தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: தோஷத்தோடு வந்த ராமபிரான்.. 108 சிவலிங்க வழிபாடு.. அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம்

HT Yatra: தோஷத்தோடு வந்த ராமபிரான்.. 108 சிவலிங்க வழிபாடு.. அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 06:00 AM IST

Arulmigu Ramalinga Swamy Temple: எத்தனையோ மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்தி சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில்.

தோஷத்தோடு வந்த ராமபிரான்.. 108 சிவலிங்க வழிபாடு.. அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம்
தோஷத்தோடு வந்த ராமபிரான்.. 108 சிவலிங்க வழிபாடு.. அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம்

சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருந்து வருகின்றனர் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான கோயில்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக சிவபெருமானுக்கு கோயில்கள் கட்டியது மன்னர்கள் தான். தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியில் காட்சி கொடுத்து வருகிறார் சிவபெருமான்.

கோயில் எழுப்பாமல் தானாக உருவாகிய லிங்கங்கள் அனைத்தும் சுயம்புலிங்கம் என அழைக்கப்படுகிறது. நிலத்திற்காக மன்னர்கள் சண்டையிட்டு போரிட்டு வெற்றி தோல்வி அடைந்தாலும் அனைவரும் சிவபெருமானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்திய நாட்டின் தெற்கு பகுதியை ஆட்சி செய்து கொண்ட சோழர்களின் சோழன் மாமன்னர் ராஜராஜ சோழன் மிகப்பெரிய சிவபக்தராக இருந்து வந்துள்ளார் அதற்கு சாட்சியாக தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை கட்டியுள்ளார் இன்று வரை அசைக்க முடியாத கலை சிற்பமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இதுபோல எத்தனையோ மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்தி சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயில் இல்லாமல் மற்ற கோவில்களில் நாம் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தையும் மற்ற பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளையும் வழிபாடு செய்ய முடியும். ஆனால் இந்தத் திருக்கோயிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. அனைத்து சிவலிங்கமும் மூலவராக அருள்பாளிப்பது மிகவும் சிறப்பாகும்.

இந்த கோயிலின் வளாகத்தில் ராமன், லட்சுமணன், சீதா ஆஞ்சநேயர் உள்ளிட்டோர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல புடைப்புச் சிற்பம் இருக்கும். ஏனென்றால் இந்த திருக்கோயில் ராமாயணத்தோடு தொடர்புடையது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த சிற்பம் இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கும், பித்ரு தோஷம் நீங்குவதற்கும் இந்த திருக்கோயில் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர்.

சிவபெருமானுக்கு எதிரே எப்போதும் நந்தி பெருமான் தான் இருப்பார் ஆனால் இந்த திருக்கோயிலில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி மற்றும் காமதேனு இவர்கள் இருவரும் இருப்பார்கள். அகத்தியர் ஆலோசனை கொடுத்து ராமபிரான் இங்கு காமதேனுவை செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

தல வரலாறு

சீதாவை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்து ராமபிரான் சீதாவை மீட்டு வந்தார். அதற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட தோஷத்தின் காரணமாக ராமேஸ்வரத்தில் சிவ பூஜை நடத்தி அயோத்தி திரும்பி சென்றார். ராவணனுக்கு தோஷ நிவர்த்தி செய்த ராமபிரான் கரன் மற்றும் தூஷணன் இவர்கள் இருவரையும் வதம் செய்த தோஷம் தன்னை பின்தொடர்ந்து வருவதாக ராமபிரான் உணர்ந்தார்.

அந்த தோஷத்தை நீங்க செய்வதற்காகவே இந்த இடத்தில் 107 சிவலிங்கங்களை வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். அதற்குப் பிறகு காசுக்கு சென்று ஒரு லிங்கம் எடுத்து வரும்படி ஆஞ்சநேயருக்கு ராமபிரான் கட்டளையிட்டுள்ளார். அதையும் சேர்த்து இங்கு 108 லிங்கங்கள் வைத்து ராமபிரான் பூஜை செய்து தனது தோஷத்தை நிவர்த்தி செய்ததாக புராணத்தில் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இங்கு இருக்கக்கூடிய பிரதான சிவ பெருமானுக்கு ராமலிங்க சுவாமி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கத்தின் பெயர் அனுமந்த லிங்கம் என வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel