Abimuktheewara: முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தமா இது.. பாவங்களால் நிறைந்த கங்கா தேவி.. மோட்சம் தந்த அபிமுக்தீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Abimuktheewara: முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தமா இது.. பாவங்களால் நிறைந்த கங்கா தேவி.. மோட்சம் தந்த அபிமுக்தீஸ்வரர்

Abimuktheewara: முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தமா இது.. பாவங்களால் நிறைந்த கங்கா தேவி.. மோட்சம் தந்த அபிமுக்தீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2025 06:30 AM IST

Abimuktheewara: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அபிமுக்தீஸ்வரர் எனவும் தாயார் அபினாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Abimuktheewara: முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தமா இது.. பாவங்களால் நிறைந்த கங்கா தேவி.. மோட்சம் தந்த அபிமுக்தீஸ்வரர்
Abimuktheewara: முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தமா இது.. பாவங்களால் நிறைந்த கங்கா தேவி.. மோட்சம் தந்த அபிமுக்தீஸ்வரர்

இது போன்ற போட்டோக்கள்

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன் வசம் வைத்திருக்கின்றார். உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் சிவபெருமான்.

குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை பல வரலாறுகளை தன் வசம் வைத்து கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அபிமுக்தீஸ்வரர் எனவும் தாயார் அபினாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இது 155 வது தலமாக விளங்கி வருகிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரையில் இருக்கக்கூடிய தலங்களில் இது 92 வது தலமாக விளங்கி வருகிறது. முருகப்பெருமான் எத்தனையோ கோயில்களில் சிவபெருமானை நோக்கி வழிபாடுகள் செய்துள்ளார்.

அதுபோல முருக பெருமான் இந்த கோவிலில் தங்கி தவம் செய்து தனது பெயரால் தீர்த்தம் உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார். அதன் பின்னர் சிவபெருமானை வழிபட்டு இங்கு வேலாயுதமும், அறிவாற்றலும் பெற்றார் என கூறப்படுகிறது.

அசுரர்கள் மற்றும் தேவர்கள் இருவரும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த பொழுது அதனை அசுரர்களின் கையில் கிடைக்காமல் விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்தார். தனது வேலையை முடித்த பிறகு மீண்டும் விஷ்ணு பகவான் தனது சுய உருவத்தை பெறுவதற்காக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானின் வழிபட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதன் காரணமாக விஷ்ணு பகவானுக்கு இங்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

அனைவரது பாவங்களையும் நீக்கக்கூடிய கங்காதேவி ஒரு முறை சிவபெருமானிடம், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களின் பாவத்தை போக்கிக் கொள்ள என்னிடம் வருகிறார்கள். அவர்களின் பாவங்கள் அனைத்தும் என்னுடன் சேர்ந்து விடுகின்றன. அதன் காரணமாக அந்த அனைத்து பாவங்களையும் போற்றி தனக்கு அருள் புரிய வேண்டுமென கங்கா தேவி கேட்டுக்கொண்டார்.

கங்காதேவியின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் சிவபெருமான். பின்னர் காவிரி தென்கரையில் இருக்கக்கூடிய அபிமுக்தீஸ்வரர் கோயிலில் முருக பெருமான் உருவாக்கிய தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் உனது பாவங்கள் நீங்கும் என சிவபெருமான் கூறினார். அதன்படி கங்காதேவி இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டு தனது பாவங்களை போக்கிக் கொண்டார்.

அதன் காரணமாக இங்கு வீற்றிருக்கக்கூடிய அம்மன் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுத்து வருகிறார். முக்கியமாக குறிப்பிட்ட சில கோயில்களில் அமர்ந்து கோலத்தில் காட்சி கொடுப்பது போல் இந்த கோயிலிலும் அமர்ந்த காலத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்