Lord Siva: ஜடாயு வழிபட்ட சிவலிங்கம்.. சோழர்கள் கால கல்வெட்டுகள்.. அருள் புரிந்த ஜடாயுபுரீஸ்வரர்..!
Lord Siva: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மன்னார்குடியில் இருக்கும் அருள்மிகு ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஜடாயுபுரீஸ்வரர் எனவும் தாயார் சௌந்தரநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Lord Siva: உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரம்மாண்ட பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
அப்படிப்பட்ட மன்னர்கள் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை போட்டி போட்டுக் கொண்டு கட்டி வைத்துச் சென்றுள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
சோழ மன்னர்களில் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலைக்குச் சான்றாக திகழ்ந்து வருகின்றது. இதுபோல எத்தனையோ வரலாறுகளை சுமந்து பிரம்மாண்ட கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மன்னார்குடியில் இருக்கும் அருள்மிகு ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஜடாயுபுரீஸ்வரர் எனவும் தாயார் சௌந்தரநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
மன்னார்குடியில் இருந்து கழுவத்தூர் என்ற கிராமத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் காணப்படுகிறது. கோயில் சிதலமடைந்து காணப்பட்டாலும் இந்த கோயிலின் மூலவர் சிலைகள் அனைத்தும் அப்படியே இருந்தன. அதன் பின்னர் சுத்தம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்து திருப்பணிகள் நடைபெற்றன.
மனித வடிவில் இருக்கக்கூடிய ஜடாயு சிலை இங்கு காணப்படுகின்றன. கருவறையின் தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி காணப்படுகிறார்.
இந்த கோயிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட சிம்மாசனத்தில் தட்சணாமூர்த்தி காட்சி கொடுத்து வருகிறார். இந்த இடத்தில் ஒரு ராசியை கூறி வழிபட்டால் அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தல வரலாறு
வனவாசத்திலிருந்து சீதையை இராவணன் கடத்திச் சென்றார். அப்போது பறவைகளின் அரசனாக திகழ்ந்து வந்த ஜடாயு ராவணனை வழிமறித்து தடுத்தார். இதில் கோபம் கொண்ட ராவணன் ஜடாயு இறக்கைகளை வெட்டி வீழ்த்தினார். பெருத்த காகத்தோடு ஜடாயு கீழே விழுந்துவிட்டார்.
அதன்பின்னர் சீதையை தேடி வந்த ராமனிடம் இராவணன் சீதையை கடத்திச் சென்ற விஷயத்தை ஜடாயு கூறிவிட்டு அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். உடனே ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கரியை செய்து வைத்தார்.
இந்த பகுதியில் தங்கி இருந்த ஜடாயு லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளார். அதன் காரணமாக அந்த லிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொடுக்கப்பட்டது.
இந்த இந்த கோயில் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறுகையில், இந்த கோயில் 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கண்டுபிடித்துள்ளனர்.
இருக்கும் இடம்
மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் கழுவத்தூர் கிராமம் உள்ளது அங்கு இந்த ஜடாயுபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்