HT Yatra: விநாயகர் மடியில் கிருஷ்ணன்.. பக்தனுக்காக இறங்கி வந்த மகாவிஷ்ணு.. மள்ளியூர் மகா கணபதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: விநாயகர் மடியில் கிருஷ்ணன்.. பக்தனுக்காக இறங்கி வந்த மகாவிஷ்ணு.. மள்ளியூர் மகா கணபதி

HT Yatra: விநாயகர் மடியில் கிருஷ்ணன்.. பக்தனுக்காக இறங்கி வந்த மகாவிஷ்ணு.. மள்ளியூர் மகா கணபதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 06:30 AM IST

Malliyoor Maha Ganapathy: விநாயகர் அனைத்து விதமான கோயில்களிலும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். விநாயகர் இருக்கக் கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில். இந்த திருக்கோயில் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்
மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில்

இது போன்ற போட்டோக்கள்

ஏழை எளிய மக்களும் எளிதில் அனுப்பக்கூடிய கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். மரத்தடியில் அமர்ந்து காட்சி கொடுக்கும் விநாயகர் மலை உச்சியிலும் அமர்ந்து காட்சி கொடுப்பார். சிவன் பார்வதி தம்பதியின் மூத்த மகனாக விநாயகர்கள் விளங்கி வருகின்றார்.

எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வணங்கக்கூடிய தெய்வமாக விநாயகர் அமர்ந்திருப்பார். அவரை வணங்கிவிட்டு தான் கருவறையில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்தியாவில் விநாயகருக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது விநாயகர் சதுர்த்தி திருநாளன்று இந்தியாவில் பெரும் திருவிழா நடைபெறும். வட இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி என்று விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அப்படிப்பட்ட விநாயகர் அனைத்து விதமான கோயில்களிலும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். விநாயகர் இருக்கக் கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில். இந்த திருக்கோயில் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

 

இந்த கோயிலில் கர்ப்ப கிரகத்தில் விநாயகர் அமர்ந்திருப்பார் அவரது மடியில் கோகுல கிருஷ்ணன் குழந்தை வடிவத்தில் அமர்ந்திருப்பார் இதுவே இந்த தலத்தின் சிறப்பாகும்.

இந்த கோயிலில் மகாவிஷ்ணு துர்க்கை, சாஸ்தா, நாகர்கள் சன்னதி இங்கு உள்ளது. இங்கு விநாயகரோடு குழந்தை வடிவான கிருஷ்ண பரமாத்மா காட்சி கொடுப்பது மேலும் சிறப்பாகும்.

இந்த கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருமண தடை நீக்குவதற்காக பழமாலை பூஜை நடைபெறுகிறது இது மிகவும் விசேஷமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விநாயகப் பெருமானுக்கு பால் பாயாசம் படைக்கப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிவிட்டால் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருட்களை காணிக்கையாக கொடுக்கின்றனர்.

தல பெருமை

 

விநாயகரோடு கிருஷ்ணன் காட்சியளிக்கின்ற காரணத்தினால் அவரை மகிழ்விக்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நகர விளக்கு காலங்களில் தனியாக அரங்கம் அமைக்கப்பட்ட சங்கீத ஆராதனை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய இசை கலைஞர்கள் இங்கு வந்து பாடி செல்கின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த கோயிலில் சிறப்பாக தடி நைவேத்தியம் நடத்தப்படுகிறது. இது நோயிலிருந்து பக்தர்கள் விடுபடுவதற்காக நடத்தப்படுகிறது.

தல வரலாறு

 

மகா கணபதி கோயிலை தற்போது சங்கரன் நம்பூதிரி நிர்வாகித்து வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இவருடைய 300 ஒருவர் விநாயகரின் விக்கிரகத்தை வைத்து இந்த தலத்தில் பூஜை செய்துள்ளார். அதற்குப் பின்னர் இரண்டு குடும்பங்கள் சேர்ந்து கணபதியைச் சுற்றி கோயில் அமைத்து பராமரித்து வந்துள்ளனர்.

தற்போது முழுமையாக உள்ள இந்த கோயில் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதற்கு முன்னர் இந்த இரண்டு குடும்பங்களும் கஷ்டமான நிலையில் இருந்து வந்துள்ளனர் விநாயகரை பக்தியோடு வழிபட்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

தற்போது நிர்வாகம் செய்து வரும் சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பர் மீது அதீத பக்தி கொண்டவர். இவர்கள் வம்சாவளிகள் கட்டப்பட்ட இந்த கணபதி கோயில் முன்பு எப்போதும் கிருஷ்ணனின் பெருமைகளை பாராயணம் செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

சங்கரன் நம்பூரியின் பக்திக்கு மயங்கி கிருஷ்ண பகவான் கோயிலில் இருக்கக்கூடிய மகா கணபதியின் மடியில் வந்து அமர்ந்து கொண்டார் என கூறப்படுகிறது. விநாயகரின் மடியில் குழந்தை கிருஷ்ணன் அமர்ந்திருப்பதும் விநாயகர் துதிக்கையால் அவரை அரவணைத்திருப்பதும் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

அமைவிடம்

 

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டை மாவட்டத்தில் மள்ளியூர் என்ற ஊரில் இந்த மகா கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வாகனங்கள் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner