Masi Magam Festival 2025: வந்துவிட்டது மாசி மகம்.. ஜென்ம பாவங்களை போக்கும் நாள்.. சிவபெருமானோடு வரும் முருகப்பெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Masi Magam Festival 2025: வந்துவிட்டது மாசி மகம்.. ஜென்ம பாவங்களை போக்கும் நாள்.. சிவபெருமானோடு வரும் முருகப்பெருமான்!

Masi Magam Festival 2025: வந்துவிட்டது மாசி மகம்.. ஜென்ம பாவங்களை போக்கும் நாள்.. சிவபெருமானோடு வரும் முருகப்பெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 12, 2025 06:00 AM IST

Masi Magam Festival 2025: மாசிமகம் திருநாளன்று கும்பகோணத்தில் இருக்கக்கூடிய மகாமகம் குளத்தில் புனித நீராடல் நிகழும். இதில் கலந்து கொள்வதற்கு பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

Masi Magam Festival 2025: வந்துவிட்டது மாசி மகம்.. ஜென்ம பாவங்களை போக்கும் நாள்.. சிவபெருமானோடு வரும் முருகப்பெருமான்!
Masi Magam Festival 2025: வந்துவிட்டது மாசி மகம்.. ஜென்ம பாவங்களை போக்கும் நாள்.. சிவபெருமானோடு வரும் முருகப்பெருமான்!

இது போன்ற போட்டோக்கள்

தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருவதுதான் மாசி மாதம். இந்த மாதத்தில் பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த மாசி மாதத்தில் முதன்மையாக கருதப்படுவது மகா சிவராத்திரி திருநாள். அதற்குப் பிறகு மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுவது மாசி மகம்.

இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரம் திருநாள் தான் மாசி மகம் என கொண்டாடப்பட்டு வருகிறது. இது பல்வேறு விதமான ஆன்மீக சிறப்புகளை கொண்ட நாளாக திகழ்ந்து வருகின்றது. அனைவரது பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்களை கொடுக்கும் மாதமாக இந்த மாசி மாதம் திகழ்ந்து வருகின்றது.

இந்த மாசிமகம் திருநாளன்று கும்பகோணத்தில் இருக்கக்கூடிய மகாமகம் குளத்தில் புனித நீராடல் நிகழும். இதில் கலந்து கொள்வதற்கு பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

மாசி மகம் சிறப்புகள்

இந்த மாசி மாதத்தில் நதிகள் கோயில் குளங்கள் கடல் என எந்த நீர் நிலைகளில் சென்று புனித நீராடினாலும் அது மகத்தான பலன்களை கொடுக்கும், ஜென்ம பாவங்களை போக்கும் என்பது ஐதீகமாகும். இந்த திருநாளில் கங்கை உள்பட அனைத்து புண்ணிய நதிகளும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒன்று சேர்வதாக ஐதீகம். அதனால் இந்த மாசி மகம் திருநாளில் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணிய ஆசி கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

மாசி மகம் முக்கிய நிகழ்வுகள்

இந்த மாசி மகம் திருநாளில் தான் தர்ஷனின் மகளாக பார்வதி தேவி அவதரித்தார் எனக் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மாசி மகம் திருநாளில் புனித நீராடினால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

வருண பகவானுக்கு சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்த நாளாக இந்த மாசி மகம் திருநாள் திகழ்ந்தவர்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரையும் வழிபடுவதற்கு சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. இந்த திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என்பது பல ஜென்ம பாவங்களை போக்கும் என்பது ஐதீகமாகும்.

மாசிமகம் வழிபாடு

இந்த மாசிமுகம் திருநாளில் சிவபெருமான் மட்டுமல்லாது முருகப்பெருமானுக்கும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை முருக பெருமான் உபதேசம் செய்த நாளாக மாசி மகம் நாள் இருந்து வருகின்றது.

இந்த மாசி மகம் திருநாளில் சிவபெருமான், பார்வதி தேவி, முருக பெருமான், விஷ்ணு பகவான், முன்னோர்கள் குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம் என கூறப்படுகிறது. மாசிமகம் திருநாளன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

2025 ஆம் ஆண்டு மாசி மகம்

இந்த 2025 ஆம் ஆண்டு மாசி மகம் திருநாள் மார்ச் 12ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. மாசி மகம் திருநாளன்று அதிகாலை 3:53 மணி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி காலை 5:09 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது.

அதேசமயம் மார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று காலை 10 50 மணி தொடங்கி சதுர்தசி திதி தொடங்குகின்ற காரணத்தினால் சிவ வழிபாடு செய்வது உங்களுக்கு அதிக சிறப்பை தரும் என கூறப்படுகிறது. இந்த சதுர்தசி திதி சிவபெருமானுக்கு உரிய திதியாக கருதப்படுகிறது. இந்த திதி வேலையில் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். முடிந்தால் நீர்நிலைகளில் புனித நீராடுவது பல நன்மைகளை கொடுக்கும் என ஆன்மீகம் கூறுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner