தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நடு ஆற்றில் அமர்ந்து சிவபெருமான்.. அகத்தியருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம்.. மணலாக அமர்ந்த நட்டாற்றீஸ்வரர்

HT Yatra: நடு ஆற்றில் அமர்ந்து சிவபெருமான்.. அகத்தியருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம்.. மணலாக அமர்ந்த நட்டாற்றீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 05:50 AM IST

Arulmigu Nattatreeswarar Temple: வரலாறுகளை சுமந்தபடி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில்.

அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில்

குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு என மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் உள்ளது. ராஜா காலத்தில் இருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு என்ன சிறப்பான கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. சிவன் கோயில்களில் உச்சமாக கருதப்படும் தஞ்சை பெரிய கோயில் சோழ சாம்ராஜ்யத்தின் மகாராஜாவாக திகழ்ந்து வந்த ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இன்றுவரை இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக தஞ்சை பெருவுடையார் கோயில் திகழ்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வரலாறுகளை சுமந்தபடி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

இந்த திருக்கோயிலில் சிவபெருமான் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். பஞ்சபூத தலங்களில் இந்த திருத்தலம் மண் தளமாக திகழ்ந்து வருகின்றது. மிகவும் பழமையான கோயிலாக திகழ்ந்துவரும் இந்த திருக்கோயிலில் தலவிருட்சம் அத்திமரம் ஆகும். இந்த மரத்தில் இன்று வரை புதிய கிளைகள் தோன்றுவது கிடையாது அதுவே மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் காணப்படும் முருக பெருமான் தனது வலது காலை முன்பக்கம் வைத்தும் இடது காலை பின்பக்கம் வைத்தும் நடப்பது போல காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் சிவபெருமான காண்பதற்காக அகத்தியர் வந்த பொழுது அவரை வரவேற்பதற்காக முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி கொடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனது இடது கையில் கிளி வைத்திருப்பது போல முருகப்பெருமான் காட்சி கொடுத்த வருகிறார்.

தல வரலாறு

 

வில்வலன், வாதாபி என்ற என்ற இரண்டு அசுரர்கள் உணவு வழியாக மகரிஷிகளின் வயிற்றுக்குள் புகுந்து அவர்களின் வயிரை கிழித்து வெளியே வந்து அவர்களை உணவாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர். இப்படி சாப்பிடும் பழக்கம் கொண்ட இவர்கள் பொதிகை மலை சென்று கொண்டிருந்த அகத்தியரை கண்டுள்ளனர். அவரை சாப்பிட வேண்டும் என இந்த இரண்டு அரசர்களும் முடிவு செய்துள்ளனர்.

மாங்கனி உருவத்தில் வாதாபி சிவனடியாராக உருவெடுத்த வில்வலன் கையில் இருந்தார். சிவனடியாராக சென்ற அசுரன் தென்திசை நோக்கி செல்லக்கூடிய மகரிஷி எங்களது உபசரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாங்கனியை கொடுத்துள்ளார்.

அகத்தியர் மாமுனி அதனை சாப்பிட்டு விட்டார். அப்போது வாதாபியை சிவனடியாராக இருந்த அசுரர் வெளியே அழைத்துள்ளார். இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்ட அகத்தியர் வாதாபி ஜீரணோத்பவ எனக் கூறியுள்ளார். வயிற்றுக்குள்ளேயே வாதாபி ஜீரணம் ஆகி உள்ளார். இதனால் கோபமடைந்த வில்வலன். அகத்தியரை அழிக்க சுய உருவெடுத்தார் அவரையும் அகத்தியர் சம்காரம் செய்துவிட்டார்.

இந்த இரண்டு அசுரர்களை வதம் செய்த காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இந்த தோஷம் நீங்குவதற்காக காவிரி ஆற்றின் நடுவே இருக்கக்கூடிய குஞ்சின் மீது மணலில் லிங்கம் வடித்து பூஜை செய்து வழிபட்டார். இவருடைய வழிபாட்டின் காரணமாக அந்த மணல் லிங்கம் இறுகிப்போனது. அதன் காரணமாகவே இந்த லிங்கமாக காட்சி அளிக்கும் சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என பெயர் பெற்றார்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel