தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: முனிவராக வந்த சிவபெருமான்.. அதிர்ந்து போன சுந்தரர்.. அசரீரியாக ஒலித்த திருமூலநாதர்

HT Yatra: முனிவராக வந்த சிவபெருமான்.. அதிர்ந்து போன சுந்தரர்.. அசரீரியாக ஒலித்த திருமூலநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2024 05:45 AM IST

வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் அமைந்துள்ள திருமூலநாதர் சுவாமி திருக்கோயில். அனைத்து சிவன் கோயில்களிலும் செய்யப்படும் அனைத்து விதமான பூஜைகளும் இந்த கோயில்களில் வழக்கமாக செய்யப்பட்டு வருகின்றன.

முனிவராக வந்த சிவபெருமான், அதிர்ந்து போன சுந்தரர்,  அசரீதியாக ஒலித்த திருமூலநாதர்
முனிவராக வந்த சிவபெருமான், அதிர்ந்து போன சுந்தரர், அசரீதியாக ஒலித்த திருமூலநாதர்

உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. அண்டா சராசரத்தை அடக்கி ஆளும் கடவுளாக திகழ்ந்து வருகிறார். மன்னர்கள் எத்தனையோ காலத்தினால் அளிக்க முடியாத கோயில்களை கட்டி சென்றுள்ளனர் இன்று வரை அசைக்க முடியாத வரலாற்றுச் சான்றாக பல கோயில்கள் விளங்கி வருகின்றன.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் அமைந்துள்ள திருமூலநாதர் சுவாமி திருக்கோயில். அனைத்து சிவன் கோயில்களிலும் செய்யப்படும் அனைத்து விதமான பூஜைகளும் இந்த கோயில்களில் வழக்கமாக செய்யப்பட்டு வருகின்றன.

தல பெருமை

 

மூல நாதராக சிவபெருமான் தனியாக இங்கு பெற்றிருக்கிறார் அகிலாண்டேஸ்வரி தனி சன்னதியில் ஸ்வர்ண புஷ்கரணி தீர்த்த குலத்திற்கு எதிரே காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய அகிலாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு இருந்து வருகிறது.

வீரபாண்டிய என்ற மன்னன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த திருக்குளத்தில் நீராடி தனது நோயை அவர் போக்கிக் கொண்டார் அதற்கு பிறகு இந்த கோயிலை சீரமைத்து வழிபாடு செய்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தீர்த்த குளத்தில் குளித்தால் அனைத்து விதமான நோய்களும் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது.

முதன்முதலாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் தான் காட்சி கொடுத்தார் என கூறப்படுகிறது இது ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது அகத்தியருக்கு மூல நாதர் உபதேசம் வழங்கிய தளமாக இது திகழ்ந்து வருகிறது.

காசிக்கு சென்று வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இந்த தலத்தில் வழிபட்டால் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

 

மக்களுக்கு இறை பக்தியில் நாட்டம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக மக்களுக்கு இறைபக்தியை கொடுக்க வேண்டும் என சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து நந்தி தேவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் சுந்தரரை அனுப்பும்படி கூறியுள்ளார். சுந்தரர் பூலோகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது பூமியில் மாடு மேய்ப்பவர் ஒருவர் இறந்த நிலையில் கடந்தார் அவரைச் சுற்றி மாடுகள் அனைத்தும் அழுது கொண்டிருந்தன.

இந்த காட்சியை கண்டு சுந்தர் மனமுருகி வருத்தப்பட்டார் பின்னர் அவரது உடலில் புகுந்து வேறு உருவெடுத்து வந்தார். மாடு மேய்ப்பவன் உருவத்திலிருந்து சுந்தரர் எந்த காரியத்தையும் நிறைவேற்றாமல் இருந்து வந்துள்ளார் அந்த வேலையை உணர்த்துவதற்காக முனிவர் வேடத்தில் யாசகம் கேட்டு சிவபெருமான் சென்றுள்ளார்.

முனிவருக்காக உணவு எடுத்து வர சென்ற சுந்தரர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது அங்கே இருந்தவரை காணவில்லை உடனே அந்த முனிவரின் கால் தடம் பார்த்துக் கொண்டே சென்ற பொழுது அது சிதம்பரம் நோக்கி சென்றுள்ளது. முனிவர் இடத்தில் வந்தது சிவபெருமான் தான் என சுந்தரர் உணர்ந்தார். திருமூலநாதர் அசரீரி வந்த இடத்திலிருந்து கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட இடம்தான் தற்போது இருக்கக்கூடிய திருமூலநாதர் திருக்கோயில்.

இந்த திருக்கோயிலின் முகப்பில் அதிகார நன்றி திருக்கோலத்தில் தனது துணைவியாரோடு காட்சி கொடுத்த வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel