இந்த கதை கேளுங்க.. சம்பவம் செய்த சிவபெருமான்.. வியந்த பல்லவ மன்னன்.. அமர்ந்த தர்மேஸ்வரர்..!
Dharmeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் தர்மேஸ்வரர் எனவும் தாயார் வேதாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
Dharmeswarar: கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகம் முழுவது மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் சிவபெருமான் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். உலகெங்கிலும் வாழக்கூடிய இந்திய மக்கள் சிவபெருமானுக்கு கோயில்கள் எடுத்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய சிவ பக்தர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். குறிப்பாக இந்தியாவின் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எங்கு திரும்பினாலும் சிவமயம் என்று கூறும் அளவிற்கு இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் இருந்து வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மண்ணுக்காக போரிட்டு வந்த மன்னர்கள் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை போட்டி போட்டுக் கொண்டு கட்டிச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்த கம்பீரமாக காணப்படுகின்றன.
சில கட்டிடக் கலையை பார்த்து தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் என்றும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டிடக்கலையின் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
ஒரு பக்கம் பாண்டியர்கள், மறுபக்கம் பல்லவர்கள் என அனைவரும் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் தர்மேஸ்வரர் எனவும் தாயார் வேதாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
தல சிறப்பு
இந்த கோயிலில் சிவபெருமான் மற்றும் அம்பாள் இருவரும் தனி தனி சன்னதிகளில் அருள் பாலித்து வருகின்றனர். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அநீதிகள் அனைத்திற்கும் நீதி கேட்டு இந்த சிவபெருமானின் பக்தர்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
நீதி வழங்கும் நாயகனாக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய தர்மேஸ்வரர் விளங்கி வருகின்றார். வேதங்களின் பீடத்தில் அம்பாள் வேதநாயகி நின்ற கோலத்தில் இந்த கோயிலில் காட்சி கொடுத்து வருகிறார்.
தல வரலாறு
இந்த பகுதியை முன்பு ஒரு காலத்தில் பல்லவ மன்னன் ஒருவர் ஆட்சி செய்து கொண்டுள்ளார். அந்த மன்னன் மிகப்பெரிய சிவ பக்தராக வந்துள்ளார். தான தர்மங்கள் செய்வதில் சிறந்த மன்னனாக சிவபெருமானின் பக்தனாக திகழ்ந்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்பது இந்த பல்லவ மன்னனின் ஆசையாக இருந்து வந்துள்ளது.
பல்லவ மன்னனுக்கு எந்த இடத்தில் எப்படி கோயில் எழுப்புவது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. ஒரு சமயம் சிவபெருமான் அடியார் வேடத்தில் பல்லவ மன்னனை சந்திக்க வந்துள்ளார். அப்போது நான் ஒரு பரம ஏழை எனக்கு ஏதாவது தர்மம் செய்யுங்கள் என பல்லவ மன்னனை சிவபெருமான் கேட்டுள்ளார்.
உங்களுக்கு என்ன வேண்டும் என பல்லவ மன்னன் சிவபெருமானிடம் கேட்டுள்ளார். உடனே அடியாராக வந்த சிவபெருமான் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி அதனை தனக்கு தானமாக தரும்படி கேட்டுள்ளார். வியப்பில் ஆழ்ந்த பல்லவ மன்னன் வந்திருப்பது சிவபெருமான் என உணர்ந்தார்.
உடனே சிவபெருமான் தனது சுய ரூபத்தைக் காட்டி மன்னனுக்கு ஆசிர்வாதத்தை கொடுத்துள்ளார். உடனே சிவபெருமான் சுட்டிக்காட்டில் இடத்தில் பல்லவ மன்னன் கோயில் எழுப்பி அங்கு ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு தர்மேஸ்வரர் என்ற திருநாமத்தை கொடுத்தார். தர்மம் கேட்டு தர்மத்தை கொடுத்த நாயகன் என்கின்ற காரணத்தினால் இவர் தர்மேஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.