HT Yatra: காமாட்சியம்மன் தாலி.. வள்ளியை தடுத்த சிவபெருமான்.. திருமணம் செய்து கொண்ட முருக பெருமான்
HT Yatra: குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் மிகப்பெரிய எதிரிகளாக திகழ்ந்து வந்தனர். நாட்டுக்காக பல போர்களை செய்து எதிரிகளாக வாழ்ந்து வந்தனர். உச்சக்கட்டத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் இருவர்களுமே சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
போட்டி போட்டுக் கொண்டு நிலத்திற்காக போராடினாலும் கோயில் கட்டுவதிலும் தங்களது போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளனர். சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் கட்டிய எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் இன்று வரை காலத்தால் அளிக்க முடியாத அளவிற்கு கம்பீரமாக நின்று வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தொடங்கி வரலாற்றின் சரித்திர குறியீடாக விளங்கக்கூடிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் என பல கோயில்கள் கலையம்சத்தை சுமந்து கொண்டு இன்றுவரை கம்பீரமாக நின்று வருகின்றன.
எந்த காலத்தில் எவரால் கட்டப்பட்டது என்பது கூட தெரியாமல் இன்று வரை பல கோயில்கள் பல வரலாறுகளை சுமந்து பல்லாயிரம் ஆண்டுகளை தாண்டி இன்று வரை நின்று வருகின்றன. கடவுள் இருக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் சிவபெருமான்.
உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன்னகம் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமத்தோடு என அழைக்கப்படுகிறார். தாயார் காமாட்சியம்மனாக காட்சி கொடுத்து வருகிறார். தல விருச்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தளத்தில் வீற்றிருக்கக்கூடிய காமாட்சி அம்மனின் கழுத்தில் தாலி இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் கோஷ மூர்த்தியாகவும் மூலவராகவும் இரண்டு கோணத்தில் அம்பாள் காட்சி கொடுத்தவர் யார் அதேபோல சித்தர் ஒருவர் சமாதி செய்யப்பட்ட இடத்திலும் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு வைத்து காமாட்சி அம்மனை 48 நாட்கள் வழிபட்டால் திருமண தடை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அவ்வாறு திருமணத்தடை நீங்கியவர்கள் அம்மனுக்கு மாங்கல்யம் சாற்றி தங்களது உணர்த்தக் கடனை செலுத்துகின்றனர். இங்கு வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமான் கல்யாணசுப்பிரமணியராக காட்சி கொடுத்து வருகிறார்.
இந்த திருக்கோயிலில் இறைவனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று பிணி நீங்குவதற்காக விபூதி அபிஷேகம் செய்யப்படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
தல வரலாறு
முருகப்பெருமானின் துணைவியாரான வள்ளி திருமணம் செய்வதற்கு முன்பு இந்த கோயிலில் வழிபட்டு வந்துள்ளார். முருகப்பெருமானுக்காக காத்திருந்து தவம் செய்துள்ளார் இருப்பினும் முருகப்பெருமான் வராத காரணத்தினால் உயிர் தியாகம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால் ஒரு அக்னி குண்டத்தை உருவாக்கி தனது உயிரை தியாகம் செய்வதற்காக வள்ளி முயற்சி செய்துள்ளார். உடனே அவரை சிவபெருமான் தடுத்து முருகப் பெருமானை அழைத்து வள்ளியோடு திருமணம் செய்து வைத்துள்ளார். உயிர் தியாகம் செய்ய சென்ற வள்ளியை சிவபெருமான் நிறுத்திய காரணத்தினால் இங்கு வீழ்ச்சி இருக்கக்கூடிய இறைவனுக்கு தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமம் கிடைத்துள்ளது. இந்த கோயில் வழியாக திருத்தணிக்கு செல்வதற்கு பாதையும் உள்ளது என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9