சித்தரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சித்தரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்

சித்தரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 19, 2024 06:00 AM IST

Aadhi Saktheeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் கோபுராபுரம் அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிசக்தீஸ்வரர் எனவும் தாயார் ஆதிசக்தீஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சித்திரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்
சித்திரை சோதித்த அரசன்.. வேலையைக் காட்டிய நந்தி பாராயணர்.. கோயிலில் அமர்ந்த ஆதிசக்தீஸ்வரர்.. பார்வதி தேவியின் தீர்த்தம்

அதற்குப் பிறகு மன்னர்கள் ஆட்சி காலம் வந்தது. அவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வழிபட்டு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கான மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் சிவபெருமானின் அடிமையாக அனைத்து மக்களும் வாழ்ந்து வந்துள்ளனர். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் சிவபெருமானின் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக காலத்தால் அளிக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பாண்டிய மன்னன் மதுரையில் கட்டிய மீனாட்சி அம்மன் திருக்கோயில். மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் உள்பட அனைத்து கோயில்களும் வரலாற்றின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல கோயில்களின் கட்டிடக்கலையை கண்டு பல ஆராய்ச்சியாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த கட்டிடக்கலை எப்படி சாத்தியம் என்ற கேள்வி இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் கோபுராபுரம் அருள்மிகு ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிசக்தீஸ்வரர் எனவும் தாயார் ஆதிசக்தீஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தன சிறப்பு

உங்க வீட்டுல இருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்து அருளியவர். மேலும் பல கோயில்களில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானின் லிங்கத்திருமேனியில் நெற்றியில் சூரிய ஒளி படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் நந்தி பாராயணம் என்ற சித்தர் குஷ்ட நோய் ஏற்பட்டு இந்த தீர்த்த குளத்தில் வழிபட்டு குணமடைந்து ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

பார்வதி தேவி வழிபாட்டிற்கு நந்தி தேவர் உதவி செய்த காரணத்தினால் இந்த கோயில் கோபர்வதம் என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் வடக்கு பக்கத்தில் உள்ள கங்கை தீர்த்தம் பார்வதி தேவி வழிபாட்டிற்கு பயன்படுத்தியது என கூறப்படுகிறது. இதனால் இந்த இந்த தீர்த்தம் நோய் நீக்கும் மருந்தாக விளங்கி வருகின்றது என பக்தர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு

நந்தி பாராயணர் என்ற சித்தர் கோபுராபுரம் என்ற ஊரில் பல காலம் தவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு சமயம் அந்த பக்கமாக வந்த அரசன் ஒருவர் தன்னோடு வந்த பரிவாரங்களை நிஷ்டையில் ஆழ்த்தினால் நீங்கள் உண்மையான சித்தர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். அடுத்த நொடியே நந்தி பாராயணரின் பார்வை பட்ட அனைவரும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டனர்.

இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த அரசன் தனது தவறை உணர்ந்து சித்தரிடம் மன்னிப்பு கேட்டார். உடனே அனைவரையும் இயல்பு நிலைக்கு மாற்றும் படி கோரிக்கை விடுத்தார் அரசன். நந்தி பாராயணர் அனைவரையும் இயல்பு நிலைக்கு மாற்றினார். அதன் பின்னர் நந்தி பாராயணர் கூறியபடி அரசன் ஆதிசக்தீஸ்வரருக்கு கோயில் ஒன்றை கட்டினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner