தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: கோபம் கொண்டு பறந்த முருக பெருமான்.. தடுத்து நிறுத்திய பார்வதி தேவி.. அசலதீபேஸ்வரர் திருக்கோயில்

HT Yatra: கோபம் கொண்டு பறந்த முருக பெருமான்.. தடுத்து நிறுத்திய பார்வதி தேவி.. அசலதீபேஸ்வரர் திருக்கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 06:30 AM IST

Achala Deepeswarar Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் மேற்கு நோக்கி சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அம்மையார் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கின்றார்.

கோபம் கொண்டு பறந்த முருக பெருமான்.. தடுத்து நிறுத்திய பார்வதி தேவி.. அசலதீபேஸ்வரர் திருக்கோயில்
கோபம் கொண்டு பறந்த முருக பெருமான்.. தடுத்து நிறுத்திய பார்வதி தேவி.. அசலதீபேஸ்வரர் திருக்கோயில்

நாடுகளுக்காக மன்னர்கள் போர் புரிந்தாலும் அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார். இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த சேரன் சோழன் பாண்டியன் உள்ளிட்டோருக்கு குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

சோழர்களின் பிரதான கடவுளாக விளங்கிய சிவபெருமானுக்கு காலத்தால் அழிக்க முடியாத கோயிலாக தஞ்சை பெரிய கோயிலை சோழர்களின் ராஜராஜன் ஆக திகழ்ந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல வரலாறுகளை தன் வசம் வைத்துக்கொண்டு எத்தனையோ கோயில்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. பல மர்மங்களை தன்வைசம் வைத்திருக்கக்கூடிய கோயில்களும் இங்கு உண்டு.

அந்த வகையில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் மேற்கு நோக்கி சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். அம்மையார் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கின்றார்.

தல சிறப்பு

 

தேவாரத்தில் பாடல் பெற்ற தலமாக இந்த தளம் விளங்கி வருகின்றது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை போலவே கார்த்திகை முதல் நாளில் பரணி நட்சத்திரத்தன்று இந்த திருத்தலத்தில் ஏற்றப்படும் விளக்கும் மிகவும் விசேஷமானதாகும்.

சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து வருகிறார் இவருடைய சன்னதிக்கு முன்பே அணையா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபம் அசையாமல் இருக்கின்ற காரணத்தினால் அதனை சிவபெருமானாக நினைத்து வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள்.

குழந்தை பாக்கியம்

 

இந்த கோயிலில் வீற்று இருக்கக்கூடிய தாயார் மதுகரவேணி என அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் கோபம் கொண்டு கைலாயத்தை விட்டு வெளியேறி வந்து கொண்டிருந்த பொழுது அவரை தடுத்து நிறுத்துவதற்காக அம்பிகை வந்துள்ளார் அப்போது முருகனைப் பார்த்தவுடன் பாசத்தில் பால் சொரிந்துள்ளார். அதன் காரணமாக இந்த தாயார் மதுகரவேணி என அழைக்கப்படுகிறார்.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி யாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பி வருகின்றனர்.

தல வரலாறு

 

கைலாயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானிடம் நாரதர் கனி ஒன்றை கொடுத்தார். அந்த கனியை பெறுவதற்காக விநாயகர் மற்றும் முருக பெருமான் இருவருக்கும் போட்டிகள் நடைபெற்றது சாதுரியமாக விநாயகர் அந்த கனியை பெற்றுக் கொண்டார். இதில் கோபம் கொண்ட முருக பெருமான் கைலாயத்தை விட்டு வெளியேறினார்.

அவரை சமாதானம் செய்வதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தனர் அதில் தாயார் அம்பிகையும் ஒருவர். கோபித்துக் கொண்டு சென்ற முருக பெருமானை பின் தொடர்ந்து அம்பிகை சென்றார். சிவபெருமானும் அவரோடு வந்தார்.

மயில்வாகனத்தில் பறந்தபடி கோபமாக முருக பெருமான் வேகமாக சென்றார். பின்னை சென்ற பார்வதி தேவியார் முருகனை நிற்கும்படி வேண்டிக்கொண்டார். அம்பிகை நில் என்று சொன்னதும் தாயின் பேச்சைக் கேட்டு முருக பெருமான் அப்படியே நின்றார். திரும்பவும் கைலாயத்திற்கும் வரும்படி அழைத்தார். 

எனக்கு தனியாக வாழ்வதற்கு விருப்பம் எனக் கூறி முருகப்பெருமான் பழனிக்கு சென்றார். முருகப்பெருமானை அழைப்பதற்காக பார்வதி தேவியார் நின்ற தளம் தான் இந்த அசலதீபேஸ்வரர் திருக்கோயில். இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel