HT Yatra: அசுரர்களை அழித்த பார்வதி தேவி.. காரியத்தை நடத்திய விஷ்ணு பகவான்.. இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அசுரர்களை அழித்த பார்வதி தேவி.. காரியத்தை நடத்திய விஷ்ணு பகவான்.. இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்

HT Yatra: அசுரர்களை அழித்த பார்வதி தேவி.. காரியத்தை நடத்திய விஷ்ணு பகவான்.. இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 13, 2024 05:50 AM IST

HT Yatra: எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட தெரியாத அளவிற்கு இன்று வரை கம்பீரமாக பல கோயில்கள் வரலாறுகளை சுமந்து வாழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் இஞ்சிக்குடி அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்.

அசுரர்களை அழித்த பார்வதி தேவி.. காரியத்தை நடத்திய விஷ்ணு பகவான்.. இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்
அசுரர்களை அழித்த பார்வதி தேவி.. காரியத்தை நடத்திய விஷ்ணு பகவான்.. இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்

இது போன்ற போட்டோக்கள்

இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் மண்ணுக்காக மட்டுமல்லாமல் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கோயில்களை கட்டி சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளனர். குறிப்பாக சோழர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட தெரியாத அளவிற்கு இன்று வரை கம்பீரமாக பல கோயில்கள் வரலாறுகளை சுமந்து வாழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் இஞ்சிக்குடி அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் பார்வதீஸ்வரர் எனவும் தாயார் தவக்கோல நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். இந்த திருக்கோயிலின் சூரியன் மற்றும் சந்திரன் இவர்கள் இருவரும் அருகருக காட்சி கொடுத்து வருகின்றன திருமண கோலத்தில் சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் இருவரும் காட்சி கொடுத்து வருவது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லாமல் இருந்த குலோத்துங்க சோழன் அம்பிகையிடம் வேண்டிக்கொண்டு வழிபாடு செய்து வந்துள்ளார். அவருக்கு அதற்குப் பிறகு குழந்தை வரம் கிடைத்துள்ளது. இதனால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனுக்கு அவர் கொலுசு அணிவித்து வழிபாடு செய்துள்ளார். இன்று வரை அம்மனின் காலில் கொலுசு இருப்பது மிகப்பெரிய விசேஷமாகும்.

இந்த திருக்கோயில் விக்ரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இந்த கோயிலில் வந்து வழிபட்டால் பிள்ளை பாக்கியம் திருமண யோகம் உள்ளிட்டவர்கள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு நாகலிங்க பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

பார்வதி தேவி வேண்டுதலுக்கு இணங்க தனது இடப்பக்கத்தில் சிவபெருமான் இடம் கொடுத்த காரணத்தினால் இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் பார்வதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

அம்பரன், அம்பன் என்ற சகோதரர்கள் அசுர குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கொடுமைகள் பல செய்து வந்துள்ளனர். இதனால் கொடுமையை அனுபவித்த தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்துள்ளனர். சம்பவத்தை கேட்டுக்கொண்டு சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்துள்ளார்.

அழகிய பெண்ணாக வடிவம் எடுத்து அசுரர்கள் முன்னே பார்வதி தேவி சென்றுள்ளார். அந்தப் பெண்ணை கண்டு மயங்கிய அசுரர்கள் அவர் பின்னால் சென்றுள்ளனர். திடீரென முதியவராக அந்த இடத்தில் வந்தார் விஷ்ணு பகவான். உடனே அந்த அசுரர்களிடம் உங்களில் யார் வலிமையானவர்களோ அவருக்கு அந்த பெண் கிடைப்பால் என கூறியுள்ளார்.

இதனால் சகோதரர்களாக இருக்கக்கூடிய அசுரர்கள் இருவருக்கும் போட்டி நடந்துள்ளது. இதில் அம்பன் அழிந்துவிட்டார். அம்பரன் வெற்றி கண்டார். அந்தப் பெண்ணை தேடி சென்ற பொழுது இளம்பெண்ணாக இருந்த பார்வதி தேவி மகாகாளியாக உருவெடுத்து நின்றுள்ளார். இதனைக் கண்டு பயந்த அசுரன் தப்பிச் செல்லும் முயன்று ஓடி உள்ளார்.

வடக்கு நோக்கி ஓடிய அசுரனை துரத்திச் சென்று தனது சூலாயுதத்தால் காளிதேவி வதம் செய்துள்ளார். உக்கிரத்தை தனித்து விட்டு சிவபெருமானின் இடது பக்கத்தில் அமர வேண்டும் என விஷ்ணு பகவான் கேட்டுள்ளார். விக்ரம் தணிந்த பார்வதி தேவி அருகே இருந்த சந்தன மரக்கட்டத்தை சென்று மண்ணில் லிங்கம் செய்து வழிபாடு செய்துள்ளார். அதற்குப் பிறகு சிவபெருமான் தரிசனம் கொடுத்து பார்வதி தேவியை தனது இடது பக்கத்தில் அமர வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner