தமிழ் செய்திகள்  /  Astrology  /  You Can Know About The History Of Shenbagapuram Adi Kumbeswara Vinayakar Temple Here

HT Yatra: முருகனால் மனம் வருந்திய விநாயகர்.. மன அமைதிக்காக தவம்.. மகனுக்கு பாதுகாப்பாக சிவன்.. ஆதிகும்பேஸ்வர விநாயகர்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 06:15 AM IST

Adi Kumbeswara Vinayakar: மலை உச்சியில் தொடங்கி மரத்தடி வரை அனைத்து இடங்களும் இவருடைய இடமாகும். தனக்கென பல கோயில்கள் கொண்டிருக்கின்றார் விநாயகர் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செண்பகபுரம் ஆதிகும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில்.

ஆதி கும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில்
ஆதி கும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் வணங்க வேண்டிய தெய்வமாக விநாயக பெருமான் விளங்கி வருகின்றார். அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற கடவுளாக விளங்கக்கூடியவர் விநாயகர். மலை உச்சியில் தொடங்கி மரத்தடி வரை அனைத்து இடங்களும் இவருடைய இடமாகும். தனக்குன பல கோயில்கள் கொண்டிருக்கின்றார் விநாயகர் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செண்பகபுரம் ஆதிகும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில்.

தல பெருமை

 

முருகப்பெருமான் சிவபெருமானிடமிருந்து தோன்றியவர். விநாயகர் பெருமான் அவரது தாயார் சக்தி தேவியாரிடம் இருந்து தோன்றியவர். அதன் காரணமாகவே விநாயகர் சக்தி அம்சமாக கருதப்படுகிறார். இருப்பினும் விநாயகப் பெருமான் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். தனது தந்தையாரின் ஈஸ்வரன் பட்டத்தை பெற்றிருக்கக் கூடியவர் விக்னேஸ்வரன். அந்த வகையில் இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை சிவனாக கருதி வழிபாடு செய்யப்படுகின்றது.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயகர் சுகபூர்த்தியாக தோன்றிய காரணத்தினால் இவருடைய உருவம் முழுமையற்ற நிலையில் காட்சி கொடுக்கும். இந்த கோயிலில் விநாயகருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த கோயிலில் நாகர் வடிவில் இருக்கக்கூடிய தீபத்தை வழிபட்டால் நாக தோஷம், நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தல வரலாறு

 

ஒருமுறை நாரதர் பார்வதி தேவி யாரிடம் ஒரு மாங்கனியை கொடுத்தார். இந்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தார் பார்வதி தேவி. விநாயகர் அல்லது முருகன் இவர்கள் இருவருக்கும் எப்படி கொடுப்பது என குழப்பம் ஏற்பட்டது. யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பழம் கொடுக்கப்படும் என பார்வதி மற்றும் சிவபெருமான் கூறினார்கள்.

தனது மகிழ்வாகனத்தை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்பினார் முருக பெருமான். தாய் தந்தை தான் எனது உலகம் எனக் கூறி அவர்களை சுற்றி வந்து பழத்தை பெற்றார் விநாயகர். இதனால் கோபம் கொண்ட முருக பெருமான் குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார்.

தனது செயலால்தான் தம்பி பிரிந்து என விநாயகர் மனம் வருந்தினார். தம்பிக்காக விட்டுக் கொடுக்கும் எண்ணம் கூட தனக்கு இல்லை என மனம் வருந்தி மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே நான் பூலோகம் சென்று மன அமைதிக்காக தவமிருக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் விநாயகர் கூறினார். சிவபெருமானும் பார்வதி தேவியும் சமாதானம் கூரியும் விநாயகர் கேட்கவில்லை.

அதன் காரணமாக பூமியில் செண்பக மரங்கள் அதிகம் இருக்கக்கூடிய இந்த தலத்தில் தவம் இருக்கும்படி விநாயகரின் பெற்றோர்கள் கூறினார்கள். உடனே இந்த தலம் வந்து விநாயகர் பெருமான் தவமிருந்தார். தனது மகன் தனியாக தவம் இருந்து வருவதைக் கண்ட பார்வதி தேவி எனது மகனுக்கு பாதுகாப்பு வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். உடனே பஞ்சபூத வடிவில் விநாயகர் பெருமாளை சுற்றி ஐந்து இடங்களில் பாதுகாப்பாக சிவபெருமான் அமர்ந்தார் இதுதான் தற்போது இருக்கக்கூடிய ஆதி கும்பேஸ்வர விநாயகர் திருக்கோயில் ஆகும்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீவளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள், வாகன வசதிகள் அனைத்தும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel