HT Yatra: நிலத்தை கைப்பற்றிய சோழன்.. வென்றெடுத்த பாண்டியன்.. நன்றி கடனாக உருவான மலை கொழுந்தீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நிலத்தை கைப்பற்றிய சோழன்.. வென்றெடுத்த பாண்டியன்.. நன்றி கடனாக உருவான மலை கொழுந்தீஸ்வரர்

HT Yatra: நிலத்தை கைப்பற்றிய சோழன்.. வென்றெடுத்த பாண்டியன்.. நன்றி கடனாக உருவான மலை கொழுந்தீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 02, 2024 06:00 AM IST

Malai Kolundeeswarar: வரலாற்றின் பொக்கிஷமாக இந்த தஞ்சை பெரிய கோயில் திகழ்ந்து வருகிறது. இதுபோல பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருமலை மலை கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்.

நிலத்தை கைப்பற்றிய சோழன்.. வென்றெடுத்த பாண்டியன்.. நன்றி கடனாக உருவான மலை கொழுந்தீஸ்வரர்
நிலத்தை கைப்பற்றிய சோழன்.. வென்றெடுத்த பாண்டியன்.. நன்றி கடனாக உருவான மலை கொழுந்தீஸ்வரர்

சிவபெருமான் ஆதிமூல கடவுளாக திகழ்ந்த வருகின்றார். குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி முதல் ஆதி முதல் அந்தமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.

இந்த நாட்டை ஆண்டு வந்த அனைத்து மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு அடிக்கும் சிவபெருமான் கோயில்கள் இருக்கும். மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கிய சோழர்களின் ராஜ ராஜனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டி வைத்த தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இதற்குச் சான்றாகும்.

வரலாற்றின் பொக்கிஷமாக இந்த தஞ்சை பெரிய கோயில் திகழ்ந்து வருகிறது. இதுபோல பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருமலை மலை கொழுந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மலை கொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் பாகம்பிரியாளாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமான் முக்குருணி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்த விநாயகருக்கு சடை போன்ற அமைப்பு பின்பகுதியில் உள்ளது அதுவே மிகப்பெரிய சிறப்பாகும்.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமண தடை, தீராத நோய்கள், உடல் வலி, பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமண கோலத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியார் அலங்கார கோலத்தில் இருந்தது கோயிலில் காட்சி கொடுக்கின்றனர். அதற்கான தனி சன்னிதி இங்கே உள்ளது.

பித்ரு தோஷம்

இங்கு இருக்கக்கூடிய மழை அடிவாரத்தில் தாமரை தீர்த்துக்கொள்ளும் அமைந்துள்ளது. இந்த தீர்த்த குளத்தில் கங்கை நதி சங்கமிப்பதாக ஐதீகம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள் இந்த கரையில் வந்து கொடுத்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் காரணமாக புரட்டாசி, ஆடி, தை உள்ளிட்ட அமாவாசை தினங்களில் இங்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் வருகிறது.

தல வரலாறு

ஒரு காலத்தில் இந்த பகுதி பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ஆன முதலாம் ராஜேந்திர சோழன் இந்த இடத்தை கைப்பற்றினார். அதற்குப் பிறகு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஜடா வர்ம குலசேகரன் சோழ மன்னனை வீழ்த்தி இந்த இடத்தை கைப்பற்றினார்.

இந்த இடத்தில் வெற்றி கொண்டு கைப்பற்றியதற்கு நன்றி கடன் செலுத்துவதற்காக இந்த மலையின் உச்சியில் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி அவருக்கு மலை கொழுந்தீஸ்வரர் என திருநாமத்தை கொடுத்துள்ளார்.

இந்த திருக்கோயிலில் கிபி இரண்டாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மற்றும் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இதன் மூலம் இந்த திருக்கோயில் மிகவும் தொன்மையான கோயில் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த குன்று பகுதிகளில் வாழ்ந்த பழைய தமிழர்களின் வாழ்க்கையில் உணர்த்தும் அளவிற்கு ஓவியங்கள் காணப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner