Koneswarar: கருடன் வைத்திருந்த அமுத குடம்.. புற்றிலிருந்த சிவபெருமான்.. தாயைக் காப்பாற்றிய கோணேஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Koneswarar: கருடன் வைத்திருந்த அமுத குடம்.. புற்றிலிருந்த சிவபெருமான்.. தாயைக் காப்பாற்றிய கோணேஸ்வரர்!

Koneswarar: கருடன் வைத்திருந்த அமுத குடம்.. புற்றிலிருந்த சிவபெருமான்.. தாயைக் காப்பாற்றிய கோணேஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2025 06:30 AM IST

Koneswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கோணேஸ்வரர் எனவும் தாயார் பெரிய நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Koneswarar: கருடன் வைத்திருந்த அமுத குடம்.. புற்றிலிருந்த சிவபெருமான்.. தாயைக் காப்பாற்றிய கோணேஸ்வரர்!
Koneswarar: கருடன் வைத்திருந்த அமுத குடம்.. புற்றிலிருந்த சிவபெருமான்.. தாயைக் காப்பாற்றிய கோணேஸ்வரர்!

இது போன்ற போட்டோக்கள்

திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு நமது இந்தியாவில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக சிவபெருமானை குறிப்பிட்டு வருகின்றனர் பக்தர்கள்.

குறிப்பாக மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக பல மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது சிவபக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட சிவபெருமான் கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக பல வரலாறுகளை சுமந்து நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கோயில்களில் மூலவராக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

சோழ மன்னர்களில் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலை மற்றும் சிவ பக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. அந்த கோயிலின் கட்டிடக்கலையை இன்று வரை ஆராய்ச்சியாளர்கள் வியந்து பார்த்த வருகின்றனர்.

இதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கோணேஸ்வரர் எனவும் தாயார் பெரிய நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமானின் மீது தை மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுகின்றது. சுயம்புலிங்கமாக இங்கு சிவபெருமான் காட்சி கொடுத்த வருகிறார். இந்த கோயிலுக்கு கோச்செங்கட் சோழ மன்னன் திருப்பணி செய்துள்ளார்.

மாடக்கோிலாக கட்டப்பட்ட இந்த கோயிலின் சோழர்கள் கட்டியுள்ளனர். சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274 சிவபெருமான் கோயில்களில் இது 157வது தலமாக திகழ்ந்து வருகின்றது. கோயிலின் பிரகாரத்தில் குடவாயிற்குமரன் இன்று திருநாமத்தில் முருக பெருமான் காட்சி கொடுத்த வருகிறார். இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடி இருக்கின்றார்.

இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்க முடியாமல் இருக்கும் பிள்ளைகள் இங்கு வந்து வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பிரம்மதேவர் தனது படைப்புக்குரிய வேதங்களை அமுத குடத்தில் வைத்து பிரளயத்தில் விட்டு விட்டார். அந்த அமுத குடம் வெள்ளத்தில் மிதந்து அடித்துச் செல்லப்பட்டது. மீண்டும் உயிர்களைப் படைக்க வேண்டும் என்பதற்காக தென்திசை நோக்கி வந்த அந்தக் குடத்தின் மீது வேடன் வடிவில் வந்த சிவபெருமான் அம்பை எய்தார்.

அமுத குடம் உடைந்து பல பாகங்களாக சிதறி விழுந்தது. பாகங்கள் சிதறி விழுந்த அனைத்து இடங்களிலும் சுயம்புலிங்கமாக சிவபெருமான் எழுந்தருளினார். குடத்தின் வாய் பக்கம் தற்போது கோயில் இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது. இந்த இடத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சி கொடுத்தார். அதன் காரணமாக இந்த ஊர் குடவாசல் என அழைக்கப்படுகிறது. பின்வரும் காலங்களில் அந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது.

அதற்குப் பிறகு பிற்காலத்தில் சத்ரு என்ற ஒருவரின் சூழ்ச்சியின் காரணமாக கருடனின் தாயார் விநதை அவருக்கு அடிமையாக இருந்து வந்தார். தனது தாயார் விநதையை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வேண்டும் என கருடன் தேவலோகத்திற்கு சென்று அமுத குடத்தை எடுத்து வந்தார்.

அப்போது தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் இறங்கி உள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த அசுரன் ஒருவன் கருடனிடம் அமுதக் கூடத்தை பறிக்க முயற்சி செய்து சண்டை போட்டார். கருடன் அந்த அமுத கூடத்தை புற்றின் மீது வைத்து விட்டு அசுரனோடு சண்டையிட்டார். அதன் பின்னர் அந்த அசுரனை வென்றுவிட்டு அமுத குடத்தை எடுக்க முயற்சி செய்யும்பொழுது அமுத குடம் புற்றுக் கொள் புதைந்து கிடந்தது.

கருடன் தனது அலகால் அந்த இடத்தை கீறினார் அதன் பின்னர் அடியில் லிங்கம் இருப்பதை அறிந்து கொண்டார். அதன் பின்னர் சிவபெருமான் கருடனுக்கு காட்சி கொடுத்தார். தனது நிலை குறித்து சிவபெருமானிடம் கருடன் தெரிவித்தார். அதன் பின்னர் சிவபெருமான் அடிமைத்தனத்திலிருந்து கருடனின் தாயை மீட்டுக் கொடுத்து இருவருக்கும் அருள் ஆசி வழங்கினார். அதன்பின்பு கருடனே இந்த கோயிலை எழுப்பியதாக ஐதீகம். தற்போதும் கருடனின் கீறல் லிங்கத்தின் மீது இருப்பதாக கூறப்படுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்