HT Yatra: எட்டி உதைத்த சிவபெருமான்.. பாச கயிறால் வந்த பாவம்.. எமன் வழிபட்ட எமனேஸ்வரமுடையார்
HT Yatra: ஒவ்வொரு சிவபெருமான் கோயிலும் ஒவ்வொரு வரலாறை தன் வசம் வைத்து கம்பீரமாக இன்று வரை நின்று வருகின்றன. அப்படி சிறப்பான வரலாறுகளை கொண்ட கோயில்களில் ஒன்றுதான் பரமக்குடி எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்.
Arulmigu Emaneswaram Udayar Temple: உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களை அருள் வாழ்த்த வருகிறார் சிவபெருமான். ஏராளமான பக்தர்களை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை முழு முதல் கடவுளாக திகழ்ந்து வரக்கூடிய சிவபெருமான் உருவமின்றி லிங்கத்திருமேனியில் காட்சி கொடுத்து வருகிறார்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமான் அனைவருக்கும் குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார் கொண்டு வருகிறார். மண்ணுக்காகவும், நிலத்திற்காகவும் மன்னர்கள் போரிட்டு வெற்றி தோல்வி அடைந்தாலும் தென்னிந்தியாவை பொறுத்த வரை அனைத்து மக்களுக்குமான குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
இந்தியாவின் தெற்கு பகுதியை அசைக்க முடியாமல் ஆட்சி செய்து வந்த மாமன்னர்களின் மன்னனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும். புராணமாக கூறப்பட்டாலும் ராமரை எதிர்த்து நின்ற ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் கொண்டு பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த வருகிறார். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வரலாறை தன் வசம் வைத்து கம்பீரமாக இன்று வரை நின்று வருகின்றன. அப்படி சிறப்பான வரலாறுகளை கொண்ட கோயில்களில் ஒன்றுதான் பரமக்குடி எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் சிவபெருமான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். திருக்கடையூரில் எமபெருமானை சம்ஹாரம் செய்துவிட்டு கால சம்ஹார மூர்த்தியாக அங்கு காட்சி கொடுக்கிறார்.
சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷம், நீங்க வேண்டும் என்றால் இங்கே வழிபட்டால் அது நீங்கும் என கூறப்படுகிறது. ஆயுள் விருத்தி வேண்டி இந்த கோயிலில் வழிபட்டால் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலில் ஆயுஷ்ய ஹோமம் செய்து அறுபது மற்றும் என்பது திருமணம் செய்து கொண்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முருக பெருமான் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மாசி மக தினத்தன்று சிவபெருமானின் மறு உருவமாக திகழ்ந்துவரும் முருகப்பெருமான் இந்த தீர்த்தத்தில் எழுந்து அருள்கிறார். அதற்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் கடைசி திங்கட்கிழமை அன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் இரண்டு கரங்களுடன் சொர்ண குஜாம்பிகை தாயார் காட்சி கொடுத்து வருகிறார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டுமென்றால் இந்த தாயாரிடம் வந்து வழிபட்டால் தோஷம் நீங்கி அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என பக்தர்கள் கூறுகின்றன.
தல வரலாறு
மார்க்கண்டேயர் மிகப்பெரிய சிவ பக்தனாக திகழ்ந்துள்ளார். அவருக்கு அற்ப ஆயுளில் உயிர் பிரியும் படி ஒரு வரம் இருந்தது. இருப்பினும் சிவ பக்தனாக திகழ்ந்து வந்த மார்க்கண்டேயர் அனைத்து சிவபெருமான் கோயில்களுக்கும் யாத்திரை சென்று வழிபாடு செய்து வந்தார்.
குறைந்த ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரின் உயிரை எடுப்பதற்காக எமதர்மன் மார்க்கண்டேயரை நோக்கி வந்துள்ளார். அந்த நேரத்தில் மார்க்கண்டேயர் திருக்கடையூர் தளத்தில் சிவபெருமானை வழிபடுவதற்காக சென்றார்.
மார்க்கண்டேயின் உயிரை எடுப்பதற்காக எமதர்மன் தனது பாசக்கயிறு எடுத்து வீசினார். இதனைக் கண்ட மார்க்கண்டேயர் கோயிலில் இருந்து சிவலிங்கத்தை அப்படியே கட்டி தழுவி கொண்டார்.
இதன் காரணமாக எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீது தழுவி சென்றது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், எமதர்மன் தனது வேலையை சரியாக செய்யாத காரணத்தினால் தனது இடது காலால் எமதர்மனை எட்டி உதைத்தார்.
இதனால் பறந்து கீழே விழுந்த எமதர்மன் தனது தவறை உணர்ந்து விழுந்த இடத்திலேயே லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து மன்னிப்பு கோரி அந்த லிங்கத்தை வழிபட்டு வந்தார். அதற்குப் பிறகு வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் எமதர்மனுக்கு அவருடைய பதவியை திருப்பிக் கொடுத்தார்.
எமதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் அங்கே எழுந்தருளினார் இதனால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் எமனேஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9