தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: புஷ்பக விமானத்தை அபகரித்த ராவணன்.. கவலையில் குபேரன்.. வழிகாட்டிய சிவபெருமான்

HT Yatra: புஷ்பக விமானத்தை அபகரித்த ராவணன்.. கவலையில் குபேரன்.. வழிகாட்டிய சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 06:00 AM IST

HT Yatra: திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தை நோக்கி உள்ளே நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரம் உள்ளது.

புஷ்பக விமானத்தை அபகரித்த ராவணன்.. கவலையில் குபேரன்.. வழிகாட்டிய சிவபெருமான்
புஷ்பக விமானத்தை அபகரித்த ராவணன்.. கவலையில் குபேரன்.. வழிகாட்டிய சிவபெருமான்

அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தை நோக்கி உள்ளே நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரம் உள்ளது.

தல சிறப்பு

கோயிலின் வலது புறத்தை நோக்கி நடந்து சென்றால் அருள்மிகு பஞ்சமுகஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த திருக்கோயிலில் வலது புறத்தில் இருக்கக்கூடிய சன்னதியில் கருவறையில் கிழக்கு நோக்கி பஞ்சமுகேஸ்வரர் காட்சி கொடுத்த வருகிறார்.

சிவபெருமான் இந்த கோயிலில் ஐந்து முகம் கொண்ட லிங்கமாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த ஐந்து முகங்களும் ஈசானம், வர்ம தேபம், தத்புருஷம், அகோரம், சத்தியயோஜாதம் என ஐந்து முகங்களை குறிக்கின்றன.

பிரம்மதேவருக்கு இருப்பது போலவே இந்த சிவலிங்கத்தில் நான்கு புறமும் முகங்கள் உள்ளன. இதில் லிங்கமும் ஒரு முகமாக கருதப்படுகிறது. இந்த திருக்கோயிலில் தாமரை பீடத்தில் அமர்ந்து இறைவன் காட்சி கொடுத்து வருகிறார்.

இறைவனின் எதிரே தனி சன்னதியில் அம்பாள் திரிபுரசுந்தரி காட்சி கொடுத்து வருகிறார். எதிரெதிரே இறைவன் மற்றும் இறைவி சேர்ந்து காட்சி கொடுக்கின்ற காரணத்தினால் ஒரே இடத்தில் இவர்கள் இருவரையும் தரிசிக்க முடியும்.

அம்பாள் திரிபுரசுந்தரிக்கு நான்கு கரங்கள் உள்ளன இரண்டு கரங்களில் சங்கு சுமந்தபடி, மற்ற இரண்டு கரங்களில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி கொடுக்கிறார். அதற்குப் பிறகு மகா மண்டபத்தின் உள்ளே இந்த திருக்கோயிலின் பிரதான இறைவனாக ராஜராஜேஸ்வரர் உள்ளார். இவர்தான் இந்த கோயிலின் பிரதான இறைவனாக திகழ்ந்து வருகின்றார்.

ராஜராஜேஸ்வரருக்கு அடுத்தபடியாக மகா மண்டபத்தின் வடக்கு திசையில் அம்பாள் ராஜராஜேஸ்வரி தனி சன்னதி கொண்டு காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

விச்ரவஷுக்கு ராவணன், குபேரன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் இருவருக்கும் இடையே சிறுவயதில் இருந்து பகை இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் வளர்ந்தனர் பகையும் சேர்ந்து வளர்ந்தன. குபேரன் அனைத்து ஐஸ்வர்ங்களோடும் சேர்ந்து புஷ்பக விமானத்தையும் வைத்திருந்தார். பகையின் காரணமாக இருவருக்கும் போர் ஏற்பட்டது இந்த போரில் வெற்றி பெற்ற ராவணன், குபேரனின் செல்வங்கள் மற்றும் புஷ்பக விமானத்தை கவர்ந்து சென்றார்.

பின்னர் குபேரன் சிவபெருமானை நோக்கி வழிபாடை செய்தார். அப்போது ஒரு அசரீரி கேட்டுள்ளது. விஷ்ணு பகவான் தசரதன் என்ற மன்னனுக்கு மகனாக பிறந்து ராவணனை வீழ்த்துவார் அப்போது நீ இழந்த அனைத்தும் கிடைக்கும் என அந்த அசரீரியில் கேட்டுள்ளது. அதற்குப் பிறகு குபேரன் காவிரியின் தென்கரையில் ஒரு கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தார் அங்கே இருக்கும் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரர் என பெயரிட்டார்.

அதற்குப் பிறகு ராமபிரானால் ராவணன் வீழ்த்தப்பட்டார். அதற்குப் பிறகு இழந்த செல்வம் மற்றும் புஷ்பக விமானம் அனைத்தும் குபேரன் வசம் கொடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்