திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்

திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 18, 2024 06:00 AM IST

Sundareswarar: சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருப்பது தான் நாகப்பட்டினம் மாவட்டம் திருமயிலாடி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் பிருகன் நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்
திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்

இது போன்ற போட்டோக்கள்

தென்னிந்தியாவில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் அமைக்கப்பட்டு இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த திருக்கோயில்கள் விளங்கி வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கலைநயத்தோடு கட்டி வைத்துச் சென்றுள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

சுயம்பு லிங்கங்களாக உருவான எத்தனையோ லிங்கங்களை வைத்து மன்னர்கள் அந்த காலத்தில் கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். மன்னர்களுக்கெல்லாம் குலதெய்வமாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருப்பது தான் நாகப்பட்டினம் மாவட்டம் திருமயிலாடி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் பிருகன் நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது அதேபோல முருகப்பெருமான் அசுரனை வதம் செய்த பிறகு மயிலின் மீது அமர்ந்தபடி இங்கு காட்சி கொடுக்கின்றார்.

சூர பத்மனாக விளங்கிய ஆணவம் பிடித்த மயில் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருகன் பாதத்தில் காலனியாக தன்னுடைய முகத்தை வைத்து காட்சி கொடுக்கின்றது. முருகப்பெருமானின் இடது காலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே தலையை தூக்கி எப்படி முருக பெருமானின் முகத்தை பார்த்த வண்ணம் மயில் காட்சி கொடுக்கின்றது.

இந்த திருக்கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தெற்கு முகமாக நின்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஊழ்வினைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

ஒருமுறை சிவபெருமான் கயிலையில் அமர்ந்திருக்கும் பொழுது பார்வதி தேவியிடம் விளையாட நினைத்துள்ளார். உடனே பார்வதி தேவியை பார்த்து நான்தான் இனி இல்லாத பேரழகு வடிவு கொண்டவன் எனக் கூறியுள்ளார். அதற்குப் பார்வதி தேவி வாய்ப்பே கிடையாது நான்தான் அழகில் மிகச்சிறந்தவள் எனக் கூறியுள்ளார்.

இருவருக்கும் விவாதம் ஒரு கட்டத்தில் உச்சகட்டத்தில் சென்றது. இதில் கோபமடைந்த சிவபெருமான் அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகிறார். தன்னை விட்டு சிவபெருமான் பிரிந்த காரணத்தால் பார்வதி தேவி மிகவும் வருந்தியுள்ளார். சிவபெருமானை எப்படி வரவழைப்பது என யோசித்துள்ளார்.

உடனே பார்வதி தேவி அழகான மயில் வடிவம் கொண்டு கண்ணுவாச்சிபுரம் என்ற ஊரில் இருந்த சிவபெருமான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அப்போது அங்கு சிவபெருமான் சுந்தரலிங்கமாக காட்சி கொடுத்துள்ளார்.

சிவபெருமானை கண்ட பார்வதி தேவி தோகை விரித்து ஆனந்த நடனம் புரிந்துள்ளார். அதற்குப் பிறகு இந்த திருத்தலம் திருமயிலாடி என பெயர் பெற்றுள்ளது.