HT Yatra: பிரம்மதேவர் கொடுத்த சாபம்.. கிளியாக மாறிய முனிவர்.. வேண்டுதலால் காட்சி கொடுத்த சுகவனேஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பிரம்மதேவர் கொடுத்த சாபம்.. கிளியாக மாறிய முனிவர்.. வேண்டுதலால் காட்சி கொடுத்த சுகவனேஸ்வரர்

HT Yatra: பிரம்மதேவர் கொடுத்த சாபம்.. கிளியாக மாறிய முனிவர்.. வேண்டுதலால் காட்சி கொடுத்த சுகவனேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 27, 2024 05:50 AM IST

Arulmigu Sugavaneswarar Temple: அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய ஊழலிங்கமானது ஒரு பக்கம் சாய்ந்த வண்ணம் இருக்கும். அதன் முடிவில் வெட்டப்பட்ட தழும்பு இருக்கும்.

பிரம்மதேவர் கொடுத்த சாபம்.. கிளியாக மாறிய முனிவர்.. வேண்டுதலால் காட்சி கொடுத்த சுகவனேஸ்வரர்
பிரம்மதேவர் கொடுத்த சாபம்.. கிளியாக மாறிய முனிவர்.. வேண்டுதலால் காட்சி கொடுத்த சுகவனேஸ்வரர்

இது போன்ற போட்டோக்கள்

நிலத்திற்காக மன்னர்கள் போரிட்ட காலத்திலும் அனைவருக்கும் ஆன குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்திருக்கிறார். இந்தியாவின் தெற்கு பகுதிகளில் பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கொண்டவர்கள் ஓட்டு போட்டுக்கொண்டு தங்களது கலை நகத்தை வெளிப்படுத்துவதற்காகவே தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு ஏராளமான கோயில்களை தென்னிந்திய பகுதிகளில் ஏராளமான கோயில்களை கட்டியுள்ளனர்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக அந்த கோயில்கள் பல வரலாறுகளை உள்ளடக்கி நின்று வருகின்றன. தோழர்களில் மிகப்பெரிய ராஜாவாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை ராஜ கம்பீரத்தோடு நின்று வருகின்றது. அதுவே மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய ஊழலிங்கமானது ஒரு பக்கம் சாய்ந்த வண்ணம் இருக்கும். அதன் முடிவில் வெட்டப்பட்ட தழும்பு இருக்கும்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாக இருக்கும். விஷ்யு பாகம் ஒரே விதமான காணப்படும் இது எந்த சிவன் கோயில்களிலும் இல்லாத சிறப்பாகும்.

விநாயகர் பெருமான் இந்த திருக்கோயிலில் காணப்படும் விநாயகர் விகட சக்கர விநாயகர் என அழைக்கப்படுகிறார் இந்த விநாயகருக்கு கடலை சர்க்கரை தேங்காய் பழம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்பட்ட வருகிறது அதேபோல திருமண பாக்கியம், வேலை கிடைத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களுக்கும் இந்த விநாயகரை வழிபடலாம் என கூறுகின்றனர்.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தான் இயற்றிய திருப்புகளில் அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியுள்ளார். அரசமரம் வடிவில் தேவர்கள் சிவபெருமானை இங்கு வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு

ஒருமுறை பிரம்மதேவர் தனது படைக்கும் தொழிலில் இருக்கும் வித்தியாசத்தை ரகசியமாக கூறியுள்ளார் அதனை கேட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் ஒருவரான சுகர் முனிவர் இந்த செய்தியை சரஸ்வதி தேவியாளிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த பிரம்ம தேவர் கோபம் கொண்டு கிளியாக மாற வேண்டுமென சுகர் முனிவருக்கு சாதம் கொடுத்துள்ளார். தற்போது சுகவனேஸ்வரர் கோயில் இருக்கும் பகுதியில் சுயம்பு மூர்த்தியாக இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் உனது சாபம் நீங்கும் என கிளியாக மாறிய சுகர் முனிவருக்கு பிரம்மதேவர் வழி கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிவபெருமான் இருக்கக்கூடிய இடத்திற்கு வந்து பல கிளிகளோடு சேர்ந்து இவரும் ஒரு கிளியாக சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார். திடீர்னு இந்த பகுதியில் வந்த வேடன் ஒருவன் அங்கு இருந்த கிளிகளை அடித்து விரட்டி உள்ளான். அனைத்து பிள்ளைகளும் அருகில் இருந்த புற்றின் மீது பதுங்கி உள்ளன.

இதில் கோபமான வேடன் புற்றை வெட்டியுள்ளார். கிளிகள் அனைத்தும் இறந்து போய் உள்ளன. கிளி வடிவில் இருந்த சுகர் முனிவர் மற்றும் பறந்து போய் சுயம்பு மூர்த்தியாக இருந்த சிவபெருமானின் மீது தனது சிறகை விரித்து பாதுகாத்துள்ளது. இதனைப் பார்த்த வேடன் கிளியை வெட்டியுள்ளார். அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது.

இறந்து போன கிளியை தள்ளிவிட்டு அங்கே பார்த்த பொழுது இவர் வெற்றிய தடம் சிவலிங்கத்தின் மீது விழுந்து அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. தான் செய்த தவறை நினைத்து வேடன் தன் கையில் இருந்து வாழை வைத்து தன்னை மாய்த்துக் கொண்டார். உயிரிழந்து சிவனடியை சேர்ந்த சுகர் முனிவர் சாப விமோசனம் பெற்றார்.

அதற்குப் பிறகு எனக்கு சாப விமோசனம் கொடுத்து பெருமானே தாங்கள் சுகவனேஸ்வரர் ஆக திருப்பெயர் கொண்டு இங்கு எழுந்தருளி அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும் என கேட்டுள்ளார் சுகர் முனிவர். அதன்படி இங்கே சுகவனேஸ்வரராக சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner