தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மூவேந்தர்களை சேர்த்த தலம்.. ராவணன் தம்பிக்கு காட்சி கொடுத்தார்.. சிறுவனுக்கு தலை சாய்த்த கரபுநாதர்

HT Yatra: மூவேந்தர்களை சேர்த்த தலம்.. ராவணன் தம்பிக்கு காட்சி கொடுத்தார்.. சிறுவனுக்கு தலை சாய்த்த கரபுநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 06:40 AM IST

Karapuranathar Temple: மனிதர்கள் உருவானதற்கு முன்பாகவே சிவபெருமான் மற்ற உயிரினங்களால் வழிபாடு செய்யப்பட்டு போற்றப்பட்டு வந்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் உத்தமசோழபுரம் அருள்மிகு கரபுநாதர் திருக்கோயில்.

மூவேந்தர்களை சேர்த்த தலம்.. ராவணன் தம்பிக்கு காட்சி கொடுத்தார்.. சிறுவனுக்கு தலை சாய்த்த கரபுநாதர்
மூவேந்தர்களை சேர்த்த தலம்.. ராவணன் தம்பிக்கு காட்சி கொடுத்தார்.. சிறுவனுக்கு தலை சாய்த்த கரபுநாதர்

சோழ மன்னர்களின் ஆசான குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று காட்சி அளித்து வருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு விதமான கோயில்கள் எழுப்பப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சில கோயில்கள் எப்போது கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை தெரியாத நிலை இருந்து வருகிறது. மனிதர்கள் உருவானதற்கு முன்பாகவே சிவபெருமான் மற்ற உயிரினங்களால் வழிபாடு செய்யப்பட்டு போற்றப்பட்டு வந்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் உத்தமசோழபுரம் அருள்மிகு கரபுநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சி கொடுத்து வருகிறார் இவர் ஒருபுறம் சாய்ந்தவாறு காட்சி கொடுத்து வருகிறார் இந்த கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கோயிலுக்கு அருகே ஓடக்கூடிய திருமணிமுத்தாற்றில் இருந்து பாண்டிய மன்னர்கள் முத்து எடுத்து அதனை மதுரை மீனாட்சிக்கு மாலையாக அணிவித்ததாக கூறப்படுகிறது அந்த மாலை இன்னும் தாய் மீனாட்சி அம்மன் கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் சேரர் சோழர் பாண்டியர் ஆகியோரின் மூன்று சிலையும் நிறுவப்பட்டுள்ளன. அதன் அருகே ஒளவையார் சிலை நிறுவப்பட்டுள்ளது தமிழ்நாட்டிலேயே இதுதான் பெரிய ஔவையார் சிலை என கூறப்படுகிறது. இலக்கியங்களில் பாடப் பெற்ற கோவில்களில் ஒன்றாக இந்த கரபுநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது.

இந்த கோயிலில் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோருக்கு அர்த்தமண்டபக் கல் தூணில் வில், மீன், புலிக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கரபுநாதர் சிவலிங்கத்திற்கு குணசீலன் என்ற சிறுவன் அபிஷேகம் செய்து வந்தார். சிவலிங்கம் பெரியதாக இருந்துள்ளது. அவருக்கு மாலை அணிவிக்க முடியாத காரணத்தினால் சிறுவன் கதறி அழுதுள்ளார். அதற்குப் பிறகு சிவபெருமான் அந்த சிறுவனுக்காக தலை சாய்ந்து கொடுத்தார். அதனால் இன்றும் கோயிலில் லிங்கம் ஒருபுறம் சாய்ந்தவாறு காட்சி அளித்து வருகிறது.

ராவணனின் சகோதரனான கரதூஷணன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அவர் அக்னி பிரவேசம் செய்யும் நேரத்தில் நில் என்ற அசரீரி கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றார் ராவணனின் சகோதரர். சிவபெருமான் அவருக்கு நேரடியாக காட்சி கொடுத்தார். அதனால் இந்த இறைவனுக்கு கரபுநாதர் என பெயர் வந்துள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரத்திலும், திருமூலர் எழுதிய திருமந்திரத்திலும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழிலும் இந்த கரபுநாதர் பற்றி செய்யுள் உள்ளன. இந்தக் கோயிலில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் அனைவரும் தங்கி இறைவழிபாடு செய்ததாக கல்வெட்டுகள் மூலம் கூறப்படுகிறது. இது சோழன் தங்கிய இடம் என்ற காரணத்தினால் இந்த இடத்திற்கு உத்தமசோழபுரம் என்று பெயர் வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel