HT Yatra: முனிவரை தீண்டிய ஐராவதம்.. சாபத்தில் பூனையான கொடுமை.. விமோசனம் கொடுத்த ஐராவதீஸ்வரர்
Arulmiku Airavatesvara Temple: எத்தனையோ கோயில்கள் வரலாறுகளை சுமந்து கொண்டு கம்பீரமாக இன்று வரை காலம் கடந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிஷேகபுரம் அருள்மிகு ஐராதீஸ்வரர் திருக்கோயில்.

Arulmiku Airavatesvara Temple: உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் இருக்கும் இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
மன்னர்கள் தொடங்கி சாமான்ய மக்கள் வரை அனைவரும் சிவபெருமானின் பக்தர்களாக திகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. வெவ்வேறு நாட்டை ஆண்ட மன்னர்களும் இந்த சிவபெருமானுக்கு பக்தர்களாக இருந்து வந்துள்ளன குறிப்பாக சோழர்கள் சிவபெருமானை குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்துவந்துள்ளனர்.
தங்களின் தலைசிறனை காட்டுவதற்காகவே தனது குல தெய்வத்தை வைத்து மிகப்பெரிய கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். எத்தனையோ கோயில்கள் வரலாறுகளை சுமந்து கொண்டு கம்பீரமாக இன்று வரை காலம் கடந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்றுதான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிஷேகபுரம் அருள்மிகு ஐராதீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
மூலவராக வீற்றிருக்கக்கூடிய ஐராதீஸ்வரர் கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுத்து வருகிறார். இந்த தலத்தின் வரலாறு ஆனது புடைப்பு சிற்பமாக கோயிலின் வாசலில் செதுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மண்டப தூண்களில் துவார விநாயகர் சிற்பங்களும் உள்ளன. குழந்தைகளை விழுங்கக் கூடிய முதலை சிற்பங்களும் உள்ளன.
குறிப்பாக லிங்கத் திருமேனியாக காட்சி கொடுக்கும் ஐராவதீஸ்வருக்கு நாகம் பூஜை செய்வது போன்ற சிற்பங்களும் உள்ளன. குறிப்பாக அர்த்தமண்டபத்தில் ராமரின் சிற்பம் உள்ளது.
இந்த திருக்கோயிலில் நால்வரோடு சேர்த்து சேக்கிழார்க்கும் சன்னதி இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும். இந்த கோயிலில் கால பைரவர் என தனி சன்னதி அமைக்கப்பட்டு வெகு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் வளாகத்தில் அழகுராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியோடு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயில் விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திருக்கோயிலின் தலவிருட்சமாக மகிழமரம் மற்றும் வில்வமரம் விளங்கி வருகிறது. தனி சன்னதியில் வடக்கு நோக்கி கரங்களைக் கூட்டியபடி ஆஞ்சநேயர் கம்பீரத் தோற்றத்தோடு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
தல வரலாறு
சிவபெருமான் சதாபிஷேக பிரியராக விளங்கி வருகிறார். அதன் காரணமாகவே இந்த ஊருக்கு அபிஷேகபுரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயில் கொங்கு சோழர் கால கட்டடக் கலைகள் உருவாக்கியுள்ளது.
வீர ராஜேந்திர சோழனால் 13 ஆம் நூற்றாண்டுகளில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது என இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திரனின் யானையாக விளங்கி வந்த ஐராவதத்தின் சாபம் நீங்கிய தலம் என்கின்ற காரணத்தினால் இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஐராவதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இந்திரனின் வாகனமாக விளங்கிவரும் ஐராவதம் ஒரு முறை இந்த பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் தவத்தை கலைத்துள்ளது. இதனால் கோபம் கொண்ட முனிவர் யானையை பூனையாக மாற வேண்டும் என சாபமிட்டுள்ளார். அதற்குப் பிறகு தவத்தில் ஆழ்ந்துள்ளார். இதுகுறித்து நாரதரிடம் இந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். பூனையாக மாறிய ஐராவதம் பழைய நிலைமை கொள்ள வேண்டும் என்பதற்காக உமா மகேஸ்வரியை நோக்கி பாவ விமோசனம் கேட்டு ஐராவதம் வழிபாடு செய்துள்ளது.
அபிஷேக புறத்தில் தாங்கள் ஒரு மண்டலம் தங்கி இருந்து தினம்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஐராவதம் பழைய நிலைமைக்கு வரும் என பார்வதி தேவி தெரிவித்துள்ளார். அதன்படியே வழிபாடு செய்து சாப விமோசனம் ஐராவதம் பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
