HT Yatra: மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்

HT Yatra: மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 02, 2024 06:00 AM IST

HT Yatra: எத்தனையோ கோயில்கள் தனித்துவமான வரலாறுகளைக் கொண்டு தமிழ்நாட்டில் விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்.

மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்
மன்னன் உருவாக்கிய பூவனாதர்.. அமர்ந்த அலங்காரத்தில் செண்பகவல்லி.. சாபங்களை போக்கும் சிவபெருமான்

இது போன்ற போட்டோக்கள்

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான கலை அம்சங்கள் கொண்ட எத்தனையோ கோயில்கள் கட்டப்பட்ட சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிதாக எத்தனை கோயில்கள் கட்டினாலும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் போல் கலை அம்சங்களை வேறு எங்கும் காண முடியாது. நாட்டுக்காக தென்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் போரிட்டாலும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

குறிப்பாக சோழர்கள் சிவபெருமானின் முழுமுதற் கடவுளாக வணங்கி வந்துள்ளனர். மன்னர்களுக்கு இடையே மண்ணுக்காக போட்டியிட்டாலும் யார் கோயில் கட்டுவது என்ற போட்டியில் அனைவரும் பல்வேறு விதமான கலையம்சங்கள் கொண்ட கோயில்களில் தமிழ்நாட்டில் கட்டி சென்றுள்ளனர். மாபெரும் மன்னனாக திகழ்ந்து வந்த சோழ மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கலை அம்சத்தின் உச்சமாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகிறது.

இதுபோல எத்தனையோ கோயில்கள் தனித்துவமான வரலாறுகளைக் கொண்டு தமிழ்நாட்டில் விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய அம்பாள் நின்ற காலத்தில் காட்சி கொடுத்து வருகிறார் இவர் செண்பகவல்லி என்று திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார் இந்த திருக்கோயிலில் மட்டும்தான் நின்று கோலத்தில் காட்சி அளிக்கக்கூடிய அம்மனை அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்காரம் செய்கின்றனர்.

குறிப்பாக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அம்பிகை செண்பகவல்லி தாயார் ஏழு அடி உயரத்தில் காட்சி கொடுக்கின்றார். மகிழ்ச்சியான முகத்தோற்றதோடு கிழக்கு பக்கம் நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். இறைவனும் இறைதியும் சேர்ந்து காட்சி கொடுக்கும் ஒரு சில கோயில்களில் இந்த கோவில் தனி சிறப்பு கொண்டுள்ளது.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் பிணி நீக்கம், சுக வாழ்க்கை, குழந்தை பாக்கியம், விவசாய செழிப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மனுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போல இந்த கோயிலிலும் செண்பகவல்லி தாயாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அம்பாளின் சன்னதிக்கு தனி பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது குறிப்பாக நிற்கும் அம்பாளை அமர்ந்திருப்பது போல அலங்காரம் செய்வது மிகவும் சிறப்பாகும். ராமபிரான் வழிபட்ட சிறப்பு மிகுந்த தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

தல வரலாறு

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியார் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற பொழுது வடபக்கம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்துவிட்டது. இதனை சமன் செய்வதற்காக சிவபெருமான் ஆணையிட்டபடி அகத்தியர் பொதிகை மலை நோக்கி பயணம் சென்றார்.

பயணத்தின் பொழுது எதிர்த்து நின்ற அரக்கர்களை அகத்தியர் வதம் செய்த காரணத்தினால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு தனது தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு தனது பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

வெள்ளிமலையில் இருக்கக்கூடிய சிவ குழத்தை சேர்ந்த வாமனன் என்ற மன்னன் நந்தி தேவர் சாபத்தால் வேந்தனாக பிறந்து செண்பக மன்னன் என்ற பெயரோடு வளர்ந்தார். அதற்குப் பிறகு சிவபெருமானின் ஆணைப்படி பூவனாதருக்கு கோயில் அமைத்து சாப நிவர்த்தி பெற்றார். செண்பக மன்னனால் இந்த கோயில் தோற்றுவிக்கப்பட்ட காரணத்தினால் இங்கு வீட்டில் இருக்கக் கூடிய தாயார் செண்பகவல்லி என அழைக்கப்படுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9