HT Yatra: மணியோசையால் எழுந்த மன்னர்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. மணியோசை தர்மலிங்கேஸ்வரர்
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் தர்மலிங்கேஸ்வரர், வீர சங்கர், தன்மீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் சர்வ மங்களாதேவி என அழைக்கப்படுகிறார்.
HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதிலும் இன்னும் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் தெற்கு பகுதியில் அதாவது தமிழ்நாடு சிவபெருமானின் நாடாகவே கருதப்படுகிறது. தமிழ் மொழியை உருவாக்கிய நாயகனாக சிவபெருமான் போற்றி வணங்கப்பட்டு வருகிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் ஒருபுறம் கோயில் கட்டி தங்களது பக்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
பாண்டியர்கள் சோழர்கள் இவர்கள் இருவரும் எதிரிகளாக இருந்தாலும் மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். பல கோடி அளவிற்கு செலவு செய்து மிகப் பெரிய கோயில்களை கலைநயத்தோடு கட்டிக் கொண்டுள்ளனர். இன்று வரை அந்த கோயில்களின் கட்டுமானம் பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது.
மாபெரும் மன்னனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலை ஆச்சரியப்படும் வகையில் கலைநயத்தோடு கட்டியுள்ளார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் எந்த சீற்றத்திற்கும் ஈடு கொடுக்காமல் கம்பீரமாக நின்று வருகிறது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ கோயில்கள் பல வரலாறுகளை தன் வசம் வைத்துக்கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் தர்மலிங்கேஸ்வரர், வீர சங்கர், தன்மீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தாயார் சர்வ மங்களாதேவி என அழைக்கப்படுகிறார்.
தல சிறப்பு
பொதுவாக அம்மன் கோயில்களில் சர்வ மங்கள மாங்கல்யே என்ற மந்திரம் உச்சரிப்பது வழக்கம் அந்த சர்வ மங்களாதேவி இந்த கோயிலில் தான் காட்சி கொடுத்து வருகிறார். சோழர்கள் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இந்த கோயில் இருக்கும் இடம் தன்மீச்வரம் என அழைக்கப்பட்டுள்ளது இந்த கோவிலில் இருக்கக்கூடியவர் தன்மீஷ்வரர் என அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் பின்னர் கோபுரத்தை கடந்து சென்ற பிறகு கயிலை நாதனும் ராஜராஜேஸ்வரையும் சுதை சிற்பமாக காட்சி கொடுத்த வருகின்றனர். இந்தக் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அம்பிகையின் சிலை அதாவது சர்வ மங்களாதேவி சற்று சாய்ந்த நிலையில் நளினமாக காட்சி கொடுப்பார்.
தல வரலாறு
ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த பொழுது குறுநில மன்னனாக காரியாதித்த சோழன் இருந்தார். இவர் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த கோயில்களில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஒருமுறை தன்மீச்வரம் வந்த பொழுது அங்கே இருந்த பசுமையான வயல்வெளிகளை கண்டு அன்று இரவு அங்கே தங்கி உள்ளார்.
இரவு முடிந்து பகல் நேரம் வந்தது இருப்பினும் அரசர் விழாமல் இருந்தார். இதனை கண்ட வீரர்கள் அவரை எழுப்புவதற்கு பயந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கோயில் மணி ஓசை மிகவும் சத்தமாக கேட்டுள்ளது இதனால் மன்னர் விழித்துக்கொண்டார். ஓசை வந்த திசை நோக்கி சோழ மன்னன் சென்று பார்த்தபோது அங்கே சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி கொடுத்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னன் மிகவும் மோசமான நிலையில் இருந்த கோயிலை கண்டு வருந்தியுள்ளார். இந்த கோயிலில் எப்போதும் என்னை எழுப்பிய மணியோசை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைத்துள்ளார் மன்னர். அதன்பின்னர் கோயில் திருப்பணிக்காகவும் இந்த கோயிலில் பூஜை நேரத்தில் இசைக்கருவிகள் முழங்க வேண்டும் என்பதற்காகவும் அந்த கோயிலை சுற்றியுள்ள நிலங்களின் வருமானம் கோயிலுக்கு என மன்னர் முடிவு செய்துள்ளார். இந்த கல்வெட்டு தற்போதும் அந்த கோயிலில் இருந்து வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9