HT Yatra: வேதங்களை எழுதிய மல்லாலர்.. அசுரர்களோடு போராட்டம்.. சங்கை துதிக்கையில் ஏந்திய விநாயகர்-you can know about the history of kanchipuram arulmigu sangupani vinayagar temple - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வேதங்களை எழுதிய மல்லாலர்.. அசுரர்களோடு போராட்டம்.. சங்கை துதிக்கையில் ஏந்திய விநாயகர்

HT Yatra: வேதங்களை எழுதிய மல்லாலர்.. அசுரர்களோடு போராட்டம்.. சங்கை துதிக்கையில் ஏந்திய விநாயகர்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 06:00 AM IST

காஞ்சிபுரம் அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் வரலாறு குறித்து தெரிவித்துக் கொள்ளலாம்.

அருள்மிகு சங்கு பாணி விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு சங்கு பாணி விநாயகர் திருக்கோயில்

மனித உடலையும் யானை முகத்தையும் கொண்ட விநாயகரை வழிபட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பல சிறப்பு மிகுந்த கோயில்களில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் அருள் அளித்து வருகிறார் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்குபாணி விநாயகர் திருக்கோயில்.

தலத்தின் பெருமை

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான விநாயகர் திருக்கோயில்கள் உள்ளன அப்படிப்பட்ட கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக இந்த சங்குபாணி திருக்கோயில் விளங்கி வருகிறது. காஞ்சி மகா பெரியவரின் ஆஸ்த்தான கோயிலாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது. எந்த யாத்திரைக்குச் சென்றாலும் திரும்பி வந்த பிறகு இங்கு வீட்டில் இருக்கக்கூடிய விநாயகருக்கு 108 தேங்காய்கள் உடைப்பதை இவர் வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

தல வரலாறு

 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை இருப்பது அறிந்த ஒன்றாகும் ஒரு முறை இவர்களின் பகை மிகவும் பெரிதாக மாறிவிட்டது. தேவர்கள் தங்களுடைய வேதங்களை ஆத்திரமாக பயன்படுத்தி அசுரர்களின் சக்தியை எடுத்து விட வேண்டும் என நினைத்துள்ளனர்.

அசுரர்களில் பேராற்றல் கொண்டவராக சங்காசுரன் இருந்துள்ளார். இவர் சங்கு வடிவில் இருக்கக்கூடியவர். இவருடைய சகோதரர் கமலாசுரன் அவரைவிட மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்ந்து வந்துள்ளார். பல மடங்கு ஆற்றல் கொண்ட இவர்கள் இருவரும் தேவர்களை கொன்றுவிட்டு பிரம்மதேவரிடமிருந்து வேதங்களை திருட வேண்டும் என நினைத்துள்ளனர்.

பிரம்மதேவரின் வேதங்களை எடுத்து விட்டால் அதனை தேவர்கள் அஸ்திரமாக பயன்படுத்த முடியாது என சங்காசுரன் நினைத்துள்ளார். உடனே சகோதரரான கமலாசூரனை அழைத்து பிரம்மதேவரிடம் இருக்கக்கூடிய வேதங்களை எடுத்து வரும்படி கூறியுள்ளார். பிரம்மதேவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கமலாசுரன் அவருடைய வேதங்களில் எடுத்துக் கொண்டு வந்து தனது சகோதரரிடம் கொடுத்துவிட்டார்.

சங்காசுரன் வேதங்களை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து பாதுகாத்து வந்துள்ளார். படைப்பு தொழிலை செய்ய முடியாமல் பிரம்மதேவர் சிவனிடம் சரணடைந்தார். உடனே சிவபெருமான் இந்த சிக்கலுக்கு விநாயகரை வழிபட்டால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளார்.

உடனே பிரம்மதேவர் தனது தாமரை ஆசனத்தில் அமர்ந்து விநாயகரை வேண்டி வழிபட்டுள்ளார். தவத்தின் மகிமையில் மகிழ்ச்சி அடைந்த விநாயகர் பிரம்ம தேவருக்கு காட்சி கொடுத்துள்ளார். பிரம்மதேவர் சிக்கல்களை விநாயகரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

உடனே விநாயகர் அந்தணராக உருவெடுத்து புதிதாக வேதாகமங்களை உருவாக்கியுள்ளார். ஆயிரம் சீடர்களோடு வந்து அந்த வேதாகமங்களை பிரம்மதேவரிடம் கொடுத்துவிட்டு இவற்றை வைத்து உங்களுடைய பணியை தொடங்குங்கள் என கூறியுள்ளார். நீங்கள் யார் என கேட்டதற்கு அந்தணராக இருந்த விநாயகர் பெருமான் எனது பெயர் மல்லாலர் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அசுரர்களை அழிப்பதற்கு நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த சங்காசுரன் உடனே அவரை அழித்துக் கொன்று விட வேண்டும் என கூறி தனது சகோதரர் கமலாசுரனை அனுப்பி வைத்தார். தனது மாயை பயன்படுத்தி கமலாசுரன் மிகப்பெரிய போரை நடத்தினார். அனைத்து ஆயுதங்களும் மல்லாலர் முன்பு விழுந்து கிடந்தன. எதுவும் செயல்படவில்லை என்ற காரணத்தினால் அங்கிருந்து மறைந்து தனது சகோதரனை சந்திக்க கமலாசுரன் வந்தான்.

கடல் கொடியில் இருக்கக்கூடிய சங்காசுரனை சந்தித்த கமலா சூரனை மீண்டும் நாளை போருக்கு சென்று அவரை அளித்துவிட்டு வேதங்களில் எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளார் சங்காசுரன். அசுரர்களை வெற்றி கொள்வதற்காக மிகப் பெரிய வேள்வியை நடத்தினார் மல்லாலர்.

அப்போது மிகப்பெரிய உருவத்தில் மயில் அகவிய படி வந்தது. போர்க்களத்தில் புகுந்த மல்லாளர் கமலாசுரனை அழித்தார். அதற்குப் பிறகு அவரோடு போராட கடற்கடியில் இருந்த சங்காசுரன் வந்தான். எவ்வளவு போராடியும் அவரை ஜெயிக்க முடியாத காரணத்தினால் சங்கு வடிவம் கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்து கொண்டான் சங்காசுரன்.

அதற்குப் பிறகு மல்லாலராக இருந்த விநாயகர் பெருமான் கடலுக்கடியில் சென்று அசுரனை தேடி அழித்தார். அசுரன் மறைத்து வைத்திருந்த வேதங்களை மீட்டு வந்து மறுபடியும் பிரம்மதேவரிடம் விநாயகர் ஒப்படைத்தார். சங்காசுரனை அளித்த பிறகு சங்காக மாறிய அவரை தனது துதிக்கையில் ஏந்திக்கொண்டார் விநாயகர். அதனால் அவர் சங்குபாணி எனப் பெயர் பெற்றார்.

அமைவிடம்

 

காஞ்சிபுரத்திலிருந்து இந்த சங்குபாணி விநாயகர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் - ஆற்காடு செல்லும் வழியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9