HT Yatra: பிறை போல் மின்னும் சூரிய ஒளி.. சிற்ப வேலை நிறைந்த கோயில்.. வரலாற்றின் குறியீடு கைலாசநாதர்
Arulmigu Kailasanathar Temple: பல சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது தான் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். 13ம் நூற்றாண்டுச் சேர்ந்த இந்த திருக்கோயில் சிற்ப வேலைபாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
Arulmigu Kailasanathar Temple: உலகம் முழுவதும் தனக்கான பக்தர்கள் கூட்டத்தை இன்று வரை குறையாமல் அதிகப்படியாக வைத்திருக்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார் உலகம் முழுவதும் பல ரகசியங்களை உள்ளடக்கிய எத்தனையோ கோயில்களை சிவபெருமான் கொண்டிருக்கின்றார். தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியாக காட்சி கொடுத்து வருகிறார் சிவபெருமான்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. அத்தனை மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். பிரம்மாண்ட கோயில்களை பல ரகசியங்களை உள்ளடக்கி மன்னர்கள் கட்டியுள்ளனர் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக உலகம் முழுவதும் காட்சி கொடுத்து வருகின்றன.
பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வருகின்றனர். தென்னிந்தியாவை ஆண்டு வந்த மிகப்பெரிய சோழ சாம்ராஜ்ய ராஜனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் அதற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.
அந்த வகையில் பல சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது தான் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். 13ம் நூற்றாண்டுச் சேர்ந்த இந்த திருக்கோயில் சிற்ப வேலைபாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
தல பெருமை
மாசி மாதத்தில் மூன்று தேதிகளில் நந்தியின் கொம்பு வழியாக சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படுகின்றது அது மூன்றாம் பிறை போல் காட்சி கொடுக்கும் அதுவே இந்த திருக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும். இதனை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய ரதிதேவியின் சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரிவார் மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதிதேவி தெரிவார் அது மேலும் சிறப்பாகும்.
இந்த கோயிலில் மிகவும் சிறப்பான சன்னதி ஒன்று உள்ளது. இந்த கோயிலின் கீழ் பகுதியில் காற்றின் புக முடியாத அளவிற்கு ஒரு அறை உள்ளது. அந்த அறையில் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்த வருகின்றார் அது பாதாள லிங்கம் என அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று இந்த லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் ஏற்றி வைத்து அபிஷேகம் செய்தால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவைகள் கிடைக்கும் என பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
சுவாமி மற்றும் அம்பாள் இருவருக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பதை பக்தர்கள் பிரதான நேர்த்திக்கடனாக செய்து வருகின்றனர்.
தல வரலாறு
இந்தப் பகுதியை கெட்டி முதலியார் என்பவர் ஆண்டு வந்துள்ளார். மேய்ச்சலுக்காக தினமும் பசுக்கள் சென்று வந்துள்ளன அப்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் நின்று தனது பாலை சொரிந்து உள்ளது. இதனை கேள்விப்பட்ட முதலியார் பசு தானாக பால் சொரிந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.
அவருக்கு அங்கே தெய்வம் இருப்பது உணர்வாக தெரிந்துள்ளது. அதற்குப் பிறகு அங்கு வழிபாடு செய்துவந்துள்ளார். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு வணங்காமுடி என்பவர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9