தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வருத்தத்தில் வணிகர்.. எறும்புகள் காட்டிய பாதை.. பக்தனுக்கு காட்சி தந்த சிதம்பரேஸ்வரர்

HT Yatra: வருத்தத்தில் வணிகர்.. எறும்புகள் காட்டிய பாதை.. பக்தனுக்கு காட்சி தந்த சிதம்பரேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 06:40 AM IST

HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சிதம்பரேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

வருத்தத்தில் வணிகர்.. எறும்புகள் காட்டிய பாதை.. பக்தனுக்கு காட்சி தந்த சிதம்பரேஸ்வரர்
வருத்தத்தில் வணிகர்.. எறும்புகள் காட்டிய பாதை.. பக்தனுக்கு காட்சி தந்த சிதம்பரேஸ்வரர்

HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தனக்கென வைத்திருக்க கூடியவர் சிவபெருமான் இந்தியாவில் அனைத்து மக்களும் சிவபெருமானின் தீவிர பக்தராக திகழ்ந்து வருகின்றனர் அதிகபட்ச பக்தர்களை கொண்ட சிவபெருமான் திரும்பும் திசை எல்லாம் இந்தியாவில் கோயில் கொண்டு ஆசீர்வாதம் செய்து வருகிறார் குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலம் தொடங்கி தற்போது வரை சிவபெருமானுக்கு என தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

சோழர்கள், பாண்டியர்கள் எதிரிகளாக போரிட்டு வந்தாலும் இவர்கள் இருவருமே சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். நாட்டுக்காக போரிட்டது மட்டுமல்லாமல் தங்களது தலைநகத்திற்காகவும் போரிட்டு சிவபெருமானுக்கு பல கோயில்களை கட்டியுள்ளனர். வரலாறுகளை கடந்து இன்று வரை அசைக்க முடியாமல் கம்பீரமாக பல கோயில்கள் நின்று வருகின்றன.

சோழ மன்னர்களில் மிகப்பெரிய மன்னனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றது. இதுபோல எத்தனையோ கோயில்கள் கலைநயத்தோடு கட்டப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சிதம்பரேஸ்வரர் எனவும் தாயார் சிவகாமி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

பங்குனி உத்திர திருநாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியார் இருவருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக இங்கு நடத்தப்படுகிறது. இந்த திருவிழா சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருமண கோரிக்கை இருப்பவர்கள் வைபவ தினத்தன்று சென்று வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருமணத்திற்கு வேண்டுதல் உள்ளவர்கள் சுவாமி மற்றும் தாயார் இருவருக்கும் மாலை மாற்றி அந்த மாலையில் ஒரு மாலையை தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு கோயிலை சுற்றி வளம் வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. பெண்கள் இங்கு பிரசாதமாக கொடுக்கக்கூடிய மஞ்சளை குளித்து பூசிக்கொண்டு வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது அதிகமாக உள்ளது.

தல வரலாறு

இலங்கையில் இருந்து வந்த வணிகர் ஒருவர் ஆண்டுதோறும் சிதம்பரத்தில் இருக்கக்கூடிய நடராஜர் பெருமானை தரிசிப்பதற்காக செல்வார். அன்றைய தினம் மிகப்பெரிய கடும் புயல் மற்றும் மலை ஏற்பட்ட காரணத்தினால் குலசேகரப்பட்டினம் வரை வந்தவர் கப்பலில் அங்கே தொடர்ந்து செல்ல முடியாமல் தங்கிவிட்டார்.

தனக்காக வருத்தப்பட்டு கொண்டிருந்த பக்தனின் நிலை அறிந்த சிவபெருமான் திருவாதிரை கோலத்தில் காட்சி கொடுக்க வேண்டுமென முடிவு செய்துள்ளார். உடனே நீ இருக்கும் இடத்திலிருந்து எறும்புகள் கூட்டம் சாரையாக செல்லும் அந்த பாதையை நோக்கி வந்தால் உனக்கு திரு காட்சி கிடைக்கும் என அசரீரி ஒன்று மனிதருக்கு கேட்டுள்ளது.

எழுந்து சென்ற வணிகர் அதேபோல எறும்புகள் சென்ற பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார் அப்போது அவருக்கு தில்லையில் இருக்கக்கூடிய திருவாதிரை திருக்காட்சி கிடைத்துள்ளது. அந்த இடத்திலேயே வணிகர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்துள்ளார். சுவாமிக்கு சிதம்பரேஸ்வரர் என திருநாமம் சூட்டில் வழிபட்டுள்ளார். அதுதான் தற்போது இருக்கக்கூடிய அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9