HT Yatra: பிரளயத்தில் மிதந்த கும்பம்.. லிங்கமாக மாறிய தேங்காய்.. குளத்தருகே அமர்ந்த அபிமுகேஸ்வரர்
HT Yatra: கோயில் நகரமாக திகழ்ந்துவரும் கும்பகோணத்தில் இந்த கோயில் உள்ளது. வரலாறுகளைக் கடந்து எத்தனையோ கோயில்கள் கும்பகோணத்தில் சிறப்பாக இருந்து வருகின்றன. கும்பகோணத்தில் இருக்கக்கூடிய வரலாறு சிறப்பு மிக்க கோயில்களில் இந்த திருக்கோயிலும் ஒன்று.
HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அனைவருக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். நிலத்திற்காக பல மன்னர்கள் போரிட்டு வாழ்ந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
வரலாறுகள் தெரியாத எத்தனையோ கோயில்கள் இன்று வரை கம்பீரமாக திகழ்ந்து வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக தஞ்சை பெரிய கோயில் அதிசயத்தில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த ராஜராஜசோழன் கட்டிய கோயில் தான் இந்த தஞ்சை பெருவுடையார் கோயில்.
அந்த வகையில் எத்தனையோ திருக்கோயில்கள் பல வரலாறுகளை தன் வசம் வைத்துக்கொண்டு இங்கே உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில். கோயில் நகரமாக திகழ்ந்துவரும் கும்பகோணத்தில் இந்த கோயில் உள்ளது. வரலாறுகளைக் கடந்து எத்தனையோ கோயில்கள் கும்பகோணத்தில் சிறப்பாக இருந்து வருகின்றன. கும்பகோணத்தில் இருக்கக்கூடிய வரலாறு சிறப்பு மிக்க கோயில்களில் இந்த திருக்கோயிலும் ஒன்று.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் மிகவும் உயரமான பைரவர் சிலை உள்ளது. அது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது மேலும் இந்த கோயிலில் இருக்கக்கூடிய நவகிரக சன்னதி மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்கும் ஆனால் சனி பகவானின் சிலை மட்டும் சற்று உயரமாக இருக்கும்.
இந்த திருக்கோயில் அனைவரது நோயையும் தீர்க்கும் தலமாக விளங்கி வருகிறது. இந்த திருக்கோயிலின் தலவிருச்சமாக நெல்லி மரம் விளங்கி வருகிறது. இந்த மரத்தில் விளையக்கூடிய நெல்லிக்காய்க்கு நோய்களை நிவர்த்தி செய்யும் சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும் இந்த திருக்கோயிலில் நெல்லிக்காயை படைத்து மற்றவர்களுக்கு தானம் செய்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. குறிப்பாக சனி தோஷமுள்ளவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.
கும்பகோணத்தில் இருக்கக்கூடிய மகாமக குளக்கரையில் இருக்கக்கூடிய 12 தெய்வங்களில் அபிமுகேஸ்வரரும் ஒருவர்.
தல வரலாறு
முன்பு ஒரு காலத்தில் இங்கு பிரளயம் ஏற்பட்டுள்ளது அப்போது பிரம்மதேவர் பிரளயத்திற்கு பிறகு தான் எப்படி படைப்பு தொழிலை ஆரம்பிப்பது என மனம் வருந்தி சிவபெருமானிடம் கேட்டுள்ளார். உடனே சிவபெருமான், நீங்கள் இப்போது அனைத்து புனித தலங்களுக்கும் சென்று மணலை எடுத்து வந்து அமுதத்தோடு கலந்து பிசைந்து ஒரு மாய கும்பத்தை உருவாக்குங்கள்.
அதற்குப் பிறகு அந்த கும்பத்தில் அமுதத்தை நிரப்பி விடுங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக இருக்கக்கூடிய சிருஷ்டி பீஜத்தை அதனுள் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து விடுங்கள் அந்த துன்பத்தை மாவிலையால் சுற்றி அலங்காரம் செய்யுங்கள்.
அதற்குப் பிறகு தலைய வெள்ளத்தில் அந்த கும்பம் சாயாதபடிக்கு ஒரு ஊரில் கட்டி வைத்து விடுங்கள். அந்த கும்பத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள். அந்த கும்பம் தெற்கு நோக்கி செல்லும் பொழுது நான் அங்கு வருவேன் என கூறினார்.
சிவபெருமான் கூறியது போலவே பழைய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மிதந்து சென்ற கும்பத்தில் இருந்த தேங்காய் சிதறி விழுந்தது அந்த தேங்காய் லிங்கமாக மாறியது அதுதான் அபிமுகேஸ்வரர் ஆவார். இவர் எதிரில் இருக்கக்கூடிய மகாமக குளத்தை பார்க்கும் வண்ணத்தில் அமர்ந்திருப்பார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9