந்து அனைத்தையும் காப்பாற்றுவேன் என கூறியுள்ளார்.

விஷ்ணு பகவான் கூறியது போல மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. மன்னனும் பிரளயத்தில் வந்த படத்தின் மீது அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றி விட்டார். உடனே மச்ச அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு பிரளயத்தில் இருந்து கப்பலை மீட்டு நிலத்திற்கு கொண்டு வந்தார். மச்சான் அவதாரத்தின் புராணம் குறித்து மன்னனுக்கு உபதேசம் கூறிவிட்டு மகாவிஷ்ணு உடனே வேகமாக வெள்ள நீருக்குள் நுழைந்தார்.

பின்னர் வேதங்களை திருடி சென்ற அசுரனிடம் போராடி வதம் செய்துவிட்டு வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவரிடம் மச்ச அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு ஒப்படைத்தார்.

அசுரனை அழித்துவிட்டு மச்ச அவதாரத்திலிருந்து சுய உருவம் அடைவதற்காக மகா விஷ்ணு முயற்சி செய்தபோது அசுரனின் வதம் செய்த தோஷம் அவருக்கு பற்றி கொண்டது. அதனால் தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து மகாவிஷ்ணு வழிபாடு செய்தார். அதன் பின்னர் சிவபெருமான் அவருக்கு தோஷ நிவர்த்தி கொடுத்து மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவத்தை மீட்டுக் கொடுத்தார்.

மச்ச அவதாரத்தில் மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்ட தலம் தான் தற்போது நாம் காணக்கூடிய மச்சபுரீஸ்வரர் திருக்கோயில்.

இருக்கும் இடம்

இந்த கோயிலில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பண்டாரவடை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பண்டாரவடையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வாகன வசதிகள் உள்ளன.

 

 

Whats_app_banner