HT Yatra: பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்

HT Yatra: பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 16, 2024 06:10 AM IST

Kailasanathar Temple: தொழில்நுட்ப காலம் பல வந்தாலும் இன்றுவரை மன்னர்களின் கோயில்கள் அழிவில்லாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்
பன்றியை தாக்கிய மன்னன்.. புதருக்குள் சுயம்புலிங்கம்.. மன்னனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்

இது போன்ற போட்டோக்கள்

நாடு பிடிப்பதற்காக மன்னர்கள் போர் புரிந்து வெற்றி கண்டாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக சோழர் மற்றும் பாண்டியர்களின் குலதெய்வமாக சிவபெருமான் இருந்து வந்துள்ளார். குலதெய்வமாக இருந்தாலும் தங்களின் கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்காக எத்தனையோ மன்னர்கள் கோயில்களை கட்டி வழிபாடு செய்து வந்துள்ளனர்.

தொழில்நுட்ப காலம் பல வந்தாலும் இன்றுவரை மன்னர்களின் கோயில்கள் அழிவில்லாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

தல பெருமை

 

இந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவன் சுயம்புலிங்கமாக அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயகர் சகட விநாயகர் என அழைக்கப்படுகிறார். பாலதண்டாயுதபாணியாக அம்பாள் சன்னதிக்கு முன்னதாக முருகப் பெருமான் காட்சி கொடுத்து வருகிறார் அதற்கு பின்னர் தனி சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் கல்யாண திருக்கோணத்தில் சுப்பிரமணியர் காட்சி கொடுத்து வருகிறார். இரண்டு கோலத்தில் முருக பெருமான் இந்த கோயிலில் காட்சி கொடுப்பது மேலும் சிறப்பாகும்.

குழந்தை பாக்கியம்

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அம்மன் அறம் வளர்த்த நாயகி என்ற பெயரில் காட்சி கொடுத்து வருகிறார். வளர்பிறை பிரதோஷத்த திருநாளில் உச்சி கால நேரத்தில் நம்பிக்கைக்கு விசேஷ அபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடுகள் செய்கின்றனர் அப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

மேலும் உப்பில்லா சாதம், அரிசி, தேங்காய், பழம் உள்ளிட்டவர்களை நைவேத்தியமாக படைத்து வழிபாடுகள் செய்கின்றனர். இப்படி செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

தல வரலாறு

 

கொல்லிமலையின் தலைநகரமாகக் கொண்டு அந்த பகுதியை வல்வில் ஓரி எந்த மன்னன் ஆட்சி செய்து கொண்டுள்ளார். வில் வித்தையில் கை தேர்ந்தவராக இந்த மன்னர் இருந்து வந்துள்ளார். ஒருமுறை இவர் காட்டுக்கு வேட்டைக்காக சென்றுள்ளார். வெகுநேரம் கடந்தும் ஒரு மிருகம் கூட இவரது வேட்டைக்கு சிக்கவில்லை.

கலைத்துப் போன ஓரி மன்னன் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது வெள்ளை பன்றி ஒன்றைக் கண்டுள்ளார். உடனே தான் கையில் வைத்திருந்த அம்பை எய்துள்ளார். அம்பு பன்றியின் தலையில் தாக்கி உள்ளது. உடனே அந்த பன்றி அந்த இடத்திலிருந்து ஓடியுள்ளது.

ஓடிச் சென்ற பன்றி ஒரு புதருக்குள் மறைந்துள்ளது. அதனை மன்னன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அது பதுங்கி இருந்த புதரை விலைக்குப் பார்த்தபோது அங்கு ஒரு சுயம்புலிங்கம் இருந்துள்ளது. லிங்கத்தின் நெற்றியில் மன்னன் மீது அம்பு காயமாக இருந்தது. அங்கிருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.

பன்றியாக வந்தது சிவபெருமான் தான் என மன்னன் அழுதுள்ளார். அதன் பின்னர் சிவபெருமான் சுயரூபம் எடுத்து நானே பன்றியாக வந்தேன் என இருக்கும் இடத்தை காட்டுவதற்காகவே இப்படி ஒரு நாடகமாடினேன் என மன்னனிடம் சிவபெருமான் கூறியுள்ளார். உடனே அதே இடத்தில் மன்னன் கோயில் எழுப்பினார். அதுதான் தற்போது ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9