தன்னை அர்ப்பணித்த சேக்கிழார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. அப்படியே அமர்ந்த கந்தழீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தன்னை அர்ப்பணித்த சேக்கிழார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. அப்படியே அமர்ந்த கந்தழீஸ்வரர்

தன்னை அர்ப்பணித்த சேக்கிழார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. அப்படியே அமர்ந்த கந்தழீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 14, 2024 07:00 AM IST

Kandhazheeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் சென்னை மாவட்டம் குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் கந்தழீஸ்வரர் எனவும் தாயார் நகைமுகை வள்ளி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தன்னை அர்ப்பணித்த சேக்கிழார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. அப்படியே அமர்ந்த கந்தழீஸ்வரர்
தன்னை அர்ப்பணித்த சேக்கிழார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. அப்படியே அமர்ந்த கந்தழீஸ்வரர்

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் வானுயர்ந்து காணப்படுகின்றன. மனித இனம் தோன்றிய பிறகு சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் மன்னர்கள் சிவபெருமானுக்கு பிரம்மாண்ட கோயில்களை எழுப்பி வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானின் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக கலை நயமிக்க மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக காணப்படுகின்றன.

பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் இருவரும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் சிவபெருமானை இவர்கள் அனைவரும் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மிகப்பெரிய சோழன் நாசத்துக்கு வந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் இன்று வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதுபோல பாண்டியர்கள் கட்டிய மீனாட்சி அம்மன் திருக்கோயில் இன்று வரை பிரம்மாண்ட கோயிலின் அம்சமாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படுகின்றன. திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் சென்னை மாவட்டம் குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் கந்தழீஸ்வரர் எனவும் தாயார் நகைமுகை வள்ளி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

திருபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜராஜனின் ஆட்சியில் 1241 ஆம் ஆண்டில் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் நாகத்திலிருந்து வந்த கிருஷ்ணதேவராயரும் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கோயிலின் பிரகாரத்தில் லிங்கத்தின் மீது காலை வைத்து கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்பர் நாயனார் காட்சி கொடுக்கும் ஓவியம் காணப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபட்டால் அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கோயிலுக்கு அருகே சேக்கிழார் என தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

மிகப்பெரிய நூலாக திகழ்ந்துவரும் பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார். இவர் நதிக்கரையில் இருக்கக்கூடிய அனைத்து கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். காவிரி அதன் பின்னர் பாலாறு உள்ளிட்ட நதிக்கரைகளில் இருக்கக்கூடிய சிவபெருமானை வணங்கி விட்டு குசஸ்தலை ஆறு பாயும் ஊரை சேக்கிழார் நெருங்கி சென்றுள்ளார்.

அப்போது அந்த இடத்தில் மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய சிவபெருமானின் கோயிலைக் கண்டுள்ளார். வாழை மரம் தென்னை மரம் உள்ளிட்டவைகள் அதிகம் வளர்ந்து காணப்படும் சோலைகளுக்கு மத்தியில் இந்த கோயில் அமைந்துள்ளது. மழையின் அடிவாரத்தில் இறைவனை சேக்கிழார் தரிசனம் செய்துவிட்டு அங்கேயே சிறிது காலம் தங்கி செல்லலாம் என சிந்தித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் பிரம்மாண்ட சிவலிங்க மூர்த்தியாக காட்சி கொடுத்த சிவபெருமானின் கண்டு தன்னை அவருக்கு அர்ப்பணித்தார். சிந்தனைகள் முதல் தன்னிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தார்.

திடீரென ஒரு நாள் சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். அந்த கணமே சேக்கிழார் இருந்த கர்வம் தொலைந்து போனது. சிவபெருமானை பார்த்தவுடன் தான் என்று எண்ணம் தகர்ந்து போய் மெய்சிலிர்த்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானை பார்த்தவுடன் தனது கர்வம் மற்றும் சிறுத்தை அளித்த கந்தழீஸ்வரர் ஸ்வரர் எனக் கூறி அப்படியே கீழே விழுந்து வணங்கினார்.

கந்தன் என்றால் பற்றி கொள்ளுதல் என்று பொருள்படும். தேவையில்லாத விஷயங்களில் இருந்த தனது பற்றுகளை நீக்கியதன் காரணமாக கந்தழீஸ்வரர் இந்த திருநாமத்தை சேக்கிழார் அவருக்கு சூட்டினார்.

Whats_app_banner