சாபத்தால் பூனையாக மாறிய ஐராவதம்.. விமோசனம் கேட்ட இந்திரன்.. சாபத்தை நீக்கிய ஐராவதீஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சாபத்தால் பூனையாக மாறிய ஐராவதம்.. விமோசனம் கேட்ட இந்திரன்.. சாபத்தை நீக்கிய ஐராவதீஸ்வரர்!

சாபத்தால் பூனையாக மாறிய ஐராவதம்.. விமோசனம் கேட்ட இந்திரன்.. சாபத்தை நீக்கிய ஐராவதீஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 29, 2024 07:00 AM IST

Airavatesvara: திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டம் அபிஷேகபுரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்.

சாபத்தால் பூனையாக மாறிய ஐராவதம்.. விமோசனம் கேட்ட இந்திரன்.. சாபத்தை நீக்கிய ஐராவதீஸ்வரர்!
சாபத்தால் பூனையாக மாறிய ஐராவதம்.. விமோசனம் கேட்ட இந்திரன்.. சாபத்தை நீக்கிய ஐராவதீஸ்வரர்!

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன. இந்து சமயத்தின் படி கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். தனக்கென்று ஒரு உருவம் இல்லாமல் லிங்க திருமேனியாக அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மனிதனாகப் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சிவபெருமானை எண்ணி வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் வாழ்ந்து மறைந்தும் உள்ளனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அதே போல சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளனர்.

சிற்பக்கலைகளை வெளிப்படுத்தும் விதமாக மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி அதில் மூலவராக சிவபெருமானை அனைவரும் வணங்கி வந்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானம் உயர்ந்து காணப்படுகிறது.

சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்கள் எப்படி கட்டப்பட்டது என பல ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களில் தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலும் ஒன்று.

திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டம் அபிஷேகபுரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் மூலவராக வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஐராவதீஸ்வரர் எனவும் தாயார் அபிஷேக வள்ளி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலில் கிழக்கு நோக்கி சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அர்த்தமண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் வரலாறு செதுக்கப்பட்டு காணப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மற்றும் அம்பிகை இருவரையும் வேண்டிக் கொண்டால் உடலில் ஏற்பட்டு வரும் பிணிகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என நம்பிக்கை கூறுகின்றனர் பக்தர்கள். மேலும் அனைத்து மங்கள யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய தோஷம் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

அபிஷேகத்தின் பிரியனாக விளங்கக்கூடிய சிவபெருமானின் பெயரிலேயே இந்த ஊர் அபிஷேகபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் சோழர்கள் கால கட்டிடக்கலையில் உருவானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரராஜேந்திர சோழன் இந்த கோயில் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திரனின் யானையான ஐராவதத்தின் சாபத்தை போக்கிய கோயில் என்கின்ற காரணத்தினால் இங்கு வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஐராவதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இந்திரன் வாகனமான ஐராவதம் வனப்பகுதியை சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஐராவதத்தின் மூலம் அங்கிருந்து முனிவரின் தவம் கலைந்து விட்டது. கோபத்தில் எழுந்த முனிவர் யானையை பூனையாக மாற வேண்டும் என சாபமிட்டார். மீண்டும் அந்த முனிவர் தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

நடந்த விபரங்கள் அனைத்தையும் நாரதர் மூலம் இந்திரன் தெரிந்து கொண்டார். தனது வாகனமான ஐராவதம் பூனை உருவத்தில் இருந்து தனது யானை உருவத்திற்கு வர வேண்டும் என பாவ விமோசனம் கேட்டு இந்திரன் பார்வதி தேவியை வணங்கினார்.

அபிஷேக புரத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு ஒரு மண்டலம் அங்கு தங்கி இருந்து தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு நீரினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பழைய உருவம் கிடைக்கும் என பார்வதி தேவி இந்திரனிடம் கூறினார்.

அப்படியே சிவபெருமானுக்கு பார்வதி தேவி கூறியபடி நேர்த்திக்கடன் செலுத்தி ஐராவதம் தனது பழைய உருவத்தை பெற்றது. ஐராவதத்திற்கு சாப விமோசனம் கொடுத்த காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஐராவதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்