HT Yatra: பார்வதி தேவி மடியில் முருக பெருமான்.. முறையில்லாத கல்வியை முறைப்படுத்திய சிவபெருமான்.. அருள்மிகு சொக்கநாதர்
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
HT Yatra: உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து அனைத்து உயிர்களுக்கும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். மனித குலம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டு வரத்தை பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது.
திரும்பும் திசையெல்லாம் சுயம்புலிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வந்துள்ளார். சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்களாக அந்த காலத்தில் மண்ணை ஆண்டு வந்த மன்னர்கள் திகழ்ந்து வந்துள்ளனர்.
மண்ணுக்காக மன்னர்கள் மிகப்பெரிய போராட்டத்தை செய்து வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் பக்தராக திகழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. அவர் மீது கொண்ட அதீத பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே திரும்பும் திசையெல்லாம் மிகப்பெரிய கம்பீர கோயில்களை போட்டி போட்டுக்கொண்டு அனைத்து மன்னர்களும் கட்டிச் சென்றுள்ளனர்.
சோழர்களும் பாண்டியர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கலை நயத்தை வெளிப்படுத்துவதற்காகவும், பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டுச் சென்றுள்ளனர். சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது. என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு சிவபெருமான் மீது உச்சகட்ட பக்தியை கொண்டு இருந்துள்ளனர்.
இந்த சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சொக்கநாதர் மற்றும் மீனாட்சி தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவருடைய சன்னதிக்கு எதிராகவும் நந்திகள் வீற்றிருக்கின்றன. மீனாட்சி அம்மன் தனி சக்தியாக திகழ்கின்ற காரணத்தினால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாம் எதிரே நந்தி அமர்ந்திருப்பார். அது ஐதீகமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் மூலவர்கள் காட்சி கொடுப்பது போல இந்த கோயிலிலும் அதே அமைப்பில் காட்சி கொடுத்து வருகின்றனர். இங்கு மிகவும் விசேஷமாக நெல்லி மர விநாயகர் வீற்றிருக்கின்றார். சுவாமிகளுக்கு இரண்டு கால பூஜைகள் நடக்கும் அதேபோல மார்கழி மாதத்தில் சிறப்பு பூஜைகள் இந்த விநாயக பெருமானுக்கு நடத்தப்படுகிறது.
தல புராணம்
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியார் கைலாயத்தில் இருக்கும் பொழுது பார்வதி டேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தையாக முருக பெருமான் பார்வதி தேவியின் மடியில் அமர்ந்திருந்தார்.
சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறும் பொழுது அதனை முருக பெருமானும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரணவ மந்திரத்தை முறைப்படி குருவின் மூலமாக கற்றுக் கொள்வதுதான் வழக்கம். தற்செயலாக உபதேசத்தை முருக பெருமான் பெற்றிருந்தாலும் முறைப்படி அது மிகப்பெரிய தவறாகும்.
அதன் காரணமாக பிரணவ மந்திரத்தை முறையாக கற்க வேண்டும் என்று நினைத்த முருக பெருமான் அதை சிவபெருமான் உபதேசிக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் வந்து தவம் இருந்தார்.
தவத்தால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் முருகப்பெருமான் முன்பு தோன்றி அவருக்கு காட்சி கொடுத்தார். அதன் பின்னர் பரிகார மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். அதுதான் தற்போது சொக்கநாதர் திருக்கோயிலாக திகழ்ந்து வருகிறது. அதே இடத்தில் சிவபெருமான் ஆதி சொக்கநாதராக எழுந்தருளி பக்தர்களுக்கு தற்போது அருள் பாலித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9